கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்.. அதிமுகவின் புதிய பொருளாளரானார் திண்டுக்கல் சீனிவாசன்
சென்னை: அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில் அவரது பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசனை இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ளார்.
Recommended Video
அதிமுக பொதுக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் 9.15 மணிக்கு வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வழிநெடுகிலும் எம்ஜிஆர், ஜெயலலிதா , எடப்பாடி பழனிச்சாமியின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த பொதுக் குழுவில் அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி எனறு குறிக்கும் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.

ஓபிஎஸ் இடம்
பேனர்களில் ஓபிஎஸ் படம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற தடை விதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிச்சாமி ஒன்றரை கோடி தொண்டர்களின் ஒற்றைத் தலைவன் என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

பொதுக் குழு
இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு எந்த தடங்கலுமின்றி இன்று கூடியது. அதில் 16 தீர்மானங்களை பொதுக் குழு நிறைவேற்றியது. மேலும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் இடைக்கால பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

ஒருங்கிணைப்பாளர் பதவிகள்
இந்த நிலையில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர. ஓபிஎஸ் அதிமுக பொருளாளராக பதவி வகித்து வந்தநிலையில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதால் அந்த பதவி காலியானது.

திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்
இதையடுத்து அந்த பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணை பிறப்பித்தார். பொருளாளர் பதவியில் இருந்த ஓபிஎஸ் முக்குலத்தோர் சமூகம் என்பதால் அந்த சமூகத்து மக்களையும் தொண்டர்களையும் திருப்திப்படுத்த அதே சமூகத்தை சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓபிஎஸ்ஸுக்கு பதில் திண்டுக்கல் சீனிவாசன்
இந்த நிலையில் இந்த பொதுக்குழுவில் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்படுகிறார். இன்றைய தினம் பொருளாளராக உள்ள ஓபிஎஸ்ஸை அப்பதவியிலிருந்து நீக்க எடப்பாடி தரப்பு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த பதவிக்கு புதியதாக ஒருவரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!











Click it and Unblock the Notifications