இந்த மாதிரி பெருந்தன்மை எல்லாம் இதுவரை நான் அரசியலில் பார்த்ததே இல்லை.. ஸ்டாலினுக்கு எஸ்ஏசி பாராட்டு
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்திருந்தால் முதல்வர் ஸ்டாலினின் செயல்களை பார்த்து ஆச்சர்யப்பட்டிருப்பார் என இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் அடிக்கடி அரசியல் தொடர்பான கருத்து மேடைகளில் பேசி வருகிறார். தன்னுடைய படங்களில் சொல்வதை போல் எதையும் வெளிப்படையாக பொதுவெளியில் உடைப்பவர் ஆவார்,
அவரது மகனும் நடிகருமான விஜய் உடன் அரசியல் விவகாரத்தில் வருத்தம் இருப்பதாக செய்திகள் உள்ளது. விஜய்க்கு ஆரம்பத்தில் படத்தில் நடிப்பதற்கு பல்வேறு இயக்குநர்களிடம் முயற்சி எடுத்த எஸ்ஏ சந்திரசேகர், அதற்கு தகுந்த சூழ்நிலை அமையாத காரணத்தால் அவரே அறிமுகப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மக்கள் சேவை
முதல் படம் சுமாராகப் போனநிலையில் அடுத்தடுத்து நல்ல படங்கள் வந்து, இன்றைக்கு விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் முக்கியமானவராக உள்ளார். தமிழகம் முழுவதும கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில நடிகர் விஜய்யின் வளர்ச்சியை அருகில் இருந்து பார்த்து வந்த எஸ்ஏசந்திரசேகர் , விஜய் வளர வளர அவரை அரசியலுக்கு அழைத்து வந்து மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என்று விரும்பி இருக்கிறார். சினிமாவில் எடுத்த முயற்சியை போல் விஜய்யை அரசியலிலும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சில முயற்சிகளை எடுத்திருக்கிறார்.

தந்தைக்கு தடை
ஆனால் இதில் விஜய்க்கு உடன்பாடு இல்லை. இதை விஜய்யும் வெளிப்படையாக அறிவித்தார். அத்துடன் தன் தந்தை அரசியல் ரீதியாக எடுத்த முயற்சிக்கு தடை போட்டதுடன், வெளிப்படையாக ரசிகர்களுக்கும் தனது தந்தையுடன் அரசியல் ரீதியாக எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிக்கையும் வெளியிட்டார். மேலும் தனது பெயரை பயன்படுத்தி அரசியல் செயல்பாடுகளை செய்யவும் தந்தைக்கு விஜய் தடை விதித்தார்.

பெருந்தன்மை
இந்நிலையில் சட்டசபை தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். ஸ்டாலின் செய்து வரும் பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக பாராட்டி உள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். இது தொடர்பாக அவர் கூறும் போது, கலைஞர் இருந்திருந்தால் ஸ்டாலின் செயல்களை பார்தது ஆச்சயர்ப்பட்டிருப்பார். அம்மா உணவகத்தின் பெயரைமாற்ற வேண்டாம் என சொன்னோரே.. இந்த மாதிரி பெருந்தன்மை எல்லாம் இதுவரை நான் அரசியலில் பார்த்ததே இல்லை" என்றார்.

ஆறு மாதம் ஆகிறது
முன்னதாக பிரபல தமிழ் வார இதழுக்கு பேட்டி அளித்த எஸ்ஏ சந்திரசேகர், "ஸ்டாலின் சார் மிக நல்ல முறையில் ஆட்சி செய்வதாக சொல்கிறார்கள். நண்பர்கள் மட்டத்தில் பேசும்போது அதே கருத்தைத்தான் கூறுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் உதயநிதிக்கு அடுத்த நாளே வாட்ஸ் ஆப்பில் வாழ்த்து தெரிவித்தேன். என்ன இருந்தாலும் முதல்வரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதற்காக அவரின் உதவியாளரிடம் அனுமதி கேட்டேன். கலைஞரை சந்திக்க வேண்டும் என்றால் ஒருமுறை அனுமதி கேட்டால், சில நாட்களிலேயே நம்முடைய தொலைபேசிக்கு கூப்பிட்டு இந்த நாளில் வர வேண்டும் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் ஸ்டாலினை பார்க்க அனுமதி கேட்டு 6 மாதம் ஆகிறது. இதுவரை கிடைக்கவில்லை" என்று கூறியிருந்தார்
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
ஆளுநர் ரவியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்! மே.வங்கத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் திடீர் மீட்டிங் -
ஆந்திர மாடல்.. விஜயை வைத்து பாஜக போட்ட பலே ப்ளான்! எண்ட் கார்டு போட்ட பனையூர்! அவ்வளவு தானா? -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
நாளை "ஜனநாயகன்" மறு தணிக்கை.. முடிவுக்கு வரும் விஜய் பட பஞ்சாயத்து.. அப்போ இந்த மாதமே ரிலீஸா? -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
Kiruthiga: பிரபலம் யார்னு கேட்ட கிருத்திகா! இதெல்லாம் லிஸ்ட்லேயே இல்லைனு சொன்ன கஸ்தூரி! "வினோதம்" -
“வொர்த் இல்லாத என் வாழ்க்கை?” - உடைந்த சங்கீதா.. இனி அமைதி காப்பதில் அர்த்தமில்லை.. வருது அணுகுண்டு! -
அதிமுகவை பின்னுக்கு தள்ளி விஜய் 2ம் இடம் வருவாரா.. ஜோதிமணி சொன்ன கருத்து! திருமாவளவன் கொடுத்த பதிலடி -
அது வேற வாய்.. பெண்களுக்கு உதவித் தொகை! விஜய் முன்னிலையிலேயே விமர்சித்த அருண் ராஜ்! இப்போ பேசுவாரா? -
கண்ணைக் காட்டிய உதயநிதி..அறிவாலயத்தில் குவிந்த வாரிசுகள்! 2026 தேர்தல் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்! -
தேர்தல் முடிந்ததும் அதிமுக பாஜக கண்ட்ரோலுக்கு போயிவிடும்.. நிதிஷ் நிலமைதான் எடப்பாடிக்கு.. ஸ்டாலின்












Click it and Unblock the Notifications