எடப்பாடியை ஓவர்டேக் செய்து.. இப்போ மூணு மடங்கு அதிகம்- ஏட்டிக்குப் போட்டியால் பன்னீருக்கு சறுக்கல்!?
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து இதுவரை நீக்கியுள்ள 66 பேரில் பெரும்பாலானோர் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
Recommended Video
இவர்களை அத்தனை பேரையும் கட்சியில் இருந்து நீக்கி, தனக்கு எம்.எல்.ஏக்கள், மா.செக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
எடப்பாடி பழனிசாமி தன்னையும், தனது ஆதரவாளர்களையும் கட்சியை விட்டு தூக்கியதற்கு போட்டியாக, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 66 பேரை கட்சியில் இருந்து தூக்கியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

கட்சியில் இருந்து நீக்கம்
அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச் செயலாளராக ஜூலை 11 பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, உடனடியாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்த 5 மாவட்ட செயலாளர்கள், ஓபிஎஸ்ஸின் மகன்கள் உட்பட 18 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நேற்று நீக்கினார். இதுவரை ஈபிஎஸ்ஸால் ஓபிஎஸ் தரப்பின் 22 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

எடப்பாடியை நீக்கிய ஓபிஎஸ்
இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை அதிரடியாக அறிவித்தார். கட்சி விதிகளையும், கொள்கைகளையும் மீறிச் செயல்பட்ட 22 பேர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம்.

யார் அந்த 22 பேர்
எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, எஸ்.டி.கே.ஜக்கையன், ஆர்.பி.உதயகுமார், ஆதி ராஜாராம், தி.நகர் பி.சத்யா, எம்.கே.அசோக், விருகை வி.என்.ரவி, கே.பி.கந்தன், சி.வி.சண்முகம், ஆர்.இளங்கோவன், ஓ.எஸ்.மணியன், செல்லூர் கே.ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா ஆகிய 22 பேர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிவித்தார்.

இன்று 44 பேர் நீக்கம்
இந்நிலையில் இன்று மேலும் 44 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இந்த இரண்டாவது பட்டியலில் 10க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்களும், 13 சிட்டிங் எம்.எல்.ஏக்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று 22 பேர், இன்று 44 பேர் என இதுவரை எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான 66 பேரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

முன்னாள் அமைச்சர்கள்
இன்று முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, பெஞ்சமின், கே.சி.வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.பி.அன்பழகன், பரஞ்சோதி, காமராஜ், கே.வி.ராமலிங்கம், கே.சி.கருப்பணன், சண்முகநாதன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், உள்பட 44 எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

சிட்டிங் எம்.எல்.ஏக்கள்
ஓபிஎஸ் இன்று கட்சியை விட்டு நீக்கியுள்ள 44 பேரில் 13 பேர் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் ஆவர். மேலும், பல முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்.எல்.ஏக்களும், முன்னாள் எம்.பிக்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மேலும், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆவர்.

ஆதரவு காலி
ஓ.பன்னீர்செல்வம் இதுவரை நீக்கியுள்ள 66 பேரில் பாதி பேர் முன்னாள் அமைச்சர்கள் ஆவர். பெரும்பாலானோர் எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள். இவர்களை அத்தனை பேரையும் கட்சியில் இருந்து நீக்கி, தனக்கு எம்.எல்.ஏக்கள், மா.செக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

மூன்று மடங்கு அதிகம்
எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராகப் பதவியேற்றதால், ஓபிஎஸ் தரப்பின் 22 பேரை நீக்கினார். அதற்கு போட்டியாக ஈபிஎஸ் தரப்பின் 66 பேரை நீக்கியுள்ளார் பன்னீர்செல்வம். கட்சி தனது அதிகாரத்தின்கீழ் இருப்பதைக் காட்டுவதற்காக லிஸ்ட் எடுத்து தூக்குகிறேன் என்ற பெயரில், தனக்கு எதிராக இருக்கும் முக்கிய நிர்வாகிகள் பட்டியலை பகிரங்கமாகவே அறிவிக்கிறார் ஓபிஎஸ்.

தேவையில்லாத வேலை
ஓபிஎஸ் நீக்கியுள்ள பட்டியலில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் பட்டியலை வைத்தே ஓபிஎஸ்ஸுக்கு கட்சி நிர்வாகிகள் மத்தியில் எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பது தெளிவாகிறது, ஏற்கனவே கட்சி கையை விட்டுச் சென்றுள்ள நிலையில், இது ஓபிஎஸ்ஸுக்கு சிக்கலைத்தான் கொடுக்கும், தேவையில்லாத வேலை என்று விமர்சிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்.. 'நாளை பார்ப்பீர்கள்'.. அதிரடி பேட்டி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications