விஜயகாந்த் மறைவு.. அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து
சென்னை: விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சினிமா உலகிலும் அரசியலிலும் முத்திரை பதித்த விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 71. விஜயகாந்த் மரண செய்தியை கேட்டு பிரேமலதா உடைந்து போனார். துக்கம் தாங்காமல் கண்ணீர்விட்டு கதறி அழுதார். மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் பிரேமலதாவை ஆறுதல்படுத்தினார்கள். தேமுதிகவினரும் என்று கண்ணீர்விட்டு கதறினார்கள்.

இந்த நிலையில் விஜயகாந்த் உடல் சாலிகிராமம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தேமுதிக அலுவலகத்திற்கு விஜயகாந்த் உடல் வருகிறது என தெரிந்தவுடன் லட்சக்கணக்கான தொண்டர்கள் அங்கு குவியத் தொடங்கினர். விஜயகாந்த் ஊர்வலம் சாலிகிராமத்திலிருந்து கோயம்பேடு வர 4 மணி நேரம் எடுத்துக் கொண்டது.
கோயம்பேடு அலுவலகத்தில் விடிய விடிய பொதுமக்கள், ரசிகர்கள், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். கோயம்பேடு பகுதி நெரிசல் மிக்கது என்பதால் விஜயகாந்த் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடல் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, இன்று காலை 4.50 மணிக்கு விஜயகாந்தின் உடல் கட்சி அலுவலகத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி பயணத்தை தொடங்கியது.
ஆம்புலன்ஸ் வாகனத்தில் விஜயகாந்த் உடலுடன் பிரேமலதா, சுதீஷின் மனைவி ஆகியோர் செல்கிறார்கள். தொண்டர்கள் கேப்டன் கேப்டன் என கதறி அழுதனர். இதையடுத்து தீவுத்திடலில் இருந்து கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் மதியம் 1 மணிக்கு கிளம்பி பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக வளாகத்தில் இன்று மாலை 4.45 மணிக்கு அரசு மரியதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படுகிறது.
இதனிடையே, விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைவர் இராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் அனைவரையும் ஒருங்கிணைத்தவர்.
திரைப்படத் தயாரிப்பாளர்களை "முதலாளி" என அன்போடு அழைத்தவர் விஜயகாந்த். தமிழ் திரை உலகின் நலனுக்காக உழைத்தவர். தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கும் தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் நலத்திட்டங்கள் வழங்கி மகிழ்ந்தவர். அவரது மறைவு பேரிழப்பாகும்.
அவரது குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். மனித நேய மிக்க கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்து அவரது இறுதி பயணத்தில பங்கேற்போம்" என்று கூறப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications