சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரெடியா இருங்க.. தேமுதிக அனுப்பிய மெசேஜ்.. அதிமுகவுடன் "பிரேக்-அப்" செய்த மறுநாளே இப்படியா?.. பரபர!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் கூட்டணியில் இருந்து வெளியேறிய மறுநாளே தேமுதிக தங்கள் கட்சியில் இருக்கும் மாவட்ட செயலாளர்களுக்கு முக்கியமான மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளது.. தேமுதிக இதனால் என்ன திட்டத்தில் உள்ளது என்று அக்கட்சியின் தொண்டர்கள் இடையே கேள்வி எழுந்துள்ளது.

நாங்க கேட்ட இடம் எங்களுக்கு கிடைக்கவில்லை.. எங்களுக்கு தன்மானம் முக்கியம் இல்லை.. சிங்கம் களமிறங்கிவிட்டது .. அதன் வலிமை இனிதான் தெரியும் என்று கூறிவிட்டு அதிமுகவின் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறிவிட்டது. இனியும் கூட்டணியில் எங்களால் நீடிக்க முடியாது என்று தேமுதிக இந்த முடிவை எடுத்துவிட்டது.

தேமுதிக 25+ தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட்டை கேட்ட நிலையில் அதிமுக 13 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முன்வந்தது. இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக மொத்தமாக வெளியேறி உள்ளது.

எப்படி

எப்படி

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி 20 நிமிடங்கள் ஆவதற்கு முன்பே தேமுதிக தலைவர்கள் அதிமுக தலைவர்களை விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர். நேற்று விஜய பிரபாகரன், சுதீஷ் என்று தேமுதிக தலைவர்கள் எல்லோரும் அதிமுக தலைவர்களை கடுமையாக பேசினார்கள். அதிமுக தலைவர்களுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் வைத்தனர் .

சிக்கல்

சிக்கல்

இந்த நிலையில் தேமுதிக அடுத்த என்ன செய்யும் என்பதே தற்போது கேள்வியாக உள்ளது. மக்கள் நீதி மய்யத்தோடு கூட்டணி வைக்குமா அல்லது அமமுகவோடு கூட்டணி வைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இரண்டு கட்சிகளுடனும் தேமுதிக தற்போது கூட்டணிக்காக பேசி வருகிறது. அதிக இடங்களை கேட்கலாமா என்ற திட்டத்தில் தேமுதிக இருக்கிறது.

நிலைமை

நிலைமை

நிலைமை இப்படி இருக்க தேமுதிக மாவட்ட செயலாளர்களுக்கு நேற்று கட்சி தலைமை மூலம் முக்கியமான மெசேஜ் ஒன்று சென்றுள்ளது. அதன்படி மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் தயாராக இருக்க வேண்டும். 234 தொகுதியிலும் நாம் போட்டியிட்டாலும் போட்டியிட வாய்ப்புள்ளது. தனியாக நிற்கவும் வாய்ப்பு உள்ளது.

தயார்

தயார்

இதனால் மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகலாம் என்று தேமுதிக கூறியுள்ளது. இதையடுத்து நேற்று தேமுதிக நடத்திய இரவு நேர மீட்டிங் ஒன்றில் வேட்பாளர்களை முதற்கட்டமாக அறிவிப்பது தொடர்பாக பேசப்பட்டுள்ளது.

தயார்

தயார்

இதனால் மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகலாம் என்று தேமுதிக கூறியுள்ளது. இதையடுத்து நேற்று தேமுதிக நடத்திய இரவு நேர மீட்டிங் ஒன்றில் வேட்பாளர்களை முதற்கட்டமாக அறிவிப்பது தொடர்பாக பேசப்பட்டுள்ளது.

வேட்பாளர்

வேட்பாளர்

140 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை தேமுதிக இன்று வெளியிடலாம் என்ற திட்டத்தில் தேமுதிக இருப்பதாக தகவல்கள் வருகிறது. சிறிய கட்சிகளோடு கூட்டணி குறித்து பேசலாம். ஆனாலும் 140 தொகுதிக்கு வேட்பாளர்களை ரெடியாக வைக்கலாம் என்று தேமுதிக பிளான் போடுவதாக தகவல்கள் வருகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய மறுநாளே வேட்பாளர் பட்டியலை தேமுதிக வெளியிட நினைப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
DMDK plans to announce candidates for 140 seats after leaving the AIADMK alliance yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X