எம்மா நீதான் முதல்வரா வரணும்.. கனிமொழிக்கு எடப்பாடி தகவல் அனுப்பினாரா? என்னங்க சொல்றீங்க?
சென்னை: கனிமொழிக்கும் எடப்பாடி பழனிசாமி தகவல் அனுப்பிட்டாரு. எம்மா.. நீதான் எதிர்காலத்தில் முதல்வர் ஆகணும்.. உனக்கு எதிரா நான் பெரிய வேட்பாளரை போடலை. கவுன்சிலர் வேலுமணியை டம்மி வேட்பாளராக போட்டுள்ளேன் என்று எடப்பாடி தகவல் அனுப்பியதாக மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின் மீண்டும் உட்கட்சி மோதல் வெடிப்பதற்கான அறிகுறிகள் ஏற்பட தொடங்கி உள்ளன. அந்த கட்சியில் லோக்சபா தேர்தல் முடிந்து என்ன நடக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

விசிக, மதிமுகவிற்கு எதிராக டம்மி வேட்பாளர்களை போட்டு எடப்பாடி சிக்னல் கொடுத்துள்ளார். எங்கள் கூட்டணிக்கு எதிர்காலத்தில் வந்துவிடுங்கள் என்று எடப்பாடி அழைத்து இருக்கிறார். எங்கள் அணிக்கு வந்துவிடுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். திருமாவளவனுக்கு எடப்பாடி மெசேஜ் அனுப்பிட்டார். துறை வைகோவிற்கு எடப்பாடி மெசேஜ் அனுப்பிட்டாரு. கனிமொழிக்கும் எடப்பாடி பழனிசாமி தகவல் அனுப்பிட்டாரு.
எம்மா.. நீதான் முதல்வர் ஆகணும்.. உனக்கு எதிரா நான் பெரிய வேட்பாளரை போடலை. கவுன்சிலர் வேலுமணியை போட்டுள்ளேன். திமுக உன் கைக்கு வர வேண்டும். ஸ்டாலின் - கனிமொழி இடையே எடப்பாடி சிண்டு முடித்துள்ளார். எடப்பாடி மட்டும்தான் இதை செய்ய முடியும். எடப்பாடி ராஜதந்திரி. அவர் இந்த தேர்தலில் பல வேலைகளை பார்த்து இருக்கிறார். நீங்கள் எதிர்பார்க்காத பல வேலைகளை செய்துள்ளார்.
ராஜதந்திரமாக் செயல்பட்டு உள்ளார். திமுக உள்ளேயே வேறு யாரால் சிண்டு முடிக்க முடியும். மேலே இருந்து எம்ஜிஆர் - ஜெயலலிதாவின் ஆசிர்வாதம் அவருக்கு கிடைத்துள்ளது. என்ன நடந்தாலும் எடப்பாடி இமேஜ் சரியாது. அவரின் இமேஜ் நீடிக்கும். எடப்பாடியால்தான் இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தி கட்சியை காக்க முடிந்தது. அவரால்தான் கட்சியை பாஜகவை எதிர்த்து காத்துக்கொள்ள முடிந்தது. பாஜகவை சமாளித்து, சசிகலாவை சமாளித்து, ஓ பன்னீர்செல்வத்தை சமாளித்து கட்சியை எடப்பாடி காத்தார்.
முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிமுகவில் இருந்து சென்றுவிட்டது. எடப்பாடி பழனிசாமி காரணமாக இப்படி நடந்துள்ளது. அதேபோல் கொங்கில் குறிப்பிட்ட பிரிவினர் வாக்கு வங்கியை அண்ணாமலை வாங்கி உள்ளார். முக்குலதோர் வாக்கு வங்கியை மொத்தமாக ஓபிஎஸ், டிடிவி தினகரன் உடைத்துவிட்டனர். இதனால் அந்த வாக்கு அதிமுகவை விட்டு சென்றுவிட்டது. முக்குலத்தோர் வாக்குகள் காரணமாக எடப்பாடி பழனிசாமி அப்செட்டில் இருக்கிறார். அவர் கடுமையான வருத்தத்தில் இருக்கிறார்.
மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொங்கு பெல்ட் டீம் உருவாகிக்கொண்டு இருக்கிறது. இவர்கள் நம்மை பிளாக் மெயில் செய்கிறார்கள் என்று எடப்பாடி நினைக்கிறார். ஈரோடு வேட்பாளர் ஆற்றல் அசோக்கிற்கு சீட் கொடுக்க கூடாது என்று தங்கமணி நினைக்கிறார். ஆனால் அதை எடப்பாடி கேட்கவில்லை. வேண்டும் என்று தங்கமணி எதிர்க்கிறார். ஆனால் எடப்பாடி கேட்காமல் இப்படி செய்கிறார்.
தங்கமணியை காலி செய்ய ஆற்றலை எடப்பாடி இறக்குகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் எடப்பாடி புதிய ஆட்களை கொண்டு வருகிறார். அப்படி ஒரு ஆள் எடப்பாடி. நல்ல அரசியல் தெரிந்தவர். சசிகலாவையே வீழ்த்தியவர் அவர். அதிமுகவையே கூவத்தூரில் ஏலத்திற்கு எடுத்தவர் அவர். இப்போது கூட இருக்கும் பழைய தலைகளை காலி செய்வதற்காக எடப்பாடி புதிய தலைகளை மாவட்டத்திற்கு மாவட்டம் இறக்க பார்க்கிறார், என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications