எதாவது பண்ணுங்க.. சாப்பிடாமல் வருத்தம்.. பெயில் கிடைக்காததால் கலங்கிய செந்தில் பாலாஜி! அடுத்து என்ன?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெயில் மறுக்கப்பட்டு உள்ள நிலையில் அவர் அடுத்து என்ன செய்வார்.. அவரின் வழக்கில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
ஜூன் 13ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடந்தது.
மொத்தமாக 17 மணி நேரம் சோதனை நடந்தது. வீட்டோடு சேர்த்து தற்போது தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை செய்தனர். தலைமை செயலகத்தில் 10 மணி நேரம் சோதனை நடந்தது. அலுவலக உதவியாளர் விஜயகுமாரை அழைத்துக் கொண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் உள்ளதா? என்பதை கண்டறிய அதிகாரிகள் சோதனை செய்தனர்.

கைது செய்தனர்: 17 மணி நேரங்களுக்கு பின் அவர் வீட்டில் சோதனைகள் முடிந்தது. செந்தில் பாலாஜியின் சென்னை இல்லத்தில் 17 மணி நேர சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். சோதனை முடிந்த அவரின் வீட்டிற்கு உயரதிகாரிகள் வந்தனர். அவரை கைது செய்வது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டனர். அவர் காலையில் வாக்கிங் சென்ற போது தொடங்கிய ரெய்டு இரவு வரை நீடித்தது.
இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றபோது நெஞ்சில் கைவைத்து வலிப்பதாக கூறி அவர் காரில் படுத்ததால் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று இருக்கிறார்கள்.

பைபாஸ்: அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. நெஞ்சை பிடித்துக்கொண்டு காரில் படுத்துக்கொண்டு செந்தில் பாலாஜி அழுது இருக்கிறார். உடனே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
முகத்தை கையால் மூடிக்கொண்டு மற்றொரு கையில் நெஞ்சை பிடித்துக்கொண்டு செந்தில் பாலாஜி கடுமையாக சத்தம் போட்டார். அவர் சோகமாக அழுத காட்சிகளும் வெளியாகின. இதையடுத்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இன்னொரு பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்ட நிலையில்தான் செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன்படி என் கணவரை காணவில்லை அல்லது அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அதனால் அவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி மனைவி மேகலா தனியாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார். ஆனால் இதிலும்.. இதன் மேல்முறையீட்டு மனுவில் கூட செந்தில் பாலாஜிக்கு எதிராக தீர்ப்பு வந்தது.

ரிமாண்ட் உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இப்படி ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட பின் மனுதாரர் ஹேபியஸ் கார்பஸ் மனுவை எப்படி போட முடியும். ஒரு நீதிபதி ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் கொடுத்துவிட்டார். நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மனு கேட்டு இவர்கள் மனு தாக்கல் செய்துவிட்டனர். மனுதாரர் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது, அவர் காவலை ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தம். அவர் காவலை ஏற்றுக்கொண்ட நிலையில் எப்படி இப்போது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும் என்று அமலாக்கத்துறை வைத்த வாதங்கள் அனைத்தும் வெற்றிபெற்றன.
கஸ்டடி: விசாரணையின் முடிவில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. செந்தில் பாலாஜி கைதுக்கு பின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறி உள்ளது. அவர் கைது செய்யப்பட்டதுடன், நீதிமன்ற காவலில் கொண்டு செல்லப்பட்டு விட்டார். அதன்பின் 5 நாட்கள் அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுக்கப்பட்டார். அங்கே அவரிடம் 10 ஆயிரம் கேள்விகள் வரை கூட கேட்கப்பட்டது.
விடுதலை ஆகவில்லை: அதன்பின் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். ஜூன் 14ம் தேதி சிறைக்கு போன செந்தில் பாலாஜி இப்போது வரை விடுதலை ஆகவில்லை. அதிலும் இன்று சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் செய்து செய்யப்பட்ட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 8வது முறையாக நீட்டிக்கப்பட்டு, அக்டோபர் 20 வரை சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், இரண்டு முறை ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில் செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் (அக்டோபர் 16ல்) விசாரித்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அறிக்கையை சுட்டிக்காட்டி, மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும், நீதிமன்றமே ஒரு மருத்துவரை நியமித்து செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்து ஆய்வு செய்யலாம் எனவும் வாதிட்டார்.
வேலை பெற்று தருவதாக கூறி ஒரு கோடியே 34 லட்சம் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் 10 ஆண்டுகளில் அவருடைய வங்கி கணக்குகளையும், வருமான வரி கணக்கில் இருந்தும், அவர் குற்றமற்றவர் என்பது நிரூபணமாவதாகவும், உள் நோக்கத்துடன் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.
அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் சேகரிக்கப்பட்ட தகவலின்படி, வேலை பெற்று தருவதாக கூறி 67 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டது.
மேலும், செந்தில் பாலாஜி, ஆரோக்கியமாக இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியாது என ஏற்கனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், ஸ்டான்லி மருத்துவர்களின் அறிக்கைகளும் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அவசியம் என குறிப்பிடவில்லை எனவும் வாதிடப்பட்டது.
செந்தில் பாலாஜி: செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், ஜாமீன் வழங்கினால் காட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்த நிலையில், இன்று தீர்ப்பளித்தார்.
( ஸ்டாலின் போட்ட கையெழுத்து.. வீடு தேடி வரும் பணம்.. மகளிர் உரிமைத்தொகையை விடுங்க.. அடுத்த சர்ப்ரைஸ்)
நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த தீர்ப்பில், மருத்துவ காரணங்களை கூறி ஜாமின் கேட்க முடியாது என்றும், அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவாகியுள்ளதை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றும், சோதனைக்கு சென்று அதிகாரிகள் தாக்கப்பட்டது தொடர்பான கடந்த சம்பவங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறி, செந்தில்பாலாஜியின் ஜாமின் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நாளையுடன் (அக்டோபர் 20) முடிவடைவதால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்படுவார். அவரின் காவல் மேலும் நீட்டிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
செந்தில் பாலாஜி முன் உள்ள ஆப்ஷன்: தற்போது செந்தில் பாலாஜி முன் உள்ள ஆப்ஷன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது மட்டுமே. அதே சமயம் அவருக்கு கால்வலி, உடல்வலி, போதிய உணவு இன்றி கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிலும் பெயில் கிடைக்காத காரணத்தால்.. ஏதாவது பண்ணுங்க என்று விரக்தியில் தனது வழக்கறிஞர்களிடம் அவர் கூறியதாகவும் தெரிகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications