சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிவந்த கண்கள்.. "ரரவிற்கு" எடப்பாடி ஆர்டர்.. "என்னையே பேச கூடாதுன்னு சொல்லிட்டாரே".. கலங்கிய மாஜி

Google Oneindia Tamil News

சென்னை: மாஜி அமைச்சர் ஒருவரை ஊடகங்களில் இப்போதைக்கு பேச வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி வாய்பூட்டு போட்டு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2 நாட்களுக்கு முன்பாக டெல்லி சென்றார். அவரின் டெல்லி பயணம் தமிழ்நாடு அரசியலில் பெரிய அளவில் கவனம் பெற்றது.

அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவும் நிலையில், அதை பற்றி பேசத்தான் அவர் டெல்லி சென்றார் என்று கூறப்பட்டது. அதோடு பிரதமர் மோடியை எடப்பாடி சந்திப்பார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் டெல்லி சென்ற எடப்பாடிக்கு பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் அமித் ஷாவை சந்தித்துவிட்டு தமிழ்நாடு திரும்பிய எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் சில முக்கிய உத்தரவுகளை போட்டு இருக்கிறாராம்.

அதில் ஒரு உத்தரவு பற்றிய தகவல்தான் தற்போது வெளியாகி உள்ளது.

ஓபிஎஸ் கோட்டைக்கு வரும் எடப்பாடி பழனிசாமி.. விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல்.. ஆர்பி உதயகுமார்!ஓபிஎஸ் கோட்டைக்கு வரும் எடப்பாடி பழனிசாமி.. விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல்.. ஆர்பி உதயகுமார்!

அதிமுக

அதிமுக

அதிமுகவில் பல்வேறு உட்கட்சி மோதல்கள் நிலவி வரும் இந்த நிலையில்தான் மாஜி அமைச்சர் ஒருவரை ஊடகங்களில் இப்போதைக்கு பேச வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி வாய்பூட்டு போட்டு இருக்கிறாராம். அந்த மாஜி அமைச்சர் பொதுவாக ஊடகங்களில் அடிக்கடி பேச கூடியவர். கட்சியில் எந்த மோதல் வந்தாலும் எடப்பாடி பக்கம் நின்றார். அதிமுகவில் அவர்தான் அடுத்த பொருளாளர் என்று ஒரு பக்கம் செய்திகள் வந்தன. ஆனால் அது நடக்கவில்லை.

உட்கட்சி மோதல்கள்

உட்கட்சி மோதல்கள்

அவர்தான் எதிர்க்கட்சி துணை தலைவர் என்று கூறப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. அதேபோல் அதிமுகவில் தலைமை கழக செயலாளர் அவர்தான் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. எஸ்பி வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், சீவி சண்முகத்திற்கு கொடுக்கப்பட்ட பதவிகள் எதுவும் அவருக்கு கொடுக்கப்படவில்லை. அதேபோல் ராஜ்ய சபா எம்பி பதவியும் அவருக்கு கிடைக்கவில்லை. இவ்வளவு இருந்தும் அவர் கட்சியை விட்டுக்கொடுக்கவே இல்லை.

எதிர்க்கட்சி துணை தலைவர்

எதிர்க்கட்சி துணை தலைவர்

முக்கியமாக எடப்பாடி பழனிசாமியை விட்டுக்கொடுக்காமல் அவருடன் நெருக்கமாக இருந்தார். அவரை ஆதரித்து தொடர்ந்து பேசி வந்தார். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி தனது டெல்லி பயணத்திற்கு பின்பாக அந்த மாஜியிடம் கொஞ்சம் பேச வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. அவர் பேசிய சில விஷயங்களை டெல்லி விரும்பவில்லை என்கிறார்கள். அதோடு கட்சிக்கு உள்ளேயும் சிலர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

கோபம்

கோபம்

இதன் காரணமாக எடப்பாடி அவரிடம்.. நீங்கள் பேசுவது எல்லாம் ஓகே. ஆனால் கொஞ்ச நாள் பேச வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இந்த தகவல் கேட்டு அந்த மாஜி கண்கள் சிவந்ததாகவும் தெரிகிறது. கட்சிக்காக அவ்வளவு பேசினேன். எனக்கு பதவி தராத போது கூட அவருக்கு ஆதரவாக பேசினேன். ஆனால் இப்போது என்னையே பேச கூடாதுன்னு சொல்லிட்டாரே என்று கோபமாக பேசி இருக்கிறாராம். அப்படி அவர் பேசியது என்னதான் என்ற விவாதம்தான் ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் ஓடிக்கொண்டு இருக்கிறது!

English summary
Did AIADMK Edappadi Palanisamy order an ex minister not to speak to media?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X