தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை.. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை.. நான்கு நாள் விடுமுறை?
சென்னை: வரும் தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 21 ம் தேதி அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், ஈடு செய்யும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, முதல்வருக்கு கோரிக்கை அனுப்பினார். இதேபோல் தலைமை செயலகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் உள்பட பலரும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை அரசு ஏற்றுக்கொண்டது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு தமிழ்நாட்டில் நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்துளளது.
முன்னதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில் கூறுகையில், தீபாவளி பண்டிகை வரும், 20ல், நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாளை மாலையே (வெள்ளிக்கிழமை மாலையே) அனைத்து பள்ளிகளில் இருந்தும், விடுதிகளில் தங்கி படித்து வரும் வெளியூர் மாணவ, மாணவியர் மற்றும் வெளியூரில் தங்கி பணியாற்றி வரும் ஆசிரியர்களும், தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்றுவிடுவார்கள் .

தீபாவளி பண்டிகையை பொறுத்தவரை, பகலை விட இரவு நேரத்தில் தான் வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் வண்ண, வண்ண பட்டாசு வகைகளை வெடித்தும், அதை கண்டுகளித்தும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய நேரம் ஆகும்.
எனவே தீபாவளி அன்று இரவு பெரும்பாலான மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களும் தங்கள் சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையை அவசரம், அவசரமாக கொண்டாடிவிட்டு, திரும்பவும் தாங்கள் படிக்கும் அல்லது பணிபுரியும் பள்ளிகள் சார்ந்த ஊருக்கு இரவோடு இரவாக பயணப்பட்டு செல்வதில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது
எனவே தீபாவளிக்கு மறுநாள், அதாவது அக்டோபர் 21ம் தேதி அன்று (செவ்வாய்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறையாக இருந்தால், மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் என அனைவரும், போக்குவரத்து நெரிசலின்றி பயணம் செய்து, தங்கள் பள்ளி சார்ந்த வசிப்பிடங்களுக்கு வந்து சேர்வர். அவற்றை கருத்தில் கொண்டு, வரும், அக்டோபர் 21ல், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஈடு செய்யும் விடுமுறை வழங்க வேண்டும். அதற்கு பதில் வேறொரு நாளை ஈடு செய்யும் பணிநாளாக அறிவிக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்
ஆசிரியர்கள் மட்டுமின்றி தலைமை செயலகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் உள்பட பலரும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்று அரசு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு அதிகம் ஆகும். தமிழ்நாட்டை பொறுத்தவரை தீபாவளிக்கு மறுநாள் அதிகாரப்பூர்வ பொது விடுமுறை கிடையாது.
ஆனால் அரசு ஒவ்வொரு ஆண்டும் மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் விடுமுறை அறிவித்து வருகிறது. அந்த கையில் இந்த முறையும் கோரிக்கையை எற்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்த காரணத்தால், சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் (அக்டோபர் 18, 19, 20, 21) ஆகிய நான்கு நாட்கள் விடுமுறை பள்ளி மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு அக்டோபர் 17ம் தேதி அன்று மாலை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு 21-ந்தேதி அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25-ந்தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications