சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கீழ உக்காருங்க! குறவர் பெண்கள் மீண்டும் அவமதிப்பு! சர்ச்சையில் மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவில்!

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் அன்னதானம் வழங்குவதில் நரிக்குறவ பெண்களிடம் மீண்டும் பாகுபாடு காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், அதனை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் கண்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறவர் இன மக்கள் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த போதும் அரசு சார்பில் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

உலகம் எத நோக்கி போகுதுனே தெரியலயே! 5 வயது சிறுமியை சிதைத்த 13 வயது சிறுவன்! அதென்ன டோலி இன்காபாக்ஸ்? உலகம் எத நோக்கி போகுதுனே தெரியலயே! 5 வயது சிறுமியை சிதைத்த 13 வயது சிறுவன்! அதென்ன டோலி இன்காபாக்ஸ்?

கடந்த சில மாதங்களுக்கு முன் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த இருளர் மற்றும் குறவர் இன மக்கள் அங்குள்ள கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர்கள் கோயிலில் நடைபெறும் அன்னதானத்தில் சாப்பிடக் கூட அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறவர் மக்களுக்கு அன்னதானம்

குறவர் மக்களுக்கு அன்னதானம்

இதனையடுத்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பூஞ்சேரி கிராமத்திற்கு வந்து கோயிலை பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து கோவில் வளாகத்தில் குறவர் இன மக்களுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார். தொடந்து அந்த மக்களுக்கு வீட்டுமனை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இது பெரும் வரவேற்பை பெற்றது.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில் சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையையும் சமூகத்தின் மாண்பையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி என்றும் அவர்களுக்குத் தேவையான மரியாதையை மீட்டுத் தர ஆட்சிப் பொறுப்பு ஒரு பெரும்வாய்ப்பு எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அதோடு நேரடியாக தானே சென்று குறவர் இன மக்கள் வீட்டில் சாப்பிட்டதோடு, அம்மக்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

மீண்டும் சர்ச்சை

மீண்டும் சர்ச்சை


இந்நிலையில் அன்னதானம் வழங்குவதில் நரிக்குறவ பெண்களிடம் மீண்டும் பாகுபாடு காட்டப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதனை திமுக எம்எல்ஏ உடனடியாக கண்டித்தும் உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் அன்னதானம் வழங்குவதில் நரிக்குறவ பெண்களிடம் மீண்டும் பாகுபாடு காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு இதே கோவிலில் நரிக்குறவ பெண்களை அன்னதானத்தில் இருந்து விரட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அதே கோவில் அன்னதானத்தில் நரிக்குறவ பெண்கள் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட வைத்த கொடுமை அரங்கேறியுள்ளது.

நிர்வாகத்திற்கு எச்சரிக்கை

நிர்வாகத்திற்கு எச்சரிக்கை

இந்நிலையில் தற்போதும் அதே கோவிலில் அன்னதானம் வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாக புகார் எழுந்த நிலையில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து கோவில் நிர்வாகிகளையும், மேலாளரையும் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி கண்டித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நரிக்குறவ பெண்களை தரையில் அமர்ந்து இனிமேல் உணவு சாப்பிட வைக்க கூடாது எனக் கூறிய அவர் அனைவரையும் சரிசமமாக நடத்தி மேசையிலே அன்னதானம் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

English summary
It has been reported that the Thiruporur mla balaji has condemned the complaint that discrimination is being shown to the narikuruavar women in giving alms at the Mamallapuram Thalasayana Perumal temple in Chengalpattu district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X