Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பண்ணை வீட்டில்" ஜாலி.. யாரந்த புள்ளிகள்.. எடப்பாடி கிட்ட போன ஆதாரம்.. ஆஹா, "அவங்க" வேற பார்க்குறாங்களே

எடப்பாடி பழனிசாமி விரைவில் மா.செ.கூட்டத்தை கூட்ட உள்ள நிலையில் அதற்கான காரணங்கள் வலம்வருகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி விரைவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளார்.. இதற்கான காரணங்கள் தற்போது வெளியாகி வரும்நிலையில், அதிமுக கூடாரமே வெலவெலத்து காணப்படுகிறதாம்.

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக மண்ணை கவ்வியிருந்தது. ஆனால், இதுவே தங்களுக்கு வெற்றிதான் என்று பூரித்துக்கிடக்கிறதாம் அதிமுக கூடாரம்..

காரணம், தென்னரசுக்கு 44 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் கிடைக்கும் என்று அதிமுகவினரே கணிக்கவில்லையாம்.. கவுரவமான தோல்வியை தழுவியது சற்று நிம்மதியை தந்துள்ளதால், இதுவே தங்களுக்கு சக்ஸஸ்தான் என்கிறார்களாம்..!!

 செங்கோட்டையன்

செங்கோட்டையன்

இதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடமே ஓபனாக கூறியிருந்தார்.. "திமுக இதுக்கு முன்னாடி வேறு எந்த தேர்தலிலும் எங்களை பார்த்து பயந்தது கிடையாது. 350 கோடி செலவு செய்து போலியான வெற்றியை திமுக பெற்றுள்ளது. இதை எல்லாம் தாண்டி 45 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளோம். இது தோல்விகரமான வெற்றி தான். நாங்கள் தான் உண்மையாக வெற்றியாளர்களே தவிர, திமுக கிடையாது" என்று ஒரே போடாக போட்டார். எனினும், எடப்பாடி ஆதரவாளர்களை தவிர மற்ற நிர்வாகிகளால் இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை என்கிறார்கள்.

 +40000

+40000

காரணம், அதிமுகவுக்கு பலமே அதன் வாக்கு வங்கிதான்.. அப்படிப்பட்ட வாக்கு வங்கி, இப்போது 25-லிருந்து 20ஆக குறைந்துவிட்டது என்கிறார்கள்.. இத்தனைக்கும் எடப்பாடிக்கு, இலை சின்னம் கிடைத்தாகிவிட்டது.. ஓபிஎஸ் தரப்பும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி வழிவிட்டது.. வழக்கமாக அதிமுகவின் வாக்குகளை பிரிக்கும், அமமுகவும் ஒதுங்கி கொண்டது.. இது எல்லாவற்றையும்விட, எடப்பாடிக்கு சாதகமான தேர்தல் களம், சொந்த மண்ணில் அமைந்தது. சொந்த சாதி வாக்குகள் இருந்தும்கூட, வெறும் 40 ஆயிரம்தான் ஓட்டுக்கள் என்பதைதான் பலராலும் ஜீரணிக்க முடியவில்லையாம்.

 மோசம் மோசம்

மோசம் மோசம்

அதுமட்டுமல்ல, எடப்பாடிக்கு கிடைத்த இந்த 40 ஆயிரம் ஓட்டுக்களும், எடப்பாடி என்ற தனி மனிதருக்கு கிடைத்த ஓட்டுக்களாகவும் கருத முடியாது என்கிறார்கள். அந்த 40 ஆயிரம் ஓட்டுக்களில், ஓபிஎஸ்ஸுக்கும் பங்கு உள்ளது.. ஓபிஎஸ், அமமுக, தமாகா, பாஜக, இப்படி பல கட்சிகளுக்கும் பலருக்கும் பங்கு இருக்கவே செய்கிறது.. அப்படி இருந்தும் தோல்வியை சந்திக்க நேர்ந்தது ஏன் என்றும், எடப்பாடி தலைமையிலான அணிக்கு இது ஒரு மோசமான தோல்வி என்றும் பார்க்கப்பட்டும் வருகிறதாம்.. எனவே, எடப்பாடி கூடாரத்திற்குள்ளிருந்தே அதிருப்திகள் வெடித்து கிளம்ப தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வலம் வருகின்றன.

 தப்புங்க தப்பு

தப்புங்க தப்பு

இப்படிப்பட்ட சூழலில்தான், ஈரோடு இடைத்தேர்தல் தோல்வியையடுத்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை 9- ந்தேதி கூட்டியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. தோல்விக்கான காரணங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும் என்கிறார்கள்.. ஆனால், ஏற்கனவே இந்த தோல்விகள் குறித்தெல்லாம் பல்வேறு தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.. இதையெல்லாம் அந்த கூட்டத்திலேயே ஓபனாக போட்டு உடைத்து, தவறு செய்துள்ள மாஜிக்கள், நிர்வாகிகளை எச்சரிக்கை செய்ய போவதாகவும் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, தேர்தல் பணி செய்யாமல் ஃபார்ம் ஹவுசில் தங்கி ஜாலியாக இருந்த நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட போட்டோக்களும் ஆதாரங்களாக எடப்பாடி வசம் சென்றுள்ளதாம்..

 பண்ணை வீட்டில்

பண்ணை வீட்டில்

இந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டியிருக்கிறாராம்.. எனவே, நடக்க போகும் மா.செ.கூட்டத்தில் பலருக்கு கல்தா தரப்படும் என்று தெரிவதால், பல சீனியர்கள் இப்போதே கிலியில் உள்ளார்களாம்.. அதேபோல, எடப்பாடிக்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றி ஆலோசிக்க நாமும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட நினைக்கிறாராம் ஓபிஎஸ். இதுகுறித்து பண்ருட்டி ராமச்சந்திரனிடம் ஓபிஎஸ் விவாதித்துள்ளார். அதற்கு பண்ருட்டியோ, "எடப்பாடி கூட்டியுள்ள கூட்டத்தில் என்ன நடக்கிறது என பார்த்துவிட்டு, அதற்கு பிறகு நாம் கூட்டலாம்" என்று அறிவுறுத்தியுள்ளாராம். என்ன நடக்க போகிறது? பார்ப்போம்...!!!

அட்டைகள்

அட்டைகள்

இப்படிப்பட்ட சூழலில்தான், அடுத்தக்கட்டத்துக்கு அதிமுக நகர்ந்துள்ளதாக தெரிகிறது.. அதாவது, இப்போது அதிமுகவினரிடம் பழைய உறுப்பினர் கார்டு மட்டுமே உள்ளது.. இடைக்கால பொதுச்செயலாளர் கையொப்பமிட்ட புதிய உறுப்பினர் கார்டு இன்னும் வழங்கவில்லை.. எனவே, புதிய உறுப்பினர் கார்டும் தயாராகி கொண்டிருக்கிறது. அந்த கார்டுகள், அனைத்து உறுப்பினர்களுக்கும் சென்றடையும் வகையில் மாவட்டச் செயலாளர்கள் பணியாற்ற தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது..

வெளுக்குதே சாயம்

வெளுக்குதே சாயம்

மேலும், 3 மாதத்திற்குள் இந்த பணிகளை முடித்து கட்சி தேர்தல் நடத்தவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.. இதுகுறித்து கட்சியின் சீனியர் சொல்லும்போது, இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.. புதிய உறுப்பினர் கார்டு அதிமுகவினருக்கு வழங்கப்பட்டதுமே, இந்த பணிகள் படிப்படியாக தொடங்க உள்ளது.. வருகிற 17-ந்தேதி அதிமுக பொதுக்குழு தீர்மானம் சம்பந்தமான வழக்கு கோர்ட்டில் வர உள்ளதால் அது பற்றியும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்பட உள்ளது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+