நான் சுத்திவளைச்சு பேச விரும்பல! திருமாவளவனிடம் நேரடியாகவே கேட்கிறேன்! நீங்கள் இந்துவா? விடாத பேரரசு
சென்னை : திருமாவளவனிடம் நேரடியாகவே கேட்கிறேன். நீங்கள் இந்துவா? இல்லை என்றால் கிறிஸ்தவரா? இல்லை எனக்கு எந்தமதமும் இல்லை நான் நாத்திகர் என்றால் அதையும் வெளிப்படையாகச் சொல்லுங்கள் என இயக்குனரும் பாஜக பிரமுகருமான பேரரசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கடந்த சில நாட்களுக்கு முன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் இந்து சமய அறநிலையத் துறையை சைவ சமய அறநிலையத் துறை என்றும், வைணவ சமய அறநிலையத் துறை என்றும் பிரித்திட வேண்டும் என பேசியிருந்தார்.
மேலும், இவ்விரு சமயங்களையும் இந்து சமயம் என்று ஆக்கியதன் மூலம் அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகள் நீர்த்துப்போகின்றன. அதாவது, சிவனியம், மாலியம் ஆகியவற்றை வைதிக மத கோட்பாடான சனாதனம் விழுங்கிவிட்டு மேலாதிக்கம் செய்கிறது" என கூறியிருந்தார்.

இயக்குனர் பேரரசு
திருமாவளவனின் இந்த கருத்து பலத்த விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரது பேச்சுக்கு இயக்குனரும் பாஜக பிரமுகருமான பேரரசு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,"திருமாவளவன் சொல்வதுபோல இந்து மதத்தை சைவம், வைணவம் என்று பிரித்துவிட்டு, தமிழகத்தை சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று பிரித்து விடுங்கள். மீண்டும் தெரு பெயர்களோடு சாதிப் பெயரையும் இணையுங்கள்.

திருமாவளவன்
சைவ, வைணவ காலத்தில் கிறிஸ்தவம், இஸ்லாம் இல்லை. அதனால், அந்த மதங்களை இந்தியாவில் இருந்து அகற்றி விடுங்கள். முக்கியமாக அப்போது திராவிடம் என்ற வார்த்தையே தமிழர்களிடம் இல்லை. அதனால் முதலில் அந்த வார்த்தையை எங்குமில்லாமல் செய்துவிடுங்கள். இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைத்து விடுங்கள். திருமாவளவன் சொல்வதுபோல நாம், 2000 ஆண்டுகளுக்கு முன் சென்றுவிடுவோம்." என கடுமையாக விமர்சித்து இருந்தார்.

ஆ.ராசா, சீமான்
இந்நிலையில் திருமாவளவனோடு, ஆ.ராசா, சீமான் ஆகியோரையும் பேரரசு விமர்சித்துள்ளார். வைணவம், சைவம் என்ற விஷயங்களை மக்களே மறந்து, இந்து என்ற ஒற்றுமைக்குள் வந்துவிட்டார்கள். சாதி ஒழிய வேண்டும், சமூக நீதி வேண்டும் என்று முற்போக்காக பேசும் திருமாவளவனின் சிந்தனை அதைவிட பிற்போக்காக இப்போது மாறிவிட்டது.

நீங்கள் இந்துவா?
திருமாவளவனிடம் நேரடியாகவே கேட்கிறேன். நீங்கள் இந்துவா? இல்லை என்றால் கிறிஸ்தவரா? இல்லை, எனக்கு எந்தமதமும் இல்லை, நான் நாத்திகர்என்றால் அதையும் வெளிப்படையாகச் சொல்லுங்கள். பிறகு இந்து மதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதும், கேலி கிண்டல் செய்வதும் இருக்கட்டும். ஆ.ராசா, சீமான் ஆகியோரிடமும் இதையே கேட்கிறேன். நீங்கள் என்ன மதம் என்று தெரியாமல் இந்து மதத்தை இழிவுப்படுத்தக் கூடாது. இதுவரை பொறுத்துக் கொண்டோம். இனி பொறுக்க மாட்டோம்" என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications