• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தெலுங்கில் "மாட்லாடினாரா" துரை வைகோ.. நெளிந்த நிர்வாகிகள்.. பாஞ்சாலங்குறிச்சியில் என்ன நடந்தது..?

Google Oneindia Tamil News

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன், துரைவைகோ குறித்து முக்கிய செய்தி அரசியல் களத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

திருவள்ளுர் மதிமுக, ஆவடி மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், அந்தரிதாஸ் தலைமையில் நடைபெற்றது.. இதற்கு மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்துகொண்டார்...

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மதிமுகவின் வளர்ச்சி குறித்து நிர்வாகிகளிடம் துரைவைகோ விரிவாக எடுத்துரைத்தார்.. முன்னதாக, மக்கள் நீதி மையம் கட்சியிலிருந்து விலகி 500-க்கும் மேற்பட்டோர் மதிமுகவில் இணைந்தனர்..

இந்திதான் இந்தியா? இன்னொரு சோவியத் யூனியனாக இந்தியா மாறிவிடும்! மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசம் இந்திதான் இந்தியா? இன்னொரு சோவியத் யூனியனாக இந்தியா மாறிவிடும்! மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசம்

 விஜயகாந்த் கட்சி

விஜயகாந்த் கட்சி

அதேபோல் தேமுதிக, அமமுக, பாஜக, சமக உள்ளிட்ட பிற கட்சிகளை சேர்ந்த பலர் மதிமுகவில், துரை வைகோ முன்னிலையில் இணைந்தனர்.. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துரைவைகோ, "பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசே நியமித்துக் கொள்ளலாம் என்கிற சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ள தமிழக அரசின் செயல் வரவேற்கத்தக்கது... இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாநில அரசுகளே பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமனம் செய்வதுபோல், தமிழகத்திலும் துணைவேந்தர்கள் மாநில அரசே நியமிக்கும் என்பது வரவேற்கத்தக்கது" என்றார்.

 ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

இதையடுத்து, ஆளுநர் ஆவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளவர் எச்.ராஜா என்று அண்ணாமலை கூறியிருக்கிறாரே, அவருக்கு ஆளுநர் ஆவதற்கான தகுதி உள்ளதா?" என்று செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.. அதற்கு துரைவைகோ, "அப்படி எச்.ராஜா போன்றவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டால் அவர்களைப் போன்றவர்கள் துணைவேந்தரை நியமிக்கும்போது, அவர்கள் பாஜகவை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள்.. அதனால்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்" என்றார்.

துரைவைகோ

துரைவைகோ

இதனிடையே, இன்னொரு தகவலும் துரைவைகோ குறித்து வட்டமடித்து கொண்டிருக்கிறது.. தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் உள்ள வீரசக்கதேவி ஆலய ஆண்டுவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடத்தப்படுவது வழக்கம்.. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஜோதியுடன் ஊர்வலமாக வந்து இந்த திருவிழாவில் பங்கேற்கின்றனர்... சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு மோதல் ஏற்பட்டதால் மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் வருடாவருடம் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.

 கட்டபொம்மன் மணிமண்டபம்

கட்டபொம்மன் மணிமண்டபம்

இந்த திருவிழாவில் மதிமுக பொதுச்செயலாளர் தவறாமல் கலந்துகொண்டு, கட்டபொம்மன் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.. அப்போது எழுச்சி மிக்க உரையும் நிகழ்த்துவது இயல்பு.. இந்த வருடம் பாஞ்சாலங்குறிச்சியில இருக்கிற வீரசக்கதேவி கோவில் திருவிழா அடுத்த மாசம் நடக்க உள்ளது.. இதுக்காக, கோவில்பட்டியில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை தொடர் ஜோதி ஓட்டத்துக்கு சிறப்பான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

 தெலுங்கு மொழி

தெலுங்கு மொழி

மதிமுக தலைமை நிலைய செயலாளரான துரைவைகோவிடம், இந்த தொடர் ஜோதியை முதல் முதலாக கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.. எனவே, இந்த திருவிழா தொடர்பான விழா குழுவினருடன் அடிக்கடி துரை வைகோவும் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.. அப்போதுதான் அவர்களுடன் தெலுங்கு மொழியில் பேசுகிறாராம்.. கட்சிக்காரர்கள் முன்னிலையிலேயே இப்படி வெளிப்படையாக தெலுங்கு மொழியில் பேசுவது நிர்வாகிகளுக்கு தர்மசங்கடமாக இருப்பதாக முணுமுணுப்பு எழுந்துள்ளது.

தெலுங்கு

தெலுங்கு

அதேசமயம், இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, தேவையில்லாமல், சின்ன விஷயத்தை பெரிதாக்கி கொளுத்தி போடுகிறார்கள் என்றார்கள் மதிமுக நிர்வாகிகள்.. தாய்மொழியில் பேசுவது தவறு என்று யார் சொன்னது? தெலுங்கை தாய் மொழியை கொண்டிராத ஜெயலலிதா, உட்பட பலர் தெலுங்கில் பேசவில்லையா? இவைகளை எல்லாம் அரசியலாக்கக்கூடாது.. அனைவரும் இந்தியர்கள்தானே !" என்று பதிலடி தருகிறார்கள்.

English summary
Did mdmk durai vaiko speak Telugu language in thoothukudi and What happened
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X