சிக்கலில் சிக்கிய பிரேமலதா..கழுதை தேய்ந்து கட்டெறும்பான தேமுதிக! டிமாண்டால் எரிச்சலான திமுக -அதிமுக
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசியலில் ஒரு காலத்தில் முக்கிய சக்தியாக பார்க்கப்பட்ட தேமுதிக, தற்போது கூட்டணி அமைப்பதில் பெரும் குழப்பத்தில் சிக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தேர்தல் நேரம் நெருங்கியபோதும், எந்த அணியில் சேருவது என்பதில் தெளிவான முடிவை எடுக்க முடியாமல், கட்சித் தலைமை காத்திருக்கும் நிலைதான் இப்போது தொடர்கிறது.
2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக எதிர்க்கட்சியாக உயர்ந்தது. அப்போது விஜயகாந்த் தலைமையிலான அந்த கட்சி, தமிழக அரசியலின் மாற்று சக்தியாகவே பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் நடந்த தொடர் தேர்தல்களில் அந்த வெற்றி தொடரவில்லை.
பல்வேறு கூட்டணிகளில் இடம் பெற்றாலும், ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாத சூழல் உருவானது. இதன் உச்சமாக, கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் இணைந்த தேமுதிக, ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது.

தேமுதிக கூட்டணி குழப்பம்
விருதுநகரில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் மட்டும் இறுதி கட்டம் வரை போராடி வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். அந்த தேர்தலுக்குப் பிறகும் அதிமுகவுடனான உறவு தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜ்யசபா இடம் வழங்கப்படாதது தேமுதிக தலைமையில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக அதிமுகவிலிருந்து விலகிச் செல்ல தொடங்கிய தேமுதிக, திமுகவின் பக்கம் மெதுவாக சிக்னல் அனுப்பத் தொடங்கியது. இரு அணிகளுடனும் பேச்சுவார்த்தைக்கு கதவுகள் திறந்திருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியதும் கவனம் பெற்றது.
பிரேமலதா விஜயகாந்த்
இந்நிலையில், திமுகவும் அதிமுகவும் தங்கள் கூட்டணி வாய்ப்புகளை பெரும்பாலும் இறுதி செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும் பல குழப்பங்கள் தீர்க்கப்பட்டன. இதனால் தேமுதிக, எப்படியும் ஒரு பெரிய கூட்டணியில் இணைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இதுவரை யாரும் எங்களை கூட்டணி பேச்சுவார்த்தைக்கே அழைக்கவில்லை என்று பிரேமலதா வெளிப்படையாக கூறியது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேமுதிக தொகுதி பங்கீடு
தேமுதிக மீது பெரிய கட்சிகள் தயக்கம் காட்டுவதற்கான காரணமாக, அதிகமான தொகுதி கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாக பேசப்படுகிறது. ஆரம்பத்திலேயே இருபது சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் என்ற நிபந்தனையுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியதால், திமுகவும் அதிமுகவும் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதற்கிடையில், மாநில மாநாட்டில் பிரேமலதாவை துணை முதல்வராக்குவோம் என எல்.கே.சுதீஷ் பேசியதும், நாங்கள் இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது" என்ற கட்சித் தலைவர்களின் கருத்துகளும், இரு பெரிய கட்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதிமுக தேமுதிக பேச்சுவார்த்தை
அதிமுக தரப்பில் அதிகபட்சமாக 6 முதல் 10 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்றும், திமுக தரப்பில் அதைவிட குறைவான எண்ணிக்கையே சாத்தியம் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. ராஜ்யசபா இடம் குறித்து எந்த தரப்பும் உறுதியான வாக்குறுதி அளிக்கவில்லை. இதனால், குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொள்வதா அல்லது கூட்டணியே வேண்டாமா என்ற இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய சூழலில் தேமுதிக சிக்கியுள்ளது. தனித்து போட்டியிடும் வாய்ப்பை முற்றாக நிராகரித்துள்ள பிரேமலதா, கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
தவெக
தவெக பக்கம் செல்வது ஒரு மாற்று வாய்ப்பாக பேசப்பட்டாலும், அது நடைமுறையில் சாத்தியமற்றதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில், கூட்டணி முடிவே எடுக்கப்படாத நிலையில், விருதுநகர் அல்லது சிவகாசி தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என சொல்லி தேமுதிக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பின்னாலும் அரசியல் கணக்குகள் இருப்பதாக பேசப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தல்
2026 சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதி உறுதி செய்யப்படுகிறதோ, அதன்படி கூட்டணி எந்தப் பக்கம் என்பது தெரியவரும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. எல்லா கட்சிகளுமே எங்களுக்குத் தோழமைக் கட்சிகள்தான் என்று சமீபத்தில் பிரேமலதா கூறியிருந்தாலும், அந்த தோழமையை அதிகாரப்பூர்வ கூட்டணியாக மாற்ற எந்தக் கட்சியும் இதுவரை முன்வராததே, தேமுதிக எதிர்கொள்ளும் மிகப் பெரிய அரசியல் சவாலாக மாறியுள்ளது.
-
திருமாவளவனுக்கு தெரியும்.. சீட் கொடுக்காதது பற்றி உடைத்து பேசிய ஆளூர் ஷாநவாஸ்! -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
1000 சவரன் தங்க நகை, மகளுக்கு கடன்! விஜய்யின் சொத்து பத்திரத்தில் முரண்பாடு? திமுக புள்ளி கூறுவதென்ன -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
‘கேமரா'வில் போட்டி.. வீரப்பன் மனைவிக்கு வாய்ப்பு..100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவாக -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
கோவையை கைவிட்ட கம்யூனிஸ்டுகள்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலேயே இப்படி நடப்பது இதுதான் முதல்முறை! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்












Click it and Unblock the Notifications