மேகதாது அணை விவகாரம் பற்றி நாளை அனைத்து கட்சி கூட்டம்.. அழைப்புவிடுப்பது திமுக!
Recommended Video

சென்னை: மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக திமுக சார்பில் நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 10.30 மணி அளவில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதையடுத்து, அடுத்த கட்ட பணிகளை துரிதப்படுத்துவதற்காக அம்மாநில முதல்வர் குமாரசாமி தலைமையில் டிசம்பர் 6ம் தேதி உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த விஷயத்தில் தமிழக நலன் காப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
தமிழக அரசு இதுபோன்ற அழைப்பை விடுக்காத நிலையில், திமுக இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்!












Click it and Unblock the Notifications