உடனே டெஸ்ட் எடுக்கணும்.. சுகாதாரத்துறை நோட்டீஸ்.. விரைந்து சென்ற பிரேமலதா.. விருத்தாச்சலத்தில் பரபர
சென்னை: விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா இன்று கொரோனா சோதனை செய்து கொண்டார்.
அமமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் தேமுதிக தற்போது தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது . அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 2011ல் தேமுதிக வென்ற 29 தொகுதிகளில் 12 தொகுதிகளில் தேமுதிக மீண்டும் போட்டியிடுகிறது.
தேமுதிகவுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டதால் 42 வேட்பாளர்களை அமமுக திரும்ப பெற்றுள்ளது.

அமமுக
அமமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் தேமுதிக சார்பாக பொருளாளர் பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட உள்ளார். 2006 சட்டசபை தேர்தலில் விருத்தாச்சலத்தில்தான் விஜயகாந்த் 40%+ வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். இதனால் அதே இடத்தில் சென்டிமென்ட்டாக பிரேமலதாவும் போட்டியிடுகிறார்.

போட்டி
இந்த நிலையில் கடந்த 18ம் தேதி பிரேமலதா விஜயகாந்த் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார். இவருடன் சுதீஷ் மற்றும் சுதீஷ் மனைவி ஆகியோரும் உடன் சென்றனர். இவர்கள் இருவருக்கும் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விதிப்படி பிரேமலதாவிற்கும் கொரோனா சோதனை செய்ய வேண்டும்.

சோதனை
இதனால் பிரேமலதாவிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். உங்கள் உறவினர்களுக்கு கொரோனா. நீங்கள்தான் நேரடி காண்டாக்ட். அதனால் பிரச்சாரத்திற்கு செல்லும் நீங்கள் கொரோனா சோதனை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தது.

மறுப்பு
ஆனால் நேரில் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைத்தும் கூட பிரேமலதா வரவில்லை. இரண்டு முறை அதிகாரிகள் நேரில் சென்று அழைத்தும் கூட பிரேமலதா வரவில்லை . பிரச்சாரத்தை காரணம் காட்டி இவர் மறுத்துவிட்டார். நேற்று நேரில் சென்று அழைத்த சுகாதாரத்துறை அதிகாரிகளை தேமுதிக நிர்வாகிகள் உள்ளேயே விடவில்லை.

சதி
இதையடுத்து பிரேமலதா விஜயகாந்திற்கு கடலூர் மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பாக இன்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று மதியம் விருதாச்சலம் புறவழி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா சோதனை செய்யாமல் இவர் இத்தனை நாட்கள் பிரச்சாரம் செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications