நீட் பயிற்சி மையத்திற்கு ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? அனிதா மரணத்திற்கு ஆறுதல் சொன்னது பொய்யா?
சென்னை: 'நீட்' பயிற்சி மையத்திற்கு தவெக தலைவர் விஜய் 20 கோடி கடன் கொடுத்திருப்பதாகத் தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த மார்ச் 29 ஆம் தேதி தவெக வேட்பாளர் முழு பட்டியலை விஜய் வெளியிட்டிருந்தார். அவர் கட்சி ஆரம்பித்தது முதல் கூட்டணி இல்லை என அவர் தொடர்ந்து சொன்னாலும், கடைசி நேரத்தில் அவர் கூட்டணிக்குச் செல்வார் என சில தேர்தல் வியூக வகுப்பார்கள் தொடர்ந்து பேசிவந்தனர். அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்பதை உறுதி செய்தார்.

அதன்பின்னர் தான் வில்லங்கமே ஆரம்பித்தது. அவர் தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருந்த சொத்துக் கணக்குகள் பல கேள்விகளை எழுப்பின. அவர் தன் மனைவிக்கும் தன் மகன் மற்றும் மகளுக்கும் கடன் கொடுத்திருப்பதாகத் தெரிவித்திருந்ததைப் பலர் விவாதிக்கக் கருப்பொருளானது.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கடன் கொடுத்திருக்கிறாரா? மகனுக்குக் கூட கடன் கொடுத்திருக்கிறாரா? திருமணமே ஆகாத தன் சொந்த பிள்ளைகளுக்குத் தந்தையே கடன் தந்துள்ளாரா? என ஃபேஸ்புக் முழுக்க ஒரே விவாதங்கள் போய்க்கொண்டுள்ளன.
விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு 3 கோடியும் தாய் ஷோபாவுக்கு 8 லட்சமும் கடனாக அளித்துள்ளார். மகன் சஞ்சய்க்கு 8 லட்சத்து 78 ஆயிரத்து 479 ரூபாயும் மகள் திவ்யாவுக்கு 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் கடனாக வழங்கியுள்ளார். அது அவரது தேர்தல் பத்திரத்தில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்பாவுக்கும் மகனுக்கும் மனைவிக்கும் கடன் கொடுத்ததைப் பலரும் கவனத்தில் கொண்டு கேள்வி எழுப்பிவருகின்றனர். அதுவும் கூட குற்றச்சாட்டாக இல்லை. உணர்வுப்பூர்வமாகத்தான் விவாதம் நடந்துவருகிறது. இந்த விஷயத்தில் பலரும் கவனிக்கத் தவறியது ஒன்று உள்ளது. அங்குதான் வில்லங்கம் உருவாகியுள்ளது. அவர் கோகிலாம்பாள் கல்வி அறக்கட்டளையைச் சார்ந்த ஒரு பயிற்சி மையத்துக்கு 20 கோடி கடனாக வழங்கியுள்ளார். இப்படி ஒரு கல்வி நிறுவனத்தின் பின்னணியில் விஜய் உள்ளார் என்பதே யாருக்கும் தெரியாது. குறிப்பாக எந்த ஊடகத்திலும் இது செய்தியாக வந்ததே இல்லை.
குக்கிராமத்தில் நீட் பயிற்சி?
அதுவும் இந்தக் கோகிலாம்பாள் கோச்சிங் சென்டர் எங்கே இருக்கிறது தெரியுமா? விஜய்யால் சென்று கூட பார்க்க முடியாத ஒரு பொட்டல் கிராமத்தில் இயங்கி வருகிறது. அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் தாலுக்காவில் உள்ள அணைக்கரைக்கு அருகே உள்ள குழவடையான் என்ற குக்கிராமத்திற்குள் ஹைடெக் வசதியுடன் செயல்பட்டு வருகிறது இந்தப் பயிற்சிக் கூடம். அதாவது இங்கே 'நீட்', ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்குப் பயிற்சி அளித்துவருகின்றார்கள். இந்தக் கல்விக் குழுமத்திற்குக் கும்பகோணம் உட்பட சில இடங்களில் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. அதுவும் தரமான கட்டடங்களில் இயங்கிவரும் ஹைடெக் ஆன கல்வி நிறுவனமாக உள்ளது.
