தாம்பரம் ரயில் நிலையத்தில் வடமாநில பயணியால் டிடிஆருக்கு நினைத்து பார்க்க முடியாத சம்பவம்
சென்னை: கடற்கரை- தாம்பரம் இடையே உள்ள மின்சார ரயில்கள் மிகவும் முக்கியமானவை ஆகும்.இதில் தான் மிக அதிகமான பயணிகள் பயணிக்கிறார்கள். சென்னையின் மையப் பகுதியை இணைக்கும் வழித்தடமாக இருக்கிறது. இந்த வழித்தடத்தில் ஒவ்வொரு ஐந்து முதல் 10 நிமிடத்திற்கு ஒரு முறை மின்சார ரயில்கள் ஓடுகிறது. இந்த ரயில்களில் அவ்வப்போது டிக்கெட் பரிசோதனை நடைபெறும். அந்த வகையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்திய டிடிஆரை வட மாநில பயணி ஒருவர் சட்டையை பிடித்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கடற்கரைக்கும் தாம்பரத்திற்கும் இடையில் தினமும் சுமார் 160 மின்சார ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம் ஆகும். அதேநேரம் தாம்பரத்தை தாண்டி செங்கல்பட்டு வரை 70 மின்சார ரயில் சேவைகளும், தாம்பரத்தை தாண்டி காஞ்சிபுரம் வரை 16 மின்சார ரயில் சேவைகளும் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. தாம்பரம்- கடற்கரை வழித்தடத்தில் தாம்பரம் ரயில் நிலையம் தற்போது மிகப்பெரிய புறநகர் ரயில் நிலையமாக இருக்கிறது. தாம்பரத்தில் இருந்து அங்கு தினசரி 3,50,000 பேர் பயணம் செய்வதாக கூறப்படுகிறது.

அதேபோல் டிக்கெட் விற்பனையும் சென்ட்ரல் ஸ்டேசனுக்கு அடுத்தபடியாக தாம்பரம் ரயில் நிலையத்தில் அதிகமாக இருக்கிறது. தாம்பரம் ரயில் நிலையத்திற்கு எப்போது போனாலும் கூட்டம் அதிகமாக இருக்கும். பல ஆயிரம் பயணிகள் வந்து கொண்டே இருப்பதால், பயணிகள் டிக்கெட் எடுக்காமல் எஸ்கேப் ஆவதை தடுக்க டிடிஆர்களும் தாம்பரம் நிலையத்தில் எப்போதுமே இருப்பார்கள். அதேநேரம் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் திடீரென சோதனையும் நடத்துவார்கள்.
அப்படி தாம்பரம் ரயில் நிலையத்தில் டிடிஆர் சோதனை நடத்திய போது, TTR-க்கும் வட மாநில பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வடமாநில பயணி ஒருவர் TTR-இன் சட்டையைப் பிடித்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. எப்படி நடந்தது என்று பார்ப்போம். சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தின் மூன்றாவது பிளாட்பாரத்தில் வந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
பயணிகளின் டிக்கெட்டுகளை சரிபார்க்க முதல் வகுப்பு பெட்டியில் ஒரு பெண் TTR ஏறியிருக்கிறார். முதல் வகுப்பு பெட்டியில் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுடன் பயணித்த வட இந்திய இளைஞர் ஒருவரை அவர் கண்டார். அபராதம் செலுத்துமாறு அவர் கேட்டபோது, அவர் மறுத்து, TTR-ஐ ஒதுக்கித் தள்ளிவிட்டு, பிளாட்பாரத்தை நோக்கி ஓடினார்.
அருகில் நின்ற இரண்டு ஆண் TTR-கள் தலையிட்டு அவரைத் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது அவர்களை தள்ளிவிட்டு ஓட முயன்ற இளைஞர், TTR-இன் சட்டையைப் பிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து டிடிஆரை அவர் தாக்கத் தொடங்கினார், இதனால் பிளாட்பாரத்தில் மோதல் ஏற்பட்டது.
ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பயணியைக் கைது செய்து, விசாரணைக்காக ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்த பிறகு, இரு தரப்பினரும் புகார் அளிக்காததால், வழக்குப் பதிவு செய்யாமல் வடமாநில பயணியை விடுவித்தனர். பயணி ஒருவர் டிக்கெட் பரிசோதகருடன் மோதிய சம்பவத்தால் தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications