Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின்சார பில்லுடன் இந்த மாதம் தனியாக ஒரு தொகை வந்ததா? அதற்கான விளக்கம் இதோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொது மக்கள் நிறைய பேர் இந்த மாதம் தங்களுடைய மின்சார பில்லுடன் தனியாக ஒரு தொகை சேர்ந்து வந்திருப்பதாகவும்.. எதற்காக அந்த தொகை என்று தெரியவில்லை என குழப்பத்தில் உள்ளனர். அவர்களுக்கான சிறிய விளக்கம் தான் இது.

எல்லாரும் மின் இணைப்பு பெறும் பொழுது ஒரு டெபாசிட் தொகை கட்டியிருப்போம்.. ஒவ்வொரு இணைப்புக்கும் சராசரியாக இவ்வளவு மின்சார பயன்பாடு ஒதுக்கீடு கணக்கு உண்டு.

அந்த அளவை தாண்டும் பொழுது.. நமக்கு நமது இணைப்பின் பயன்பாடு வரம்பை உயர்த்தி அதற்கு ஏற்றார் போல டெபாசிட் தொகையின் பற்றாக்குறை தொகை நம்மிடம் வசூலிக்கப்படும். அதுதான் ACCD(Additional current consumption deposit) இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சரிபார்க்கப்பட்டு ஏப்ரல்/மே மாத மின் கட்டணத்துடன் வசூலிக்கப்படும்.

Did you get a separate amount this month with your electricity bill? Heres an explanation for that?

ACCD கணக்கிடும் முறை: கடைசி 12 மாதங்களுக்கு நம்முடைய மின்கட்டணத்தின் சராசரியின் 3 மடங்கு தொகை டெபாசிட் தொகையில் இருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு கடைசி 12 மாதத்தில் நம்முடைய மொத்த மின் கட்டணம் 12 ஆயிரம் எனில்.. அதான் சராசரி தொகை 1000 அதன் 3 மடங்கு தொகை 3000 ரூபாய் நம்முடைய டெபாசிட்டில் இருக்க வேண்டும்.

ஒருவேளை 2000 உங்கள் டெப்பாசிட் இருக்கும் பட்சத்தில்.. மீதம் உள்ள 1000 ரூபாய் உங்களுடைய மின் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படும்.

ஒருவேளை தங்களின் வருட மொத்த மின் கட்டணமே.. 6000 எனில் 6000/12 = 500 அதன் 3 மடங்கு தொகை 1500 ஏற்கனவே 2000 ரூபாய் டெபாசிட்டில் இருந்தால் மேற்கொண்டு எந்த தொகையும் வசூலிக்கப்படாது.

ஒருவேளை தங்களுடைய மின் இணைப்பை திரும்ப ஒப்படைத்தால்.. இந்த டெபாசிட் தொகையை மின்வாரியம் தங்களுக்கு திருப்பி தர வேண்டும்.

இது பல ஆண்டுகளாக உள்ள நடைமுறை தான்.எனவே அளவாக மின்சாரம் பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கும் நல்லது தங்களின் பர்சுக்கும் நல்லது. இந்த தகவலை சிந்தனை என்பவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

மின் கட்டணம் உயருமா: தமிழ்நாட்டில் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை தமிழ்நாடு மின்சார வாரியம் மறுத்துள்ளது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் தான் மின் கட்டணம் உயர்த்தப்பபட்டது. அப்போது மின் கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.

இந்த சூழலில் ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி வழங்கி இருந்தது. இதன்படி அடுத்த மாதம் முதல் மின் கட்டணத்தை4 முதல் 7 சதவீதம் உயர்த்தப்போவதாக தகவல்கள் வெளியாகின. இப்படி உயர்த்தினால் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் என்று பல கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிடுவார் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+