Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ப்ரியமுடன் ப்ரியா".. லாட்ஜ் ரூமில் விநோத ஒப்பாரி.. தலைகாணியால் அமுக்கி அமுக்கியே.. மேடம் இப்ப ஜெயிலில்

மதுஅருந்திய இளைஞர் திடீரென லாட்ஜ் ரூமில் சரிந்து விழுந்து இறந்ததில் குற்றவாளி கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லாட்ஜ் ரூமுக்குள் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் இளைஞர்.. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மொத்த விஷயமும் அம்பலமாகி உள்ளது.

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்.. 41 வயதாகிறது.. இவர் அந்த பகுதியிலேயே ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.. இவர் பிரியா என்ற பெண்ணுடன் பழகி வந்திருக்கிறார்.

பிரியாவுக்கு 42 வயதாகிறது.. கொசப்பேட்டை சின்னதம்பி தெருவை சேர்ந்தவராம் பிரியா.. சில வருடங்களாகவே இவர்களுக்குள் இந்த கள்ள உறவு நீடித்து வந்ததாக தெரிகிறது.

 ஓ பிரியா

ஓ பிரியா

இந்நிலையில், பெரியமேடு ஆர்எம் சாலையில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் 2 பேரும் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள்.. அப்போது, ரூமுக்குள் பிரகாஷ் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.. இதனால் பதறிப்போன பிரியா, லாட்ஜ் ஓனர் கபீருக்கு தகவல் தந்தார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த கபீர், அந்த ரூமுக்குள் சென்று பார்த்தார்.. ஆனால், அதற்குள் பிரகாஷ் இறந்துவிட்டார்.. எனவே, பெரியமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. போலீசாரும், ரூமுக்குள் நுழைந்து, பிரகாஷ் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 ஆன் தி ஸ்பாட்

ஆன் தி ஸ்பாட்

பிறகு இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.. முதல் விசாரணையே பிரியாதான்.. அன்றைய தினம் இரவு, ரூமுக்குள் செல்லும்போதே மதுபாட்டில்கள் வாங்கி சென்றார்களாம்.. பிறகு 2 பேருமே சேர்ந்து தண்ணி அடித்துள்ளனர்.. அப்போது போதையில் தகராறு வெடித்துள்ளது.. இதில் உச்சக்கட்ட போதையில் இருந்த பிரியா, ஆத்திரத்தில் பிரகாஷை கடுமையாக தாக்கினாராம்.. அந்த தாக்குதலில் படுகாயமடைந்த பிரகாஷ், மயங்கி கீழே விழுந்துள்ளார்.. அப்படியே ஆன்தி ஸ்பாட்டிலேயே உயிரும் போயுள்ளது.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து போலீசார் பிரியாவை கைது செய்துள்ளனர்.

 லாட்ஜ் ரூம்

லாட்ஜ் ரூம்

பிரகாஷூக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம்.. ஆனால், பிரியாவுக்கு 23 வருடங்களுக்கு முன்பு பெருமாள் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது.. 2 மகன்களும் இருக்கிறார்கள்.. ஆனால், கணவருடன் தகராறு செய்துகொண்டு, பிரியா அவரை விட்டு வந்துவிட்டாராம்.. மகன்களையும் பிரிந்துவந்துவிட்டார்.. பல வருடங்களாகவே தனியாகவே வசித்து வந்துள்ளார்.. ஓட்டேரியில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சென்றிருக்கிறார் பிரியா.. அங்கேதான் பிரகாஷை சந்தித்துள்ளார்.. அந்த பழக்கமே இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவத்தன்று லாட்ஜ் ரூமிலேயே 2 பேரும் சேர்ந்து மது அருந்தியதுடன், ஒன்றாக சாப்பிட்டும் உள்ளனர்.

 காதை கிழித்த கதறல்

காதை கிழித்த கதறல்

அதற்கு பிறகுதான் தகராறு வெடித்துள்ளது. இரவு 9.30-க்கு லாட்ஜ் மேனேருக்கு பிரியா போன் செய்தாராம்.. அப்போதுகூட, என்னுடன் வந்த பிரகாஷ் அதிகளவில் மது குடித்துவிட்டார்.. நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், நிறைய குடித்ததால், மயங்கி கீழே விழுந்துவிட்டார் என்று சொல்லி கதறி கதறி அழுதுள்ளார்.. அதற்கு பிறகுதான், போலீசார் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் அனுப்பி வைத்தனர்.. சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்து பிரியாவிடம் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துவிட்டதாம்.. அதில் பிரகாஷ் தலையில் பலமாக தாக்கப்பட்டதால் சுயநினைவின்றி உயிரிழந்தது தெரியவந்தது.

 தலைகாணிகள்

தலைகாணிகள்

அதற்கு பிறகுதான், சந்தேக மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து பிரியாவை கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.. பிரகாஷூடன் கள்ளக்காதலில் இருந்த பிரியாவுக்கு, வேறு ஒருவருடனும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.. இந்த விஷயம் பிரகாஷூக்கு தெரிந்து, அது சம்பந்தமாக கேட்டிருக்கிறார்.. இதில்தான் அன்றைய தினம் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரகாஷின் சட்டையை பிடித்து இழுத்து, அங்கிருந்த சுவரில் இடித்து தள்ளினாராம் பிரியா.. அத்துடன், தலையணையால் பிரகாஷ் முகத்தை பலமுறை அமுத்தி அமுத்தியே கொலையும் செய்திருக்கிறார்.. இவ்வளவையும் போலீசாரிடம் பிரியா வாக்குமூலமாக தந்ததையடுத்து, இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்..!!!

துண்டிப்பு

துண்டிப்பு

இதனிடையே வேறு சில தகவல்களும் வெளியாகி உள்ளது.. பிரியாவும், பிரகாஷூம், கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஓட்டேரியில் உள்ள அப்பளம் கம்பெனியில் வேலை பார்த்திருக்கிறார்கள்.. அந்த கம்பெனியில் வேலை பார்த்தபோதுதான், பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.. இதற்கு பிறகு, 2 பேருமே தொடர்பை துண்டித்து கொண்டுவிட்டார்களாம்.. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, மறுபடியும் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர்.. அப்போதுதான், இன்னொரு கள்ளக்காதலன் தொடர்பாக பிரியாவிடம் கேட்டுள்ளார் பிரகாஷ்..

வேலிதாண்டிய ஆடு

வேலிதாண்டிய ஆடு

தனிமையில் பிரியா வாழ்ந்து வருவதால், தனக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால், ஒன்றாக திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று சொன்னாராம் பிரகாஷ்.. இதற்கு பிரியா மறுத்துள்ளார்.. இதனால் ஏற்பட்ட தகராறில்தான், ஒருவரையொருவர் தாக்கி கொண்டுள்ளனர்.. கைகளாலேயே அடித்து கொண்டிருக்கிறார்கள்.. ஒருகட்டத்தில் ஆவேசமாக பிடித்து பிரகாஷை கீழே தள்ளிவிடவும், தலை சுவரில் மோதி விழுந்து அடிபட்டுள்ளது.. அதற்கு பிறகும் ஆத்திரம் தீராமல் தலைகாணியை வைத்து, பிரகாஷின் முகத்தை அமுக்கியே கொன்றுள்ளதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+