எல்லா பக்கமும் "கேட்" போட்ட திமுக.. அண்ணாமலையை சென்னையிலே "நடக்க" விடாம செய்துட்டாங்களே? அசராத பாஜக
சென்னை: பாஜக தேசிய தலைவர் நட்டா சென்னைக்கு வரப்போகிறார்.. இதுகுறித்த பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
தமிழக பாஜகவை பொறுத்தவரை, அளவுக்கு அதிகமாகவே வரப்போகும் தேர்தலில் முனைப்பு காட்டி வருகிறது.. மிகப்பெரிய அணியாக அமைத்து தேர்தலை எதிர்கொள்ளவும் திட்டமிட்டு வருகிறது.

பேச்சுவார்த்தை: அந்தவகையில், சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தையையும் நடத்தி வருவதாக தெரிகிறது.. இதில் தெற்கு மாவட்டங்களில் கூடுதல் கவனத்தை செலுத்தி, அங்கு வாக்கு வங்கியை அதிகப்படுத்தும் வேலையிலும் இறங்கியிருக்கிறது. எனவே, நாடாளுமன்ற தேர்தல் குறித்து தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசிக்க 11-ந்தேதி சென்னைக்கு ஜே.பி.நட்டா வருவது உறுதியாகியிருக்கிறது.
சென்னை வரும் நட்டா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், எல்.முருகன், கேசவ விநாயகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்க இருக்கிறார்.
பொதுக்கூட்டம் : மேலும், அன்றைய தினமே சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் நட்டா பங்கேற்று பேசப்போவதாகவும், பொதுக்கூட்டம் நடத்துவதற்காக, ஒய்எம்சிஏ மைதானம் உட்பட 3 இடங்களை தேர்வு செய்து வைத்திருப்பதாகவும், விரைவில் அதில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பொதுக்கூட்டத்துக்கான பணிகளை தொடங்க இருப்பதாக பாஜக நிர்வாகிகள் 2 நாட்களுக்கு முன்பே சொல்லியிருந்தனர்.
இப்போது, நட்டாவின் புரோக்கிராம் குறித்த தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.. அதாவது, நிர்வாகிகளுடான ஆலோசனைக் கூட்டத்தை கமலாலயத்தில் வைத்துக் கொள்ளலாமா? என மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியின் மாநில நிர்வாகிகளிடம் விவாதித்துள்ளார்.
கமலாலயம்: தலா 100 பேர் என 39 நாடாளுமன்ற தொகுதிகளில் இருந்தும் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் அழைக்கப்பட்டிருப்பதால், அதன்படி சுமார் 4,000 பேர் அமரும் வகையில் கமலாலயத்தில் இடவசதி போதாது என யோசித்தனர். இதனையடுத்து, சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டத்தை வைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி விவகாரங்கள், தமிழக பாஜகவின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்களைப் பேசுவதுடன், மேலிடம் முடிவு செய்துள்ள சில செயல் திட்டங்களையும் விவரிக்கவிருக்கிறாராம் நட்டா.
அனுமதி மறுப்பு: முன்னதாக, நிர்வாகிகளுடன் ஆலோசனை முடிந்ததும், நட்டாவும் அண்ணாமலையும் சேர்ந்து சென்னையில் நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டதாம்.. எனவே, அதற்கான போலீஸ் அனுமதியும் கோரப்பட்டுள்ளது.. ஆனால், சென்னை போலீசார் இதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார்களாம்.
சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளிக்கூட வளாகத்தில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதிக் கேட்டிருக்கிறார் அண்ணாமலை. இதற்கு மட்டும் அனுமதி தந்திருக்கிறது போலீஸ்.
தனது நடைப்பயணத்தை சென்னையில் நிறைவு செய்ய தீர்மானித்திருந்தார் அண்ணாமலை. ஆனால், சென்னையில் அடங்கியுள்ள 22 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைப்பயணத்துக்கு சென்னை போலீசார் அனுமதி தர மறுத்து விட்டனர். பொதுக்கூட்டம் நடத்தப்பட்டால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லையாம்.
எனினும், திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நடைபயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக அனுமதி கேட்டு சென்னை மாநகர போலீசில் முறைப்படி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
திட்டம் இதுதான்: இதனால், தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலையால், சென்னை தொகுதிகளுக்குள் நடக்க முடியாமல் செய்து விட்டது திமுக அரசு என்கிறார்கள். இதுகுறித்து, சென்னையில் உள்ள எம்எல்ஏ தொகுதி பொறுப்பாளர்களை தொகுதிவாரியாக அழைத்து அரங்க மீட்டிங்காக நடத்த திட்டமிட்டுள்ளாராம் அண்ணாமலை.. சென்னையில் மட்டும் நடைபயண அனுமதி கிடைத்துவிட்டால், அதன்மூலம் ஆதரவுகள் பெருகும் என்றும் நினைக்கிறாராம்.. பொறுத்திருந்து பார்ப்போம்
-
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications