ராமாவரம் தோட்டத்து மர்மம்.. ஷோபாவுடன் எஸ்ஏசி சென்றது ஏன்? எம்ஜிஆரிடம் ஒன்ஸ்மோர் கேட்ட சீன்: பிரபலம்
சென்னை: தவெக மாநாட்டின்போது எம்ஜிஆரை விஜய் புகழ்ந்திருந்தார்.. இந்த நேரத்தில் அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகரன் பேசியிருந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதாவது தான் உதவி இயக்குனராக இருந்தபோதும், இயக்குனராக இருந்தபோதும், எம்ஜிஆரால் தான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று ஒருமுறை எஸ்ஏசி பேசியிருந்தார். அந்த வீடியோவை யாரோ, இப்போது இணையத்தில் வைரலாக்கிவிட்டார்கள். இதுகுறித்துதான் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபுவிடம் பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதை பற்றி பார்ப்போம்.
Media circle என்ற youtube சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, உண்மைகளில் சில பொய்கள் இருக்கலாம்.. ஆனால், எஸ்ஏசியை பொறுத்தவரை, பொய்களில் சில உண்மைகள் இருக்கும்.

எம்ஜிஆர், லதா நடித்த நாளை நமதே படத்துக்கு சேதுமாதவன் டைரக்டர்.. அவருக்கு உதவி இயக்குனராக இருந்தவர்தான் சந்திரசேகர்.. அப்போது ஒரு பாடலில் எம்ஜிஆர் நடித்தபோது, அவரது வாயசைப்பு சரியில்லை என்று கடைநிலை உதவி இயக்குனராக பணியாற்றிய சந்திரசேகர், ஒன்ஸ்மோர் கேட்டாராம்..
எம்ஜிஆர் நாளை நமதே
எம்ஜிஆர் மாதிரியான ஆளுமையிடம், இயக்குனர்களே நிற்க மாட்டார்கள்.. சின்னவர் என்றுதான் கைகட்டி நிற்பார்கள்.. பேசவே பயப்படுவார்கள்.. அப்படியிருக்கும் சந்திரசேகர், எம்ஜிஆரிடம் ஒன்ஸ்மோர் கேட்டாராம்.. உடனே எம்ஜிஆர் தம்பி இங்கே வாப்பா என்று அழைத்து, சந்திரசேகர் தோளில் கை வைத்து, தட்டி கொடுத்து, நீ நல்லா வருவே, பெரிய இயக்குனராக வருவே என்றாராம்..
எம்ஜிஆர் தந்த அழுத்தம்
உடனே மகிழ்ச்சியில் திளைத்து, நைட் முழுக்க தூங்காமல், முற்றத்தில் படுத்து கொண்டு நிலாவை பார்த்து கொண்டேயிருந்தாராம்.. ஆனால் மறுநாள் சந்திரசேகரை கூப்பிட்டு செல்வதற்கு கார் வரவில்லையாம். உடனே ஏன் கார் வரலியா? என்று விசாரித்ததற்கு, இனிமேல் அந்த படத்தில் நீங்கள் கிடையாது என்று சொல்லிட்டாங்களாம். இதை சந்திரசேகரே சொல்லி உள்ளார்..
அதாவது எம்ஜிஆர் அழுத்தத்தினால் அந்த படத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறியிருக்கிறார்.. ஆனால் இந்த சம்பவம் நடந்ததா நடக்கலியா தெரியாது.
ஒன்ஸ்மோர்
எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தபிறகுகூட தன்னுடைய ஆளுமையை எங்குமே விட்டுக்கொடுத்ததில்லை.. சினிமாவில் நடிக்கும்போது, ஒன்ஸ்மோர் வேண்டும் என்றாலும்,அதை எளிதில் கேட்டு விடமுடியாது.
எம்ஜிஆர் மட்டுமல்ல, சிவாஜி கணேசனும் அப்படித்தான்.. இவர்களை போன்றோரிடம் ஒன்ஸ்மோர் வேண்டும் என்றால் இதை இன்னும் கொஞ்சம் பெட்டரா செய்யலாமா? என்று அருகில் சென்று பக்குவமாக இயக்குநர்கள் கேட்டு பெறுவார்கள்.. அதனால் எம்ஜிஆரிடம் ஜூனியர் அசிஸ்டெண்ட் இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகர் சொல்லியிருப்பாரா தெரியவில்லை
நீதிக்கு தண்டனை - கலைஞர் கருணாநிதி
அன்று இயக்குனரானதும், நீதிக்கு தண்டனை என்ற படத்தை எஸ்ஏசி எடுத்திருந்தார்.. சமுதாய சீர்கேடுகளுக்கு காரணமாக இருக்கும் என்று சொல்லியே இந்த படத்தை எடுத்தார்.. அப்போது எம்ஜிஆர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.. இந்த படத்துக்கு தடை வாங்குவதற்கான முயற்சியை அன்று அதிமுக தரப்பில் செய்யப்பட்டது.
பொதுவாக அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை சொல்லியிருந்தால், அந்த படத்துக்கு எதிர்ப்பை காட்டுவதும், தடை வாங்குவதும் இயல்பாகும். அந்தவகையில் நீதிக்கு தண்டனை படத்துக்கும் தடை வாங்க முயன்றார்கள்..
இதற்கு இன்னொரு காரணம், கலைஞர் கருணாநிதி அந்த படத்துக்கு கதை வசனம் எழுதியிருந்தார்.. அந்த படத்தில் நெருப்பு பொறி போல வசனங்கள் இருந்தன.. சென்சார் போர்டு அனுமதி தந்த நிலையில், கடைசியில் கோர்ட்டுக்கு சென்று சட்டப்போராட்டங்களை நடத்தியே அந்த படத்தை வெளியிட்டு ஓடவிட்டனர். இது உண்மையான சம்பவம்.
ராமாவரம் தோட்டம் - ஷோபாவுடன் சென்ற எஸ்ஏசி
அதேபோல, ராமாபுரம் தோட்டத்துக்கு எம்ஜிஆர் அழைத்ததால், மனைவியுடன் தோட்டத்துக்கு சென்றேன் என்றும் எஸ்ஏசி தற்போது அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.. இது உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது.
பொதுவாக ராமாவரம் தோட்டத்துக்கு வரும்படி எம்ஜிஆர் கூப்பிட்டாலே பலரும் பயப்படுவார்கள், அலறுவார்கள்.. ஏனென்றால் அவர் கோபத்தில் கூப்பிடுகிறாரா? அல்லது விருந்து கொடுக்க கூப்பிடுகிறாரா என்று யாருக்குமே தெரியாது.
நீதிக்கு தண்டனை படத்துக்கு தடை வாங்க முயன்றும் நடக்காமல் போய்விட்டதே என்ற கோபம் நிச்சயம் எம்ஜிஆருக்கும் இருந்திருக்கும்.. இந்த நேரத்தில் தோட்டத்துக்கு அழைக்கவும் உண்மையிலேயே பயந்துதான் போயிருக்கிறார் எஸ்ஏசி..
தோட்டத்துக்கு கூப்பிட்ட எம்ஜிஆர்
இதுகுறித்து எஸ்ஏசி அந்த வீடியோவில் சொல்லும்போது, தோட்டத்துக்கு ஷோபாவை துணைக்கு அழைத்து சென்றேன்.. கூடவே ஒரு போட்டோ கிராபரையும் அழைத்து சென்றிருந்தேன். ஏனென்றால், அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் உடனே தலையை கலைத்துவிட்டு, சட்டை பட்டனை கிழித்து கொண்டு, வெளியே வருவது போல போட்டோ எடுத்துவிட வேண்டும், அதை வைத்து ஏதாவது வைரலாக்கலாம் என்ற எண்ணத்துடன்தான் சென்றேன். ஆனால் என்னை எம்ஜிஆர் நல்லவிதமாக நடத்தினார் என்று கூறியிருக்கிறார்.
இந்த விஷயத்தை பொறுத்தவரை, எம்ஜிஆர் கோபத்தில்தான் கூப்பிட்டிருப்பார்.. நீதிக்கு தண்டனை படம் குறித்த சில விளக்கத்தை எஸ்ஏசி சொல்லவும், அதை எம்ஜிஆர் ஏற்றுக் கொண்டிருக்கலாம். மற்றபடி தோட்டத்தில் என்ன நடந்தது நமக்கு தெரியாது. ஆனால், எஸ்ஏசியை எம்ஜிஆர் கூப்பிட்டது உண்மைதான் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications