இரவோடு இரவாக தூக்கிய போலீஸ்.. பெண் போலீசை சீண்டிய 2 திமுக நிர்வாகிகள்.. நள்ளிரவில் கைது!
சென்னை: பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட இருவரும் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
விருகம்பாக்கத்தில் கடந்த 31ம் தேதி திமுக இளைஞரணி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெற்று கொண்டு இருந்த போது பின் பக்கம் பெண் போலீசார் ஒருவர் காவலுக்கு நின்று கொண்டு இருந்தார்.
அந்த பெண் போலீசாரை திமுக இளைஞரணி நிர்வாகிகள் தவறாக சீண்டி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பெண் போலீசாரிடம் கூட்டம் இருப்பதை பயன்படுத்திக்கொண்டு அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர்.

சர்ச்சை
இந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக, அதிமுகவினர் இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனத்தில், திமுகவின் பொது கூட்டத்தில் பெண் காவலர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய திமுக நிர்வாகிகள், பாதுகாப்பு தருபவர்களையே தன் கட்சியினரிடம் இருந்து பாதுகாக்க முடியாத, காவல்துறையையின் பொறுப்பாளராக இருக்ககூடிய இந்த கையாளாகாத முதல்வருக்கு எனது கடுமையான கண்டனங்கள்.

கண்டனம்
இது போன்ற தொடர் சம்பவங்கள் , இவரது விடியா ஆட்சியில் சாமானிய பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறி ஆகியிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நம்மைக் காக்கும் பெண்களை நாமே காக்க வேண்டிய சூழ்நிலை, உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து,கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என்று குறிப்பிட்டு இருந்தார். பாஜகவினரும் இது தொடர்பாக புகார்களை வைத்தனர். இது தொடர்பாக அந்த பெண் காவலர் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.,

குற்றவாளிகள்
திமுக இளைஞரணி நிர்வாகிகளான ஏகாம்பரம், பிரவீன் ஆகியோர்தான் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டனர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. கூட்டம் இருந்ததை பயன்படுத்திக்கொண்டு அந்த பெண் போலீசாரை இவர்கள் சீண்டி உள்ளனர். மேடையில் தலைவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை எல்லோரும் கவனித்து கொண்டு இருந்துள்ளனர். இதை பயன்படுத்திக்கொண்டு அந்த பெண் போலீசை இருவரும் தவறாக சீண்டி உள்ளனர். இது சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திமுக சார்பில் இவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நீக்கம்
அதன்படி திமுக இளைஞரணி நிர்வாகிகளான ஏகாம்பரம், பிரவீன் இருவரையும் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்வதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார். இதையடுத்து போலீசாரும் அங்கு இருந் சாட்சியங்களிடம் நேரில் விசாரணை செய்தனர். அந்த பெண் போலீஸ் அதிகாரியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதிவுசெய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக, இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இருவரின் வீட்டிற்கும் சென்ற போலீசார் இவர்களை கைது செய்தனர்.

கைது
திமுக இளைஞரணி நிர்வாகிகளான ஏகாம்பரம், பிரவீன் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். திமுக இளைஞரணி நிர்வாகிகளான ஏகாம்பரம், பிரவீன் இருவரையும் நீக்கும் போது துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதுடன், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் திமுக இளைஞரணி நிர்வாகிகளான ஏகாம்பரம், பிரவீன் ஆகியோர் செயல்பட்டனர். இது மன்னிக்க முடியாத குற்றம். அதனால் இருவரையும் கட்சியின் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்குகிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications