தூக்கமற்ற இரவை திமுகவுக்கு தந்த செங்கோட்டையன்? கார் அறிவாலயம் பக்கம் வந்தால் A டீம்? விஜய்யால் கிலி
சென்னை: எந்தவிதமான அரசியல் அனுபவமும் இல்லாமல் தத்தளித்து கொண்டிருக்கிற விஜய் கட்சியை ஒழுங்குப்படுத்தவும், நெறிப்படுத்தவும், அனுபவசாலி அங்கு சென்றிருப்பதால், அது தவெகவுக்கு பலமும், பயனும் கிடைக்கும்.. இதனால் செங்கோட்டையனுக்கு நஷ்டம் ஏற்படலாம். ஆனால் விஜய்க்கு பலம்" என்று மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார்.
4 நாட்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் பேசும்போது, "சில நாட்களுக்கு முன்பு பல கார்கள் மாறி சென்று அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. அதேபோல அதிமுக முன்னாள் மூத்த அமைச்சர், ஹரிதுவார் செல்கிறேன், ஆன்மீக பயணம் செல்கிறேன் என்று சொல்லி அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்தார்.. இப்போது இன்னொரு கட்சியில் இணைந்துவிட்டார்..

செங்கோட்டையன் - தவெக விஜய்
அதிமுகவில் இருக்கக்கூடிய மூத்த தலைவர்கள் வேறு கட்சியில் இணைவதாக இருந்தால் கூட டெல்லிக்கு சென்று அமித்ஷாவிடம் அனுமதி வாங்கிவிட்டுதான் வர வேண்டும். அப்படித்தான் இவரும் இணைந்துள்ளார்.. அந்தவகையில் இவர் இணைந்திருப்பது மாற்றுக் கட்சியில் அல்ல, மாற்று கிளையில்" என்று செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து கூறியிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து Label Tamil Nadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருக்கும் மூத்த பத்திரிக்கையாளர் மணி, "முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து விலகி, தவெகவில் இணைந்ததுமே திருமாவளவன் ஏன் அவ்வளவு பேசுகிறார்? யார் எங்கியோ கூட்டணி வைத்தால் திருமாவளவனுக்கு என்ன வந்தது? விஜய் வழிமாறினால் திருமாவளவனுக்கு என்ன வந்தது?
அமித்ஷா தான் காரணமா
அதிமுகவும், பாஜகவும் கூட்டணி வைத்தால், மிரட்டி அதிமுகவை கூட்டணிக்கு கொண்டுவந்து விட்டார்கள் என்கிறார்கள்.. அதிமுகவிலிருந்து வெளியே வந்த ஒருத்தர், கொள்கை எதிரி அதிமுக என்று சொன்னவருடன் செங்கோட்டையன் விஜய்யுடன் கூட்டணி வைத்தால் அதையும் குறை சொல்கிறார் திருமாவளவன்?
செங்கோட்டையன் விஜய்யுடன் சென்றால், அதை திருமாவளவன் வரவேற்கணும்தானே? இதையே உதயநிதி ஸ்டாலினும் சொல்கிறார்.. அமித்ஷாதான் எல்லாரையும் ஆட்டுவிக்கிறார், அமித்ஷா சொல்லிதான் செங்கோட்டையன் தவெகவில் போய் சேர்ந்துள்ளார் என்று விமர்சிப்பது முரண்பாடாக உள்ளதே?
திமுகவின் முரண்பாடு
செங்கோட்டையன் இணைந்த விஜய்யின் கட்சியும் தனிப்பட்ட தனி டீம் அல்ல, அதுவும் பிஜேபியின் B டீம் என்கிறது திமுக.. ஏன் இப்படி திமுக முரண்பாடாக பேசுகிறதென்றால், விஜய்யின் வளர்ச்சி திமுகவுக்கு கிலியை தந்து வருகிறது..
திமுக விரும்பும்படியான அரசியல் நடக்கவில்லையானால், உடனே B டீம், சங்கி, ஆர்எஸ்எஸ் என்று திட்டுவது சரியா? தனது அரசியல் விருப்பத்திற்கு மாறாக இங்கு ஏதாவது நடந்தால், அல்லது தனக்கு அச்சுறுத்தலாக ஒரு நபர் அல்லது கட்சி உருவானால், அவர்களை உடனடியாக B டீம் என்று முத்திரை குத்துவதே திமுகவின் வழக்கமாகிவிட்டது
அறிவாலயம் - A டீம்
ஏதாவது ஒரு கார் பனையூருக்கு சென்றால் உடனே அந்த நபர் B டீம்.. இதுவே அந்த கார் ரிவர்ஸ் எடுத்து அறிவாலயம் பக்கம் வந்தால் அவர் திராவிட கொழுந்து என்று பெயரா? எதுக்கு திமுகவுக்கு இந்த புலம்பல்? விஜய்யின் அரசியல், திமுகவை பாடாய் படுத்துகிறது.. அதிலும் செங்கோட்டையன் விஜய்யிடம் போய் சேர்ந்தது, திமுகவுக்கு தூக்கமற்ற இரவுகளை தந்து கொண்டிருக்கிறது.
எந்தவிதமான அரசியல் அனுபவமும் இல்லாமல் தத்தளித்து கொண்டிருக்கிற விஜய் கட்சியை ஒழுங்குப்படுத்தவும், நெறிப்படுத்தவும், அனுபவசாலி அங்கு சென்றிருப்பதால், அது தவெகவுக்கு பலமும், பயனும் கிடைக்கும்.. இதனால் செங்கோட்டையனுக்கு நஷ்டம் ஏற்படலாம். ஆனால் விஜய்க்கு பலம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications