Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கட்டிலுக்கு அடியில், நீ பத்தினியா".. வீடியோவில் சிரித்தபடியே தூக்கில் தொங்கிய பெண்.. குலுங்கிய குமரி

வீடியோகாலில் சிரித்தபடியே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் இளம்பெண் ஒருவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடியாகாலில், சிரித்து கொண்டே மனைவி தூக்கில் தொங்கிய சம்பவத்தின் அதிர்ச்சி கன்னியாகுமரியில் இன்னும் அகலாமல் உள்ளது. இதுகுறித்து 2 நாட்களாகவே, அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த நிலையில், போலீசார் தரப்பில், உண்மை காரணம் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானபாக்கியபாய்.. 33 வயதாகிறது.. இவர் கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவரது கணவர் செந்தில்.. சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.. இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்களாகின்றன.. காதல் திருமணம்.. உயிருக்கு உயிராக விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டனர். இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

 லவ் மேரேஜ்

லவ் மேரேஜ்

செந்தில், ஞானபாக்கியபாய் இருவருமே வேலைக்கு சென்றுவிடுவதால், இரவு நேரத்தில்தான் போனில் பேசுவார்கள்.. தினமும் வீடியோ காலில் பேசுவது செந்திலின் வழக்கம்.. அப்படித்தான், சம்பவத்தன்று இரவு மனைவிக்கு போன் செய்துள்ளார்.. குழந்தைகளைத் தூங்கவைத்துவிட்டு செந்திலுடன் ஞானபாக்கியபாய் வாட்ஸ்அப்பில் வீடியோ காலில் பேசியிருக்கிறார்.. பேசிக் கொண்டிருக்கும்போதே 2 பேருக்கும் பிரச்சனை வந்துள்ளது.. அதையடுத்து, கணவர் வாட்ஸ்அப் வீடியோ காலிலிருக்கும்போதே ஞானபாக்கியபாய் தூக்கு மாட்டிக் கொண்டார்.

 வீடியோ கால்

வீடியோ கால்

இதை வீடியோவில் பார்த்து பதறிப்போன செந்தில், உடனடியாக சொந்தக்காரர்களுக்க போன் மூலம் தகவல் சொல்லி உள்ளார்.. உறவினர்களும் வீட்டுக்குச்சென்று கதவை உடைத்து கொண்டு பார்த்தனர்.. ஆனால், ஞானபாக்கியபாய் சடலமாய் தொங்கிக்கொண்டிருந்தார்... சிரித்து கொண்டே சடலத்தில் தொங்கியதை கண்டு அனைவருமே அதிர்ந்து போய்விட்டனர்.. இதையடுத்து போலீசுக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து ஞானபாக்கியபாயின் உடலை மீட்டு, போஸ்ட் மார்ட்டத்துகுகு அனுப்பி வைத்தனர்.. பிறகு, வழக்கும் பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.

 பெட்ரூம்

பெட்ரூம்

இந்த மரணம் குறித்து முதல்கட்ட தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.. மனைவி மீது செந்திலுக்கு அடிக்கடி சந்தேகம் வருமாம்.. இது தொடர்பாகவே இருவருக்குள்ளும் நிறைய முறை தகராறு வந்துள்ளது.. சம்பவத்தன்று வீடியோ காலில் பேசும்போது, குழந்தைகள் தூங்கிவிட்டிருந்தனர்.. அப்போது மனைவியின் பின்னால் யாரோ மறைந்திருப்பதாக செந்திலுக்கு சந்தேகம் வந்துள்ளது.. அதனால், வீடியோ கேமரா, பெட்ரூம் முழுக்க தெரியுமாறு சுற்றிலும் காண்பிக்க சொல்லி உள்ளார்..

பெட்ரூம்

பெட்ரூம்

உடனடியாக மனைவியும் பெட்ரூம் முழுக்க கேமராவை காட்டி உள்ளார்.. அப்போதும் செந்திலுக்கு சந்தேகம் தீராத செந்தில் மனைவியிடம் செல்போன் கேமராவை, கட்டிலுக்கு அடியில் திருப்பி காண்பிக்குமாறு சொல்லி தகராறு செய்தாராம்.. இப்படி சந்தேகம் எல்லைமீறி போனதால், ஞானபாக்கியபாய் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து போலீஸ், தரப்பில் சொல்லப்படுவதாவது:

 வீடியோ கால்

வீடியோ கால்

தம்பதி இருவரும் வீடியோ கால்பேசும்போது, அடிக்கடி இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.. அடிக்கடி தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் ஞானபாக்கியபாய் சொல்லி வந்திருக்கிறார்.. சம்பவத்தன்றும் அப்படித்தான் சொல்லி உள்ளார்.. திடீரென கணவர் வீடியோ காலில் இருக்கும்போதே, ஃபேனில் புடவையை கட்டிவிட்டு, குழந்தைகள் உட்காரும் சேரில் நின்றுகொண்டு, சிரித்தபடியே கழுத்தில் சேலையை சுற்றியிருக்கிறார்... அப்போது திடீரென சேர் ஸ்லிப்பாகிவிட்டது..

 ஸ்லிப் ஆன சேர்

ஸ்லிப் ஆன சேர்

கழுத்திலும் சேலையின் முடிச்சுகள் எதுவும் போடப்படவில்லை.. ஞானபாக்கியபாய் ஃபேனில் ஒரு இறக்கையில் சேலையை கட்டியிருக்கிறார்.. ஆனால், கழுத்தில் முடிச்சு போடாமல் சேலை சுற்றிவைக்கப்பட்டிருந்தது. சேர் திடீரென ஸ்லிப் ஆகிவிட்டதால், தூங்கில் தொங்கி துடிதுடித்து இறந்துள்ளார்.. இதை வீடியோ காலில் பார்த்துக்கொண்டிருந்த செந்தில் உடனடியாக உறவினர்களுக்கு போனில் தகவல் சொல்லவும், அவர்களும் கதவை உடைத்து அவரைக் காப்பாற்ற முயன்றிருக்கின்றனர்... ஆனால் அவர் இறந்துவிட்டார்..

 பத்தினியா?

பத்தினியா?

இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.. மனைவி இறந்ததையடுத்து சிங்கப்பூரிலிருந்து அவர் கணவர் செந்தில் ஊருக்கு வந்திருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்திவருகிறோம்" என்கிறார்கள்.. நீ பத்தினியா? பத்தினி என்பதை நிரூபித்து காட்டு என்று கணவன் டார்ச்சர் செய்ததாலேயே மனைவி தூக்கிட்டதாக தகவல்கள் பரபரத்து வந்த நிலையில், கணவனிடம் சண்டைபோட்டுவிட்டு, விளையாட்டாக தூக்குப்போட்டதால்தான் இளம்பெண் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது..!

கட்டிலுக்கு அடியில்..

கட்டிலுக்கு அடியில்..

இதனிடையே இன்னொரு தகவலும் இந்த சம்பவ பற்றி வெளியாகி உள்ளது.. சம்பவத்தன்று தம்பதிக்குள் பண தகராறு ஏற்பட்டுள்ளது.. பணத்தை பேங்கில் போடுவதா? அல்லது நிலம் வாங்கி போடுவதா? என்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.. இது சம்பந்தமான வாதங்கள் நடந்து கொண்டிருந்தபோதுதான், மனைவிக்கு பின்னால் யாரோ மறைந்து கொண்டு நின்று, சைகை செய்வதாக செந்திலுக்கு தோன்றியுள்ளது.. பண விவகாரத்தில் குறுக்கே நுழைவது யார் என்ற ஆத்திரத்தில்தான், கட்டிலுக்கு அடியில் மற்றும் பெட்ரூம் முழுக்க வீடியோவை காண்பிக்க சொன்னாராம் செந்தில்..

வீடியோ கால்

வீடியோ கால்

கட்டிலுக்கு அடியில் யாருமே இல்லை, பாருங்க என்று வீடியோவை முழுக்க காட்டினாராம் மனைவி.. அப்போதும் செந்தில் நம்பாததால், போனை கட் செய்து கீழே போட்டுவிட்டு ஞானபாக்கியபாய் கதறி அழுதுள்ளதாக கூறப்படுகிறது.. பிறகு மனைவியை சமாதானப்படுத்த, மறுபடியும் போன் செய்துள்ளார் செந்தில்.. ஆனால், அழுதுகொண்டே இருந்த ஞானபாக்கியபாய், போனை எடுக்கவே இல்லையாம்.. இதற்கு பிறகு, விடிகாலையில், பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு செந்தில் போன் போட்டு தகவலை சொல்லி உள்ளார்.

சடலம்

சடலம்


மனைவி போன் எடுக்காததால், என்ன நடந்தது என்று வீட்டிற்குள் சென்று பார்க்குமாறு சொல்லி உள்ளார்.. அக்கம்பக்கத்தினரும், வீட்டு கதவை தட்டியும் திறக்காததால், உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.. அப்போது ஞானபாக்கியபாய் சடலமாக தொங்கியதை கண்டு, செந்திலுக்கு விஷயத்தை சொன்னார்களாம்.. பிறகு போலீசுக்கும் தகவல் சொன்னதாக, கூறப்படுகிறது.. 3வித காரணங்கள் சொல்லப்படுவதால், குமரியில் இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்கவே இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+