Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துபாயில் ஜென்டர் டெஸ்ட்! குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்பான்! சுகாதாரத் துறை நோட்டீஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனைவியின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிவித்ததாக யூடியூபர் இர்பானிடம் விளக்கம் கேட்டு தமிழக சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் குழந்தை பிறக்கும் முன்னர் அது ஆணா, பெண்ணா என்ற விவரத்தை வெளியிடுவது சட்டவிரோதம். இது போன்ற அறிவிப்பை எந்த வகையிலும் மருத்துவரோ, ஸ்கேன் செய்யும் டாக்டர்களோ, அறிவிக்கக் கூடாது என்பதுதான் சட்டம்.

Tamilnadu Health department issues notice to You tuber Irfan for revealing his baby s gender before birth

இவ்வாறு அறிவித்தால் டாக்டர், குழந்தையின் பெற்றோர் அல்லது உறவினர்கள் மீது அபராதத்துடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஒவ்வொரு மகப்பேறு மருத்துவமனைகளிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கும்.

இந்த நிலையில் யூடியூபர் இர்பான், தனது மனைவியின் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை வெளிநாட்டில் சோதனை செய்து அறிவித்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இர்ஃபான்ஸ் வியூ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர் உணவகங்களில் உணவுகளை ரிவ்யூ செய்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இவருக்கு லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இர்பான், ஆலியா என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் தனது மனைவியுடன் சேர்ந்து நிறைய வீடியோக்களை வெளியிட்டுள்ளார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நடுவர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜிடம் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

இந்த நிலையில்தான் இர்பான் தனக்கு பிறக்க போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஒரு பார்ட்டி வைத்து அறிவித்திருக்கிறார். அந்த பார்ட்டியில் இர்பான் தனக்கு பெண் குழந்தை வேண்டும் என்றார், ஆலியா தனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்றார். பின்னர் இருவருக்கும் இடையே பலூன் சுடும் போட்டி நடத்தப்பட்டது. இதில் இர்பான் வென்றார்.

இதைத் தொடர்ந்து குழந்தையின் பாலினத்தை மருத்துவ அறிக்கையுடன் வெளியிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள், இந்தியாவில் பாலினம் கண்டறிதல் தடை செய்யப்பட்ட நிலையில் இர்பான் மட்டும் எப்படி கண்டறிந்தார் என்ற கேள்வியுடன் இருந்தனர். பிறகுதான் அவர் துபாயில் தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஸ்கேன் செய்து அறிவித்திருந்தார் என்பது தெரியவந்தது.

Tamilnadu Health department issues notice to You tuber Irfan for revealing his baby s gender before birth

இதற்கான பதிவை இன்ஸ்டாவிலும் அவர் போஸ்ட் செய்திருந்தார். ஸ்கேனில் குழந்தையை பார்த்துவிட்டு குழந்தையின் மூக்கு யாரை போல் உள்ளது என்பதையெல்லாம் இர்பான் தெரிவித்தார். இதன் பிறகுதான் அந்த மருத்துவ அறிக்கையை பார்ட்டியில் வெளியிட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

Tamilnadu Health department issues notice to You tuber Irfan for revealing his baby s gender before birth

இந்த வீடியோ வைரலான நிலையில் இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+