"ராகு காலம்" முடிந்து பதவியேற்ற " பெரியார் பேரன்".. காரை எடுத்து, முதல்ல யார்கிட்ட ஓடினார்னு பாருங்க
ஈவிகேஎஸ் இளங்கோவன் ராகு காலம் முடிந்ததுமே நேற்றைய தினம் தன்னுடைய பதவியை ஏற்றுக் கொண்டார்
சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவனின் பதவியேற்பு விழா, நேற்றைய தினம் சிறப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், காங்கிரஸ் கூடாரமே படுஹேப்பியாக காணப்படுகிறது.. இதனிடையே, இந்த பதவியேற்பு தொடர்பான சில விஷயங்களும் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன..
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக - காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளரும், மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் அபார வெற்றி பெற்றார்..
அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 66,233 வாக்குகள் அதிகம் பெற்றார் ஈவிகேஎஸ்.. இதற்கு முன்பு இப்படி ஒரு வெற்றியை காங்கிரஸ் கண்டதில்லை.. ஈரோடு தொகுதியில் இப்படி வாக்கு வித்தியாசத்தையும் எந்த தேர்தலிலும் பெற்றதுமில்லை.

அப்பாவு அப்பாவு
தேர்தல் ஆணையத்திடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட ஈவிகேஎஸ், நேற்றைய தினம் அதிகாரப்பூர்வமாக சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.. பொறுப்பேற்பதற்கு முன்பாக, சட்டப்பேரவையில் உள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ரூமுக்குள் நுழைந்தார் ஈவிகேஎஸ்.. அங்கேயிருந்த அவரது மகன் திருமகன் ஈவேரா போட்டோவுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்... அதற்கு பிறகு, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தன்னுடைய அறையில், சபாநாயகர் அப்பாவு, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

மெகா லீடர்கள்
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கே.எஸ் அழகிரி, செல்வப்பெருந்தகை, மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.. 1984ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார்... அதற்கு பிறகு, இப்போதுதான் 2வது முறையாக 1984-ம் ஆண்டுக்குப் பின்னர் 2-வது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 38 வருடங்களுக்கு பிறகு, மறுபடியும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளார்..

போஸ்டிங்
அதுமட்டுமல்ல, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இப்போது செல்வப் பெருந்தகை பதவி வகித்து வரும் நிலையில், மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அந்த பதவி வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் தரப்பு படுகுஷியில் காணப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், இந்த பதவியேற்பு தொடர்பாக மேலும் சில தகவல்கள் நம் ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.. அதாவது, ஈவிகேஎஸ் 11:30-க்கு பதவியேற்பார் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக காலை 11:30 மணிக்கே தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வந்துவிட்டனர்..

கிரேட் மீட்டிங்
அதேபோல, இளங்கோவனும், 11.45-க்கு வந்துவிட்டார்.. ஆனாலும், 12 மணிக்குத்தான் பதவியேற்றுக் கொண்டாராம் இளங்கோவன். அதாவது, ராகுகாலம் முடிந்தே பதவியேற்றுக் கொண்டுள்ளார்.. அதன்பிறகே, முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைவரும் இளங்கோவனுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 12 மணிக்கு துவங்கிய விழா 12.30 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்வு முடிந்ததுமே, தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்ட ஈவிகேஎஸ், முதல்வேலையாக, நடிகர் கமல்ஹாசனை நேரில் சென்று சந்தித்துள்ளார்.. இளங்கோவனுக்கு கமல் வாழ்த்து சொல்ல, அவருக்கு தன்னுடைய மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார் இளங்கோவன்.

ஹேப்பி கமல்
இவர்களின் இந்த சந்திப்பு கிட்டத்தட்ட 30 நிமிடம் நடந்துள்ளது. அப்போது, "திமுக-காங்கிரஸ் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக நீங்கள் இணைந்து விடலாமே?" என்று இளங்கோவன் கேட்க, "காலங்கள் இருக்கிறதே.. பார்க்கலாம்" என்று பொதுவாக சொல்லியிருக்கிறார் கமல். அதற்கு பிறகு, நாடாளுமன்ற தேர்தல் குறித்து இவர்களின் பேச்சு திரும்பியுள்ளது... அப்போது, எதிர்க்கட்சிகளின் வலிமை ஓரணியில் இணையாவிட்டால் பாஜகவை ஆட்சியிலிருந்து இறக்குவது கடினம் என்று, தம்மிடம் விவாதிக்கும் அரசியல் விமர்சகர்கள் சொல்வதாக சொல்லியிருக்கிறார் கமல்.. உடனே இதைக்கேட்ட இளங்கோவனும், கமல் கருத்தை ஆமோதித்தாராம்.

இணக்கம் - நெருக்கம்
முன்னதாக, இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே, கமல், இளங்கோவனுக்கு ஆதரித்து தந்து, பிரச்சாரமும் செய்திருந்தார். "மதவாதத்திற்கு எதிராக ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம்" என்று சீறியிருந்தார் கமல்.. சமீபகாலமாகவே காங்கிரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்துவரும் நிலையில், விரைவில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க போவதாக சலசலக்கப்பட்டு வருகிறது.. ராகுல்காந்திக்கு நேரடியாக டெல்லி சென்று ஆதரவு தந்திருந்த நிலையில், கமலின் கூட்டணி கணக்கு அப்போது வகுக்கப்பட்டதாக தெரிகிறது. காங்கிரஸ் மூலம் அமையும் கூட்டணி, பாஜகவுக்கு மாற்றாகவும் இருக்கும் என்றும் கமல் நம்புகிறாராம்..

கிங்மேக்கர் கமல்
மேலும், கொள்கை ரீதியாக பாஜகவுடன் கூட்டு வைக்க முடியாது என்பதால்தான் காங்கிரசுடன் கை கோர்க்க கமல் முடிவு செய்துள்ளாராம்.. காங்கிரஸ் கட்சியுடன் இணையும் நேரம், அக்கட்சி பயணிக்கும் கூட்டணியுடன் கமலும் இணைந்து எம்பி தேர்தலை சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏராளமாக உள்ளதாகவும் கூறுகிறார்கள்.. எப்படிப்பார்த்தாலும், கமலின் வருகை, காங்கிரசுக்கு பலம் தரும் என்று கதர் தலைவர்களும் எதிர்பார்ப்பதாகவே தெரிகிறது.. அந்தவகையில்தான், நேற்றைய இரு தலைவர்களின் சந்திப்பும், அந்த சந்திப்பின்போது, கமலுக்கு இளங்கோவன் விடுத்ததாக கூறப்படும் 'அழைப்பும்' மிகுந்த முக்கியத்துவத்துடன் பார்க்கப்பட்டு வருகிறது...!!
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications