"புளியங்காய்யை" சாப்பிட்டே.. கருணாநிதியின் "குரலை" பெற்றார் ஸ்டாலின்.. லியோனி ஒரே போடு.. பரபர பேச்சு
திண்டுக்கல் லியோனி முதல்வர் ஸ்டாலினின் குரல் குறித்து புது கருத்து ஒன்றை சொல்லி உள்ளார்
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் குரல் எவ்வாறு வந்தது? என்று திண்டுக்கல் லியோனி சொல்லி உள்ளது, ஒருபக்கம் சர்ச்சையையும் மறுபக்கம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
பட்டிமன்ற பேச்சாளராக அறிமுகமாகி, பிறகு பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் திண்டுக்கல் ஐ.லியோனி... இப்போது திமுகவின் தலைமை கழக கொள்கை பரப்புச் செயலாளராகவும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராகவும் உள்ளார்..
இவரது பட்டிமன்றங்களில் சமீபகாலமாகவே, அரசியல் கருத்துக்களையும் கூறி வருகிறார்.. குறிப்பாக, பாஜக மற்றும் இந்துத்துவாவை கிண்டலடித்தும், சாடியும், விமர்சித்தும் லியோனி பேசி வருகிறார்...

புண்பட்டுடுச்சு
இதனால், லியோனி எங்கே பேசினாலும், உடனே அவர் மீது இந்துத்துவா அமைப்புகள் போலீசில் புகார் தந்துவிடுவார்கள்.. தங்கள் மத உணர்வுகளையும், கொள்கைகளையும் புண்படுத்துவதாகவும், திண்டுக்கல் லியோனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் தருவார்கள்.. இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் லியோனி பங்கேற்று பேசியுள்ளார்.. இது ஒரு மருத்துவ நிகழ்ச்சி என்று தெரிகிறது.. அந்த நிகழ்ச்சியில் குரல்களின் வளம் குறித்து பேசினார்.. அதன் சுருக்கம்தான் இது

வாய்ஸ்
'என்னுடைய பட்டிமன்ற கேசட்டில் முக்கியமான ஒரு விஷயத்தை சொல்லியிருப்பேன்.. ஒருத்தருக்கு குரல் எவ்வளவு முக்கியம் என்று சொல்லியிருப்பேன்.. ஏதாவது ஒரு இடத்தில் ஒருத்தருக்கு செல்வாக்கு இருக்கிறது என்றால், அதை நாம் எப்படி சொல்வோம்? அவருக்கு அங்கே "வாய்ஸ்" இருக்கு என்று தானே சொல்வோம்? ஆக, வாய்ஸ்க்கும் செல்வாக்கிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது... ஒரு குரலுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலும் உண்டு. அந்த கேசட்டில் நான் சொல்லியிருப்பேன், சிலருக்கு குரல் மாறியிருக்கும்.

வேணாம்ம்மா
ஆள் உயரமாக இருப்பார், பெரிய போலீஸ் அதிகாரியாக இருப்பார், ஆனால், அவரது குரல் பெண் குரல் போன்று கீச்சு குரலாக இருக்கும். போலீஸ் ஸ்டேஷனில் அவர் நிலைமையை கொஞ்சம் யோசித்து பாருங்கள். அதுபோல, பெண்கள் சிலருக்கு ஆண்கள் மாதிரியான குரல் இருக்கும். வீட்டிற்கு போனால், 'வாங்க காபி குடிப்போம்' என்பார்கள். உங்க குரலே இப்படி இருக்கே? அந்த காபி எப்படி இருக்குமோ? என்று காபியே வேணாம்ம்மா என்று சொல்லிவிடுவோம்.. அந்த அளவிற்கு இயல்பை மாற்றும் திறனை குரல் பெற்றுள்ளது...

குழாபுட்டு
ஆரம்ப காலத்தில் தியாகராஜர் பாகவதர் குரலை பார்த்தீர்கள் என்றால், ஆண், பெண் குரல் சேர்ந்து தான் இருக்கும். (எம்ஆர் குரலில் பேசுகிறார் லியோனி), பாரின்ல நீராவியிலும், ராக்கெட்டிலும், கப்பலை விட்டுட்டு இருக்கானுங்க.. நம்ம பயலுக இங்கே அதே நீராவியில் இட்லியும், குழாபுட்டும் செஞ்சு வாயிலே விடறான்.. எவன்டா நான் சொல்றதை கேக்குறான்... இப்படி ஒரு குரல்தான் எம்ஆர் ராதாவினுடையது..

புளியங்காய்
தியாகராஜர் பாகவதர் குரலை எடுத்துக் கொண்டால், ஆணும், பெண்ணும் கலந்த குரல் போல, அவரது குரல் இருக்கும்.. பி.யூ. சின்னப்பாவின் குரல் ஓரளவு ஆண்மை கலந்திருக்கும்.. ஆனாலும், அந்த குரல்களை தமிழக மக்கள் அளவுக்கு அதிகமாக ரசித்தார்கள்.. புளியங்காய் சாப்பிட்டு தன் தந்தையின் குரலை பெற்றுக் கொண்டவர் இன்றைய முதல்வர்.. தன்னுடைய தந்தையின் குரலை பெறுவதற்கு அப்படி ஒரு முயற்சியை எடுத்தார்.. அரசியல் குரல்கள் என்று எவ்வளவோ உள்ளன. இப்படிப்பட்ட குரல்கள் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம்! என்றார் லியோனி.












Click it and Unblock the Notifications