ஜெ. ஸ்டைல்.. புதிய ரூட்டை எடுத்த ஸ்டாலின்.. அடுத்தடுத்து ஆக்சனில் இறங்கிய அருண்.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக கடந்த சில மாதங்களாக புகார்கள் வைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் போலீஸ் அதிகாரிகளுக்கு ப்ரீ ஹேண்ட் கொடுத்துள்ளார்.

பொதுவாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் கீழ் ரவுடிகள் பலர் என்கவுண்டர் செய்யப்பட்டதாக பிம்பம் உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியிலும் கூட என்கவுண்டர் நடந்து இருந்தாலும் கூட.. ஜெயலலிதா ஆட்சியில் அதிக என்கவுண்டர் நடந்ததாக கருத்துக்கள் வைக்கப்படும்.

mk stalin

இதற்கு பயந்து ரவுடிகள் பலரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ரவுடியிசம் பெரிதாக இல்லை என்றும் வாதங்கள் வைக்கப்படுவது உண்டு. இப்படிப்பட்ட நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் போலீஸ் அதிகாரிகளுக்கு ப்ரீ ஹேண்ட் கொடுத்துள்ளார். இதன் காரணமாக தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ரவுடியிசம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆக்சனில் அதிகாரிகள்: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு ரீதியான புகார்கள் வைக்கப்பட்ட நிலையில் காவல் அதிகாரிகள் ஆக்சனில் இறங்கி உள்ளனர். சென்னை கமிஷனர் அருண் ரவுடிகளை ஒழிப்பது தொடர்பாக அடுத்தடுத்து முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முன்னதாக ரவுடிகளுக்கு புரிகிற மொழியில் பேசுவேன் என்று சென்னை கமிஷனர் அருண் கூறிய நிலையில்தான் அடுத்தடுத்த ஆக்சன்கள் நடந்து வருகின்றன.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5ஆம் தேதி, கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த கொலை வழக்கில், பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட பல பேரை போலீசார் கைது செய்தனர். இதில் திருவேங்கடம் கடந்த ஆகஸ்ட் மாதமே என்கவுண்டர் செய்யப்பட்டார்.

போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக திருவேங்கடம் கூறியதன் பேரில் அவரை அங்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு செல்ல முயன்ற போது அவர் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

காக்கா தோப்பு பாலாஜி கொலை: இது போக இதே கொலை வழக்கில் தொடர்புடைய காக்கா தோப்பு பாலாஜி கடந்த 18ம் தேதி கொலை செய்யப்பட்டார். சென்னையை கதிகலக்கி வந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது கொலை, கொலை முயற்சி உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாலாஜி மீது கொலை, கொள்ளை முயற்சி உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில்தான் போலீசார் அவரை சுட்டுக்கொன்றனர்.

மூன்றாவது என்கவுண்டர்: இப்படிப்பட்ட நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சிசீங் ராஜா என்கவுன்டரில் நேற்று சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளார். நேற்று முதல்நாள் இவர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை அழைத்து வந்த போது நீலாங்கரை அருகே தப்பி செல்ல முயன்றதால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளார். போலீசார் இவரை பல வாரங்களாக தேடி வந்தனர். ஆந்திராவில் தலைமறைவாக இருந்த சீசிங் ராஜா நேற்று கைது செய்யப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் இதன் மூலம் 2-வது குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி ஆக்சன்: சென்னை கமிஷனராக பதவி ஏற்றுள்ள அருண் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சென்னையில் ரவுடியிசத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று கூறிய அருண்.. அதற்கான பணிகளில் இறங்கி உள்ளார். ரவுடிகளை ஒழிக்க காவல் ஆணையரின் நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் பார்க்கும் வகையில், போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும்.

சட்டம் ஒழுங்கு தொடர்புடைய 2 கூடுதல் காவல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள் உட்பட காவல் உயர் அதிகாரிகள் போலீசாரின் ரோந்து பணிகளை நேரடியாக கண்காணிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பணியில் சுணக்கம் காட்டும் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை, பணியிடை நீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்துள்ளார்.

உத்தரவு மேல் உத்தரவு: சென்னையின் புதிய கமிஷ்னர் அருண் நேரடியாக ரவுடிகளின் வீடுகள், இருப்பிடங்களுக்கே சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து முதற்கட்டமாக சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று ரெய்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லாமல் போனதாக முக்கியமாக சென்னையில் சட்ட ஒழுங்கு சரியில்லாமல் போனதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டு உள்ளனர். இந்த அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்தது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படி தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடந்து வரும் சில சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஒரு ரெட் நோட் சென்றுள்ளதாம். அதாவது தமிழக அரசு இது போன்ற விவகாரங்களை எதிர்கொள்ள உடனே சுதாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டி உள்ளது. முக்கியமாக சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு ஏற்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+