மக்கள் யாருக்கும் விருப்பமில்லை...வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள் - விளாசிய பிரேமலதா
ஏன் இன்று வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது தெரியுமா? மக்களுக்கே இந்த ஜனநாயக தேர்தலின் மீது நம்பிக்கை இல்லை என்பதே காரணம் என்று பிரேமலதா கூறியுள்ளார்.
சென்னை: ஏன் இன்று வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது தெரியுமா? மக்களுக்கே இந்த ஜனநாயக தேர்தலின் மீது நம்பிக்கை இல்லை என்பதே காரணம் என்று தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். ஓட்டுக்கு காசு கொடுத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
சென்னை போன்ற பெரிய மாநகராட்சிகளில் வாக்குப்பதிவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மந்தமான நிலையில் வாக்குகள் பதிவாகி வருகின்றன. காலை 7 மணி தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும். இன்னும் சில மணிநேரங்களே உள்ளன. குறைவான அளவு வாக்காளர்களே வந்து வாக்களித்து வருகின்றனர்.

பிரேமலதா வாக்களித்தார்
இதற்கான காரணம் என்ன என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்தார். அவருடைய மகன்கள் சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோரும் வாக்களித்தனர்.

நம்பிக்கை இல்லை
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, "ஏன் இன்று வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது தெரியுமா? மக்களுக்கே இந்த ஜனநாயக தேர்தலின் மீது நம்பிக்கை இல்லை என்பதே காரணம். ஓட்டுக்கு காசு கொடுத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிடுகின்றனர்.

வெறுப்பின் உச்சம்
இதனால் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்ற மனவேதனை மற்றும் வெறுப்பின் உச்சம்தான் இன்று யாருமே வாக்களிக்க வரவில்லை. நான் பிரச்சாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் மக்களிடம் ஒரு வெறுப்பை பார்க்க முடிந்தது என்று கூறினார்.

வாக்களிக்கப் பணம்
மக்கள் யாருக்கும் விருப்பமில்லை. ஒவ்வொரு முறை தேர்தல் வந்தால், வாக்களிக்க பணம் கொடுக்கிறார்கள், கொடுக்கின்ற எந்த வாக்குறுதியும் நிறைவேற்றுவது இல்லை. இதுக்கு எதற்கு வாக்காளிக்க செல்ல வேண்டும் என்ற வெறுப்பின் உச்சத்தை என்னால் பார்க்க முடிந்தது என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications