எல்லாத்தையும் விட்டுட்டு வந்தாரா விஜய்? நல்ல கதையா.. இருக்கே! இதெல்லாம் கணக்குல வராதா?
சென்னை: கெரியரின் உச்சத்திலிருந்து, அனைத்தையும் விட்டு விட்டு மக்களுக்காக விஜய் வீதிக்கு வந்திருக்கிறார் என்று பேசப்பட்டு வரும் நிலையில், அவருடைய கோடிக்கணக்கான சொத்து, ஆடம்பர கார், தனி விமானம் இதையெல்லாம் எங்கு விட்டுவிட்டு வந்தார் என்று பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் களமிறங்குகிறார். வெற்றி நிச்சயம், நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்று பேசிய விஜய், தன் மீது நம்பிக்கையில்லாமல் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இது ஒருபுறம் எனில், மறுபுறம் விஜய் பற்றி அவரது ரசிகர்களும், கட்சியினரும் கொடுக்கும் பில்டப்கள் எக்கசக்கமாய் இருக்கின்றன. விஜய், கெரியரின் உச்சத்தை விட்டுவிட்டு வந்திருக்கிறார் என்றும், மக்களுக்காக அனைத்தையும் தியாகம் செய்திருக்கிறார் என்றும் பேசப்படுகிறது. அப்படி என்னதான் தியாகம் செய்தார் விஜய்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விஜய் தாக்கல் செய்திருக்கும் வேட்புமனுவில் தனக்கு ரூ.410 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக கூறியிருக்கிறார். இது தவிர தனி விமானம், சொகுசு பங்களாக்கள், சொகுசு கார்கள், இது தவிர கோடிக்கணக்கில் வருமானம், கிலோ கணக்கில் நகைகள் இதையெல்லாம் எப்போது அவர் விட்டுவிட்டு வந்தார்? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
- பயணத்திற்கு தனி விமானம்
- 24 மணி நேரமும் பாதுகாக்க பவுன்சர்கள்
- பனையூர் உட்பட 10 பங்களாக்கள்
- மனைவி பெயரில் 3 கிலோ தங்க நகைகள், 135 காரட் வைர நகைகள்
- ரூ. 404 கோடி அசையும் சொத்துக்கள்
- ரூ. 115 கோடி அசையா சொத்துக்கள்
- 2 BMW, 1 LEXUS, 1 Toyota velfire கார்கள்
- 883 கிராம் தங்கம்
- 2024-2025ல் ரூ.184 கோடி வருமானம்
- கையில் ரூ.2 லட்சம் ரொக்கம்
- வங்கி கணக்கில் ரூ.320 கோடி இருப்பு
இதையெல்லாம் விஜய் எங்கு விட்டுவிட்டு வந்தார்? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. இதற்கு பதில் சொல்ல முடியாமல், விஜய் ரசிகர்கள் திணறி வருகின்றனர்.
-
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
முதல்வர் விஜய்யை சுற்றி தலைமை செயலகத்தில் 4 பவர் சென்டர்கள்.. முன்னாள் அமைச்சர் உதயக்குமார் புகார் -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ்












Click it and Unblock the Notifications