தேங்காய் சிதறுது.. மோடி இங்கியே பாய் போட்டு படுத்தாலும்.. பாலகிருஷ்ணன் ஒரே போடு.. செம கடுப்பான பாஜக
சென்னை: "பிரதமர் மோடி, ஏன் இங்கேயே அடிக்கடி வருகிறார்? தமிழ்நாட்டிலேயே பாய் போட்டு படுத்தாலும்கூட, பாஜவால் டெபாசிட் கூட வாங்க முடியாது" என்று சிபிஎம் பாலகிருஷ்ணன் விமர்சித்திருக்கிறர்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு "கடமை கண்ணியம் கட்டுப்பாடு, கண்டது முதல்வரின் தமிழ்நாடு" என்கிற தலைப்பில் கொளத்தூர் அகரம் சந்திப்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

சிறப்பு விருந்தினர்கள்: அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக முதன்மைசெயலாளர் துரை வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணன் பேசியதாவது:
"ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் பக்கமே வராத மோடி, இப்போது அடிக்கடி வந்து கொண்டிருக்கிறார்.. அவர் இங்கே, பாய் போட்டு படுத்தாலும் பாஜவால் டெபாசிட் கூட வாங்க முடியாது. தமிழகத்தில் திமுக கூட்டணி கம்பீரமாக உள்ளது. அதிமுக மற்றும் பாஜ கூட்டணி கோயிலில் உடைக்கும் சிதறு தேங்காய் போல் உள்ளது. பாஜக அதிமுக கூட்டணியில் தரகு வேலை நடந்து கொண்டிருக்கிறது..
விஜயபாஸ்கர்: போதைப்பொருளை எதிர்த்து அதிமுக மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால் சட்டமன்றத்தில் குட்கா ஊழல் பிரச்னை வந்தபோது யார் ஆட்சி நடந்து வந்தது? அதன் மீது சிபிஐ விசாரணை நடந்து, இப்போது வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் விஜயபாஸ்கர் தான், முதல் நபராக இருக்கிறார்.. போதைப்பொருள் கிடைக்க அடிப்படை காரணம் மோடி அரசுதான் என்று அண்ணாமலைக்கு தெரியுமா?
இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்களை குடியுரிமை அற்றவர்களாக மாற்றும் முயற்சி தான் குடியுரிமை திருத்த சட்டம் அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமரே ராமர் கோயில் பிரதிஷ்டையில் ஈடுபட்டால், இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று எவ்வாறு எடுத்துக்கொள்வது?" என்றார் பாலகிருஷ்ணன்.
துரை வைகோ: இதற்கு பிறகு துரை வைகோ பேசும்போது, "தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க ஒன்றிய அரசு பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது. ஜாபர் சாதிக் விவகாரத்தில் அதிமுக, பாஜக பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதப்பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார். இன்றைய நாட்டின் சூழல் மதவாத சக்திகள் தமிழகத்தில் வளரும் சூழ்நிலை வந்துள்ளது. இதை நாம் அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் மூலம் சிறுபான்மை மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படபோகிறது. பன்முக தன்மை கொண்ட இந்தியாவை காக்க வேண்டியது நம்முடைய ஒவ்வொருரின் கடமை" என்றார்.
வலுவான கூட்டணி: மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: ஒரு அரசாங்கம் மதச்சார்பற்ற எண்ணத்தில் இருக்க வேண்டும். பிரதமர் பூச்சாண்டி வேலை காட்டிக்கொண்டிருக்கிறார்.
அதிமுக, பாஜ கூட்டணியை போல இல்லாமல் தமிழகத்தில் திமுக கூட்டணி மிகவும் வலுவான கூட்டணியாக இருந்து வருகிறது. ஒரே தராசில் ஒரு பக்கத்தில் பாஜ கூட்டணி கட்சிகளும், மற்றொரு பக்கத்தில் திமுகவுடனான இந்தியா கூட்டணி கட்சிகளும் வைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இதில் திமுக கூட்டணி கட்சியான இந்தியா கூட்டணி கட்சி வெற்றி பெறும். ஏனெனில் நெடுங்காலமாக திமுக உடனான கூட்டணி மிகவும் சுமுகமான முறையில் தமிழ்நாடு முதல்வரால் கொண்டு செல்லப்பட்டு வருகிறது" என்றார்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications