அண்ணாமலை அவுட்! ஆனால் எடப்பாடிக்கு சாமர்த்தியம்தான்.. சைலண்ட்டாக செய்த அரசியல் சாணக்கியம்! என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என்று கோவையில் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். புதிய தலைவர் யார் என்றும் நான் கைகாட்ட போவதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார். இது கிட்டத்தட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

annamalai Edappadi Palaniswami

1. அண்ணாமலை மாற்றம் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ள நிலையில்.. இது எடப்பாடி செய்த சாமர்த்திய மூவ் ஆக பார்க்கப்படுகிறது.

2. எடப்பாடி டெல்லி சென்று வந்த பின்பே இதெல்லாம் நடக்கிறது. அவர் டெல்லியில் கூட்டணிக்கு பதிலாக அண்ணாமலையை நீக்க சொல்லி பிரஷர் போட்டாரோ என்ற கேள்வி உள்ளது. அவர் டெல்லி சென்று திரும்பினார்.. அண்ணாமலை பதவிக்கும் அதோடு சிக்கல் வந்தது.

3. கிட்டத்தட்ட எடப்பாடி சைலண்ட்டாக சாமர்த்தியத்தனமாக தனக்கு இடைஞ்சலாக பாஜகவில் இருந்த அண்ணாமலைக்கு செக் வைத்துள்ளார்.

4. எடப்பாடி இதற்கு முன்பே ஓ பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவில் செக் வைத்தார். இப்போது பாஜகவுடன் மீண்டும் நெருங்கி அண்ணாமலைக்கு பெரிய செக் வைத்துவிட்டார்.

5. ஆட்சி சிக்கலாக இருந்த நிலையில் டெல்லி பிரஷரை எதிர்கொண்டு கட்சியை காப்பாற்றி.. ஆட்சியை காப்பாற்றினார்.

6. சசிகலாவை எதிர்கொண்டு.. அவரை மீண்டும் உள்ளே வரவிடாமல் தடுத்து.. கட்சியை தனது கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டார்.

7. 11 தேர்தல்களில் தோற்றாலும் கூட கட்சி தனது பவரை விட்டு போகாமல் பார்த்துக்கொண்டார்.

8. இதையெல்லாம் சாமர்த்தியமாக செய்தவர் தற்போது அண்ணாமலை விவகாரத்திலும் டெல்லிக்கு பிரஷர் போட்டு அண்ணாமலையை மாற்ற காய் நகர்த்தி உள்ளாரோ என்ற கேள்வி உள்ளது. அண்ணாமலை இருந்தால் கூட்டணிக்கு நோ என்று பிரஷர் போட்டு அவரை மாற்ற பிரஷர் கொடுத்துள்ளாரோ என்ற கேள்வி உள்ளது.

9. ஆனால் டெல்லி பாஜக அப்படி எல்லாம் முடிவு எடுக்காது. ஒருவேளை அண்ணாமலையை மாற்ற டெல்லி பாஜகவும் நினைத்திருக்கலாம். எடப்பாடி சொல்லாமலே.. அண்ணாமலையை மாற்ற நினைத்திருக்கலாம்.

10. அண்ணாமலை பதவிக்காலம் ஓவர்.. அவருக்கு வேறு பெரிய பதவி தரலாம் என்று டெல்லி நினைத்திருக்கலாம். எடப்பாடி இதற்கு பின் இல்லாமல் கூட இருக்க வாய்ப்புகள் உள்ளன.

11. இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில்... அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆகப்போவதாகவும் தகவல்கள் வர தொடங்கி உள்ளன. அதாவது கர்நாடகா அல்லது மகாராஷ்டிராவில் இருந்து ராஜ்ய சபா வழியாக இவர் எம்பி ஆகி அமைச்சர் ஆக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

12. தமிழ்நாட்டில் இருந்து இவர் எம்பி ஆக வாய்ப்பு இல்லை. அதற்கு அதிமுக ஆதரவு தேவை. அதனால் அண்ணாமலை தமிழ்நாட்டில் இருந்து அமைச்சராக முடியாது. இதனால் மற்ற மாநிலங்களில் இருந்து இவர் எம்பி ஆகி.. அமைச்சர் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதெல்லாம் இணையத்தில், அரசியல் விமர்சகர்கள் இடையே பரவும் தகவல்கள்தான். இன்னும் உண்மையான அறிவிப்புகள் வரவில்லை.

13. தமிழக பாஜகவில் மாவட்ட தலைவர்கள், மண்டலத் தலைவர்கள் நியமனம் முடிந்த நிலையில், மாநில தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகளை நியமிப்பது மட்டுமே பாக்கி இருக்கிறது. மாநில நிர்வாகிகள் குறித்த பட்டியல் கட்சியின் தேசிய தலைமைக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

14. இப்படிப்பட்ட நிலையில்தான் அண்ணாமலை மாற்றப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக பாஜகவின் மாநில தலைவர் தேர்தல் நடக்க போவதாக சொல்கிறார்கள். அண்ணாமலை மாநில தலைவராக பதவி ஏற்ற காலத்தில் இருந்தே அவர் மாற்றப்பட போவதாக பலர் எதிர்பார்க்கிறார்கள். யாராவது டெல்லி சென்றால் அண்ணாமலை மாற்றப்படுகிறார் என்று பேச்சு வரும். அண்ணாமலை லண்டனுக்கு சென்ற போது இதேபோல் செய்திகள் வந்தன.

15. எச். ராஜா தலைமையில் குழு அமைந்த போதும் இதேபோல் செய்திகள் வந்தன. இப்போது தமிழக பாஜகவின் மாநில தலைவர் தேர்தல் நடக்க போவதாக சொல்கிறார்கள். உடனே அண்ணாமலையை மாற்ற போவதாக செய்திகள் வருகின்றன. ஆனால் உண்மையில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அண்ணாமலையை மாற்ற வாய்ப்பு குறைவு. ஏனென்றால் அவரை வைத்தே கட்சி திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. ஒரு வருடத்தில் தேர்தலை வைத்துக்கொண்டு அவரை மாற்றுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளன என்றும் இன்னொரு விதமான வாதங்கள் வைக்கப்படுகின்றன.

16. 2023ல் அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை..பாஜக தமிழக தலைவர் பதவியில் இருந்து விலகலாம் என கட்சிக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை இருந்தால் கூட்டணி அமைவது கஷ்டம் என்று டெல்லி இந்த முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலையின் சமீபத்திய பேட்டிகளும் கூட இதை உணர்த்துவதாகவே இருக்கின்றன. இன்னும் 2 வாரங்களில் நான் சாதாரண ஆளாக இருக்கலாம் என்றும் கூட அண்ணாமலை இக்கு வைத்து பேசி உள்ளார்.

17. 2026 மாநிலத் தேர்தலில் கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றால் கூட்டணி நெருக்கமாக இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் முகமும் கவுண்டர் ஜாதியாக இருப்பதை பாஜக விரும்பவில்லை. எடப்பாடி அண்ணாமலை ஒரே ஜாதி. அதுவே பாஜகவிற்கு வேறு ஜாதியை சேர்ந்தவர் தலைவராக இருந்தால் அது கூட்டணிக்கு இன்னும் வலு சேர்க்கும். முக்கியமாக தென் மண்டலத்தில் கூட்டணிக்கு பலம் தரும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு அண்ணாமலையை மாற்ற ஒரு ஆலோசனை நடக்கிறதாம். இதன் காரணமாகவே நயினார் நாகேந்திரனை தலைவராக்க டெல்லி ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

18. சமீபத்தில் நடந்த சந்திப்பில் அமித் ஷா எடப்பாடியிடம் மிகவும் சகஜமாக பேசி உள்ளார். கூட்டணி உடைந்த கோபம், அதிமுக - பாஜக இடையே உள்ள மோதலை எல்லாம் காட்டிக்கொள்ளாமல் இயல்பாக பேசி உள்ளார். ஆனால் அதே சமயம் சில விஷயங்களை அடித்து சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி மட்டுமே திமுக கூட்டணியை வீழ்த்தும். வேறு கூட்டணிக்கு அரித்மேட்டிக் வாய்ப்புகள் கிடையாது. வேறு கூட்டணியால் எதுவும் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் திமுகவின் வெற்றி சதவிகிதம் பல தொகுதிகளில் குறைவுதான். பாஜக வாக்கு சதவிகிதம்தான் பல இடங்களில் திமுக வெற்றிக்கு காரணம். அதிமுக - பாஜக சேர்ந்து இருந்தால் திமுகவை பல தொகுதிகளில் வெல்ல விடாமல் தடுத்து இருக்கலாம். போனது போகட்டும்.. 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டும். நமக்கு இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. சில பதவிகள், சில தலைவர்கள் தொடர்பாக நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அதெல்லாம் நமது கூட்டணியில் எதிராக வரக்கூடாது. நம்முடைய இலக்கு.. சபதம் ஒன்றாகவே இருக்க வேண்டும். அது வெல்வது.

19. நமது கூட்டணியின் நோக்கம் ஒன்றாகவே இருக்க வேண்டும். அது 2026ல் திமுகவை வீழ்த்துவது. அதுதான் நமது நோக்கம் மற்றும் கூட்டணியின் அடிப்படையாக இருக்க வேண்டும். என்ன விலை கொடுத்தாவது திமுக ஆட்சியை 2026 சட்டமன்ற தேர்தலில் அகற்றுவதுதான் நமது குறிக்கோள். அதற்க்கு ஏற்றபடி கூட்டணி அமைக்க வேண்டும் என்று இதில் பேசியதாக தெரிகிறது. இந்த முறை பாஜக கிட்டத்தட்ட 100+ இடங்களை கூட்டணியில் பெற உள்ளதாம். ஆம்.. அதாவது 100+ இடங்களை பெற்றுவிட்டு அதில் சிலவற்றை தனது கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம். அதாவது அதிமுக சில இடங்களை கூட்டணி கட்சிக்கு கொடுத்தால்.. பாஜகவும் கூடுதல் இடங்களை வாங்கி அதை டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறதாம்.

20 . அதாவது கூட்டணியிலேயே உள் கூட்டணி கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் எடப்பாடியிடம் தினகரன், ஓ பன்னீர்செல்வத்தை சேருங்கள் என்ற கோரிக்கையை பாஜக வைக்க வேண்டியது இருக்காது என்கிறார்கள். இதில்தான் முக்கியமான அமித் ஷா பேப்பர் ஒன்றை எடப்பாடி கையில் கொடுத்துள்ளார். அதில் தேமுதிக, பாமக, புதிய தமிழகம் தொடங்கி இன்னும் சில உதிரி கட்சிகள் என்று பெரிய கூட்டணி லிஸ்ட் இருந்துள்ளது. இந்த லிஸ்டில் நாம் தமிழர் பெயரும் இருந்துள்ளது. இவர்களுடன் நாம் கூட்டணியை உறுதி செய்ய வேண்டும். அதற்கான பணிகளை நாங்கள் செய்கிறோம். இவர்கள் யாருடனும் மோதல் மட்டும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அமித் ஷா கூறி உள்ளாராம்.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+