விஜயகாந்த் மைத்துனர் சுதீஷின் மகள் டாக்டராகிட்டாங்க! யாரிடம் பட்டம் வாங்கியிருக்காங்க பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷின் மூத்த மகள் ஜானு ஸ்ரீ, சென்னை ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் முதுகலை பட்டத்தை குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் இருந்து பெற்றார். இதை பெருமிதம் பொங்கல் சுதீஷ் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: எங்கள் வாழ்வில் மறக்க முடியாத, அளவற்ற மகிழ்ச்சி நிறைந்த நாள் இன்று.

lk sudhish dmdk

எங்கள் மூத்த மகள் ஜானு ஸ்ரீ (Jannu Shree) சென்னை ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் MBBS, MS (OG) - மகப்பேறு மற்றும் மகளிர் நல அறுவை சிகிச்சை முதுகலை பட்டத்தை இந்திய குடியரசு துணைத் தலைவர் மாண்புமிகு திரு. சி.பி. ராதாகிருஷ்ணனின் பொற்கரங்களால் பெற்றதை மிகுந்த பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

பல ஆண்டுகள் உழைப்பு, தியாகம், கனவுகள், அனைத்திற்கும் இன்று கிடைத்த இனிய பலன் இது. மகளின் இந்த உயரிய சாதனை, எங்கள் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் மட்டுமல்ல, சமூகத்திற்கே பெருமை சேர்க்கும் தருணம்.

எங்கள் மகள் ஜானு ஸ்ரீயின் எதிர்கால மருத்துவப் பயணம் பெண்களின் ஆரோக்கியத்திற்கும், மக்களுக்கான சேவைக்கும் ஒளிவிளக்காக அமைய வேண்டும் என மனமார வாழ்த்துகிறோம்.

இந்த சாதனையில் துணை நின்ற ஆசிரியர்கள், மருத்துவக் கல்லூரி நிர்வாகம், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனப்பூர்வமான நன்றிகள்.

எல்.கே. சுதீஷ்

பூர்ண ஜோதி சுதீஷ்

இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதீஷ், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர். பொதுச் செயலாளர் பிரேமலதாவின் இளைய சகோதரர் ஆவார்.

சுதீஷ் தேமுதிகவில் பொருளாளராக இருந்து வருகிறார். எனினும் அவர் ஒரு சினிமா தயாரிப்பாளர். கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வந்தார். அந்த வகையில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான படைத்தலைவன் படத்தையும் இவர் வாங்கி வெளியிட்டார்.

தனது தந்தை தயாரிப்பாளராக இருந்தாலும் கஷ்டப்பட்டு படித்து மருத்துவராகி, தற்போது முதுகலை பட்டம் பெற்று மகப்பேறு மருத்துவராகிவிட்டார் ஜானு ஸ்ரீ. அது போல் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதியும் மருத்துவர்தான். நடிகை சாய்பல்லவியும் மருத்துவர். அது போல் நடிகை சரண்யாவின் மகள் கூட மருத்துவர்தான். இவர் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் படித்தார். அது போல் தனுஷின் அக்கா கார்த்திகா தேவியும் மருத்துவர்தான். இவர் போரூர் ராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு மருத்துவம் படித்துவிட்டு தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

அந்த வகையில் விஜயகாந்த் மக்களுக்கு சேவை செய்தது போல் ஜானு ஸ்ரீயும் மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கி அவரது பெயரையும் தந்தையின் பெயரையும் காப்பாற்ற வேண்டும் என தேமுதிகவினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அண்மையில் கேப்டனின் குரு பூஜையின் போது கூட தனது இரு மகள்களையும் சுதீஷ் அழைத்து வந்து கேப்டன் நினைவிடத்தில் ஆசி வாங்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+