இந்த கோச்சிங் சென்டரில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் தங்களின் அனுபவங்கள் பற்றிப் பல வீடியோக்கள் மூலம் விளம்பரப்படுத்தி உள்ளனர். அப்படி ஒரு பணக்காரர்கள் படிக்கும் கோச்சிங் செண்டராக உள்ள இதற்கு விஜய் 20 கோடி கடன் கொடுத்துள்ளார்.
அவருக்கும் இந்தக் குக்கிராமத்தில் உள்ள மையத்துக்கும் என்ன சம்பந்தம்? மேலும் தவெக தொடங்கிய பின்னர் அவர் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை அளித்துப் பாராட்டு சான்றிதழையும் பிரம்மாண்ட விழா வைத்து வழங்கி வருகிறார்.
அப்படி 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த விழாவில் கலந்துகொண்டு உதவித் தொகைகளை மாணவர்களுக்கு வழங்கிய விஜய், "நான் பேச வேண்டாம் என்றே நினைத்தேன். ஆனாலும் பேசியே ஆகவேண்டும். அதுதான் 'நீட்' தேர்வு பிரச்சனை. அது கிராமப்புற ஏழை மற்றும் பட்டியலின மாணவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கிறது என்பது சத்தியமான உண்மை" என்று கூறினார்.
ஆகவே 'நீட்' தேர்வை ரத்து செய்யவேண்டும் என்றார். தவெகவின் கொள்கைகளை விளக்கிக் கூறும்போது கூட அவர் 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றே தெரிவித்துள்ளார். ஆனால், இப்போது அவரே ஒரு 'நீட்' பயிற்சி மையத்திற்கு 20 கோடி கடன் கொடுத்து நடத்த உதவி வருகிறார்.
நீட் அரசியல் ஏன்?
அரசியல் ரீதியாக 'நீட்' தேர்வுமுறை தவறானது என்றால், அந்தத் தேர்வுக்குப் பயிற்சிக் கூடமாகச் செயல்படும் கோகிலாம்பாள் கல்வி அறக்கட்டளைக்கு ஏன் கடன் அளித்தார் விஜய்? 'நீட்' எதிர்ப்பு என்பது வெறும் கட்சியின் கொள்கை மட்டும்தானா? அதற்காக நிறுவனம் நடத்துவது கொள்கைக்கு வராதா? எனப் பல கேள்விகளை சமூக ஊடகங்களில் எழுப்பி வருகின்றனர் பலர்.
அதே போல் விஜய், தனக்குச் சென்னை படூரில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 108 சதுர அடியில் ஒரு வீடு உள்ளதாகவும் கூறியுள்ளார். லட்சம் சதுரடியில் அப்படி அந்த ஊரில் இவருக்கு வீடே இல்லை. அப்படி என்றால் ஏன் இவரே இல்லாத ஒன்றைக் கணக்கில் காட்ட வேண்டும் எனப் பல கேட்கலாம். இந்தளவு இருந்தால் அது வீடாக இருக்கவே முடியாது. அங்கு 'விஜய் வித்யாஸ்ரமம்' என்ற பெயரில் பள்ளிக்கூடம் நடத்துகிறார் விஜய். அதைத்தான் வீடு எனப் பிரமாண பத்திரத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் விஜய். ஒரு பள்ளிக்கூடம் உள்ளது என்பதை நேரடியாகச் சொல்லாமல், வீடு எனச் சொல்கிறார் விஜய். அதுவும் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
மகனுக்கும் மகளுக்கும் கடன் கொடுத்தது எல்லாம் ஒரு விவாதமே இல்லை. 'நீட்' தேர்வை ஒழிப்பதே லட்சியம் என்றும் மாநிலப் பட்டியலுக்குக் கல்வியை மாற்றுவதுதான் சரி என்றும், பொதுப் பட்டியலிலிருந்த கல்வியை 1975க்குப் பின் மத்திய பட்டியலில் சேர்த்ததே தவறு என்றும் பேசி வந்த விஜய், அனிதா மரணத்திற்குக் காரணமாக இருந்த 'நீட்' தேர்வு முறையை ஆதரித்து நடத்தப்படும் பயிற்சிக் கூடத்திற்கு ஏன் 20 கோடி வழங்கினார்? ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே தேர்வு என்பது எல்லாம் அடிப்படை கல்வி உரிமைக்கே எதிரானது என்று அவர் கூறியது ஏன்? அதை ஏன் அவரே கடைப்பிடிக்கவில்லை?
- கடற்கரய்
-
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா?










Click it and Unblock the Notifications