“ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்”.. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
சென்னை: டெல்லி குளிர் கால கூட்டத்தொடருக்கு போக தமிழச்சி தங்கபாண்டியனுக்காக ஒரு ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன் என இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையில் இருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நடந்து வருகின்றன. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட சிறிய பிரச்சினைகள் இருந்தாலும், அவை சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு வேகமெடுத்துள்ளது. காலை 9 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக தற்போதைய எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறார். தென் சென்னை மக்களவைத் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், ஜெயவர்தன், தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பல வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சென்னையில் பல்வேறு பிரபலங்கள் தென் சென்னை தொகுதியில் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தேசிய விருது பெற்ற தமிழ் சினிமா இயக்குநரான சீனு ராமசாமி, தேர்தல் தொடர்பாக ஒரு பதிவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பியாகி குளிர் கால கூட்டத்தொடருக்கு டெல்லி போக
ஒரு ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் சீனு ராமசாமி.

இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு:
'விருது'நகர் பெற்ற
விருது
மல்லாங்கிணறு
கிராமத்தின்
ஈரமுள்ள
தாய் மான்.
என் முதல் கவிதை நூல்
வெளியிட்டக் கவியரசி
மக்களோடு எந்நாளும் இருக்கும்
பேராசிரியர்
தில்லி குளிர் கால கூட்டத்தொடருக்கு போக
ஒரு ஸ்வெட்டர் வாங்கி அன்பளிப்பு வைத்திருக்கிறேன்.
விரைவில் சந்திப்பேன்.
வெற்றி வாழ்த்துகள்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி. மக்களின் யதார்த்த வாழ்வைப் பதிவு செய்யும் அவரது படங்கள் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications