நெருங்கும் தீபாவளி பண்டிகை! பிரபல இனிப்பு கடைகளுக்கு டஃப் கொடுக்கும் ஆவின்! விலை பட்டியல் தெரியுமா?
சென்னை: தீபாவாளி பண்டிகை நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் இப்போதே இனிப்புக் கடைகளில் ஆர்டர்கள் பெறப்பட்டு வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
ஆவின் இனிப்புகள் பற்றியும் அதன் விலை பட்டியல் குறித்தும் நாம் ஏற்கனவே ஒன் இந்தியா தமிழில் ஒரு மாதத்துக்கு முன்பே செய்தி வெளியிட்டுள்ள போதும், காலத்தின் தேவை கருதி அது தொடர்பான விவரத்தை மீண்டும் இப்போது பதிவு செய்யுமாறு வாசகர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை வந்தது.
இதனால் ஆவினில் விற்பனை செய்யப்படும் இனிப்புகள் மற்றும் அதன் விலை பட்டியல் விவரத்தை மீண்டும் ஒருமுறை தொகுத்து வழங்கியுள்ளோம்.

இனிப்பு வகைகள்
1) நெய் பாதுஷா [ GHEE BADUSHA ] -250 கிராம் ரூ.190
2) நட்ஸ் ஹல்வா [ NUTS HALWA ] -250 கிராம் ரூ.190
3) ஸ்டப்டு மோதிபாக் [ STUFFED MOTIPAK ] -250 கிராம் ரூ. 180
4) காஜு பிஸ்தா ரோல் [ KAJU PISTA ROLL ] -250 கிராம் ரூ. 320
5) காஜு கத்லி [ KAJU KATLI ] -250 கிராம் ரூ. 260
6 ) வகைப்படுத்தப்பட்ட இனிப்பு வகைகள் [ ASSORTED PACK ] -500 கிராம் ரூ.450
7) நெய் அல்வா [ GHEE HALWA ] -250 கிராம் ரூ.125
8) கருப்பட்டி அல்வா [ KARUPATTI HALWA] -250 கிராம் ரூ. 170
9) மிக்ஸர் ( MIXTURE ) -200 கிராம் ரூ.100

ஆவின் நெய்
இந்த இனிப்புகள் அனைத்தும் ஆவின் அக்மார்க் நெய்யினால் தயாரிக்கப்படுகிறது. நெய் பாதுஷா, நட்ஸ் ஹல்வா, ஸ்டப்டு மோதிபாக், காஜு பிஸ்தா ரோல், காஜு கத்லி மற்றும் வகைப்படுத்தப்பட்ட இனிப்புகள் சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் தயாரிக்கப்பட்டு பிரத்யேகமான முறையில் (Modified Atmospheric Packing) பேக் செய்யப்படுகிறது. இதனால் இனிப்பு வகைகளை கூடுதல் நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

பால் பண்ணை
கருப்பட்டி அல்வா விருதுநகர் ஒன்றியத்திலும் நெய் அல்வா திருநெல்வேலி ஒன்றிய பால் பண்ணையிலும் தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்தும் தமிழகம் முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், சாலை சந்திப்புகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களை தேர்வு செய்து சிறப்பு விற்பனை மையங்கள் மூலமாகவும் பொது மக்களுக்கு சில்லறை விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்டர்கள் வரவேற்பு
மேற்கண்ட இனிப்பு வகைகளை மொத்தமாக ஆர்டர் செய்ய பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொள்ளலாம். சென்னை தலைமை அலுவலகம் - 7358018395, சென்னை (தெற்கு மண்டலம்) - 7358018391, சென்னை (வடக்கு மண்டலம்) - 7358018392
சென்னை (மத்திய மண்டலம்) - 7358018393 இதர மாவட்டங்கள் - 7358018396, வாட்ஸ் ஆப் எண் - 7358018390, கட்டணமில்லா எண் - 18004253300 மேலும் கூடுதல் தகவல்களுக்கு 18004253300 என்ற அலைபேசி எண்ணை 24X7 தொடர்பு கொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications