DMDK Premalatha: லாஸ்ட் மினிட்டில் தேமுதிக எடுக்கும் "ஒற்றை" முடிவு! மெகா கூட்டணியை அலறவிடும் பிரேமலதாவின் ரகசிய மூவ்
சென்னை: பிரதான கட்சிகள் பெருமளவு கூட்டணிக்குள் ஐக்கியமாகி விட்ட நிலையில் சில கட்சிகள் மட்டும் இன்னும் கூட்டணி தடுமாற்றத்திலேயே உள்ளன.. அதில் முக்கியமானது தேமுதிக கட்சி.. பொங்கல் முடிந்து பல நாள் ஆகிவிட்டது.. இன்னும் எந்த பதிலையும் பிரேமலதா விஜயகாந்த் சொல்லவில்லை.. அவர் கூட்டணி தொடர்பாக என்ன அறிவிக்க போகிறார்? என்பதே கேப்டன் விஜயகாந்தின் தீவிர தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது..!
தேமுதிகவை எடுத்து கொண்டால், விஜயகாந்த் இல்லாத முதல் பொதுத் தேர்தலை சந்திக்க போகிறது.. இப்போதைக்கு அந்த கட்சிக்கு வெறும் 2% வாக்குகள் மட்டுமே இருப்பதாக கணிக்கப்படுகிறது.. அப்படியிருந்தும்கூட, திமுக, அதிமுக, தவெக என மும்முனைகளில் இருந்தும் அழைப்புகள் வரத்தான் செய்கின்றன..

தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்
இதற்கு காரணம், தங்களின் பலத்தைவிட, தங்களை எதிரணிக்கு செல்லவிடாமல் தடுப்பதில்தான் இந்த கட்சிகள் குறியாக இருக்கின்றன. இதை புரிந்துகொண்டதால்தான் தேமுதிக தலைமைவும் முடிந்தவரை அதிக இடங்களைப் பேரம் பேசி வாங்கும் முனைப்பில் இழுத்தடித்து கொண்டிருக்கிறது.
வெறும் வேட்பாளராக போட்டியிடுவதை விட, "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு" என்ற முழக்கத்தை தேமுதிக முன்னிறுத்துவது, கூட்டணி உடனே அமையாமல் இருக்க காரணமாக கருதப்படுகிறது.. இனிவரும் காலங்களில் ஒரு கூட்டணியை சார்ந்தே இயங்க வேண்டிய சூழல் இருப்பதால், இப்போதே ஓரளவு டீசன்ட்டான எண்ணிக்கையில் தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்று தேமுதிக நினைப்பதாக தெரிகிறது..
எதற்காக இழுத்தடிப்பு?
அத்துடன் ஒரு ராஜ்ய சீட்டையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று தேமுதிக நினைக்கிறது.. இதுபோக, தேர்தல் களத்தில் மற்ற கட்சிகளுக்கு இணையாக செலவு செய்யும் நிதி வசதி ஒரு சவாலாக உள்ளது.. அதனால்தான், இன்னும் கூட்டணி அமைவதில் சிக்கல் இருப்பது போல தோன்றுகிறது..
யாருடன் கூட்டணி வைத்தாலும்சரி, கட்சியின் வாக்கு வங்கியை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் பிரேமலதா இன்று இருக்கிறார். கடந்த சில தேர்தல்களாகக் கட்சியின் வாக்கு சதவீதம் சரிவை சந்தித்திருந்தாலும், இன்னமும் சில மண்டலங்களில் செல்வாக்கு இருக்கத்தான் செய்கிறது.. அதனால்தான் கூட்டணி முடிவுகளில் பெரும் இழுபறி நீடிக்கிறது.
யாருடன் கூட்டணி?
திமுகவுடன் கூட்டணி வைத்தால் எளிதாக தேமுதிக வெற்றி சட்டசபை போக முடியும் என்றாலும், விஜயகாந்த் தொடக்கத்திலிருந்தே திமுகவை எதிர்த்து அரசியல் செய்தவர் என்பதால், மீண்டும் திமுகவுடன் கூட்டணி வைப்பது அக்கட்சியின் அடிப்படை அடையாளத்தையே கேள்விக்குறியாக்கிவிடக்கூடும்..
மேலும், ஏற்கனவே திமுக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதால், தேமுதிக எதிர்பார்க்கும் கூடுல்சீட் கிடைக்குமா தெரியவில்லை..
இப்போதைய சூழலில், தேமுதிக தொண்டர்களிடையே ஒருவித புரிதல் இருப்பதால், அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம்.. இதனால் வட மாவட்டங்களில் வாக்குகளை எளிதாக ஒருங்கிணைக்க முடியும்... பாஜக கூட்டணியில் உள்ளதால், மத்திய அரசின் ஆதரவும், ஒரு தேசிய கட்சியின் அங்கீகாரமும் எளிதாக கிடைக்கும். எனவே இந்த விஷயத்தில் தேமுதிக சற்று யோசித்துதான் முடிவெடுக்கும்..
ஆனால் ஒன்று,
தேமுதிக எடுக்கப்போகும் முடிவு என்பது வெறும் தொகுதி பங்கீடு சார்ந்து மட்டுமல்லாமல், விஜயகாந்த் என்ற ஆளுமைக்குப் பின்னால் இன்றும் அணிவகுக்கும் தொண்டர்களுக்கு புத்துயிர் அளிக்கக்கூடியதாகவும், கட்சியின் எதிர்காலத்தை வருங்காலங்களில் காப்பற்றக் கூடியதாகவும் இருக்க வேண்டும்... பிரேமலதா என்ன முடிவெடுக்க போகிறார்? பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications