திமுக ‘தலை’ தந்த க்ளியர் மெசேஜ்.. அங்கே விழுந்த டிக்- சீனியர்களையே அசரவைத்த முடிவுக்கு இதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்த அதிரடியாக முடிவெடுத்த திமுக தலைவர் ஸ்டாலின், பெரம்பலூரில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதன் மூலம், திமுகவை விமர்சிப்பவர்களுக்கும், கட்சியினருக்கும் ஒரு தெளிவான மெசேஜை கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

திமுக சார்பில் நவம்பர் 4ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. பெரம்பலூரில் நடைபெற உள்ள கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றுவார் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளது திமுகவின் முக்கிய நிர்வாகிகளையும், மற்ற மாவட்ட செயலாளர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளை ஏற்கக் கூடாது என வலியுறுத்தி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி இந்தப் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இந்தி திணிப்பு எதிர்ப்பு

இந்தி திணிப்பு எதிர்ப்பு

பாஜக அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக அக்டோபர் 18 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றியது திமுக அரசு. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகளை ஏற்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாஜகவின் எதிர்ப்பு

பாஜகவின் எதிர்ப்பு

திமுகவுக்கு எதிராக தமிழக பாஜகவும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்து நேற்று தமிழகம் முழுவதும் நடத்தியது. திமுகவின் இந்தி திணிப்பு வெறும் நாடகம், திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் கூட தமிழ் கட்டாயம் இல்லை, இந்திக்கு எதிராக போராட்டம் நடத்தும் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் இந்தி படத்தை விற்பனை செய்வதற்காக இந்தி நடிகைகளை கொண்டு வருகிறார், இந்தி படத்தை தான் பார்க்க வேண்டும் என தமிழக மக்களிடைம் இந்தியை திணிப்பது உதயநிதி ஸ்டாலின் தான் என்றெல்லாம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.

முக்கிய முடிவு

முக்கிய முடிவு

பாஜகவினரின் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் இன்னும் பெரிய அளவில் இந்தி திணிப்புக்கு எதிராக களமாட வேண்டும் என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் முடிவெடுத்தார். அதன்படியே, நவம்பர் 4ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார்.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

திமுக நடத்தும் போராட்டங்கள் எப்போதும் அதிகமாக கவனிக்கப்படக்கூடியவை. அதிலும் குறிப்பாக, இந்தி எதிர்ப்பு தொடர்பான திமுகவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் வரலாற்று முக்கியத்துவம் பெற்றவை. அந்த வகையில், ஆளுங்கட்சியாக இருக்கும் சூழலில் ஒரே நாளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் திமுகவின் இந்த பொதுக்கூட்டங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. திமுக தலைவரான ஸ்டாலின் எங்கு நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார் என்பதும் கட்சியினரால் கவனிக்கப்படுவது வழக்கம்.

பெரிய போட்டி

பெரிய போட்டி

முதல்வராக இருப்பதால் பணிச்சுமைகள், பயணச்சுமைகள் அதிகம் என்பதால், ஸ்டாலின் சென்னை அல்லது அதனையொட்டி நடைபெறும் கூட்டத்திலேயே பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. பல்வேறு முன்னணி தலைவர்களும், ஸ்டாலின், தங்கள் மாவட்டத்தில் வந்து பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். ஸ்டாலினின் நேரடி கவனம் கிடைப்பது மட்டுமல்லாமல், திமுக தொண்டர்கள் மத்தியிலும் செல்வாக்கை அதிகரிக்கச் செய்யும் என்பதால் மாவட்ட செயலாளர்கள் மத்தியில் இதற்கு பெரிய போட்டியே நடக்கும்.

 சமீபத்திய சர்ச்சை

சமீபத்திய சர்ச்சை

அதில் தான் இந்த முறை பெரம்பலூரை தேர்வு செய்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். ஸ்டாலினின் இந்த முடிவு திமுக சீனியர் நிர்வாகிகளுக்கே பெரிய ஆச்சர்யம். அதற்குப் பின்னணியாக ஒரு காரணத்தையும் முன்வைக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். சில வாரங்களுக்கு முன்பு திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, சனாதனம் பற்றியும் இந்துக்கள் பற்றியும் பேசியது அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதையொட்டி, திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிரச்சாரத்தையும் பாஜக மேற்கொண்டது. ஆ.ராசாவுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

ஆ.ராசா

ஆ.ராசா

அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்தித்த போதெல்லாம் ஆ.ராசாவின் பேச்சு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இது அவர்களுக்கு தலைவலியையும் கொடுத்தது. இதனால், திமுக சீனியர்கள் மட்டத்திலேயே ஆ.ராசாவின் பேச்சு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக மூத்த நிர்வாகிகள் சிலரே ஸ்டாலின் காதிலும் இதுபற்றி போட்டு வைத்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், ஸ்டாலின், ஆ.ராசாவை வெளிப்படையாக கண்டிக்கவில்லை. எனினும், முதல்வர் ஸ்டாலின், ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சுகளால் அதிருப்தியில் இருப்பதாக ஒரு தகவல் திமுக வட்டாரத்திற்குள்ளேயே பரவி வந்தது.

டிக் அடித்த ஸ்டாலின்

டிக் அடித்த ஸ்டாலின்


இந்நிலையில் தான் ஆ.ராசாவின் சொந்த மாவட்டமான பெரம்பலூரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார் ஸ்டாலின். அந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உடன் ஆ.ராசாவும் உரையாற்ற இருக்கிறார். இதன் மூலம், ஆ.ராசா மீது தனக்கு எந்த அதிருப்தியும் இல்லை என தெளிவாக காட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஆ.ராசா வெளிநாட்டில்

ஆ.ராசா வெளிநாட்டில்

திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா தற்போது லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் திராவிட மாடல் பற்றி உரையாற்றச் சென்றுள்ளார் ஆ.ராசா. லண்டன் கிளம்புவதற்கு முன்பு கடந்த 25ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்தும் பெற்றுச் சென்றார். இந்நிலையில் தான் ஆ.ராசா நாடு திரும்புவதற்குள் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

முக்கியமான சேதி

முக்கியமான சேதி

மேலும், கருத்தியல் ரீதியான தலைவர்களின் பேச்சுகளை முன்வைத்து இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக என விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் முதல்வர் ஸ்டாலினின் இந்த நகர்வு இருக்கிறது என்கிறார்கள். ஆ.ராசாவின் இத்தகைய பேச்சுகள் திமுகவிற்கு எதிர்ப்பை தேடித் தரும் என மேலெழுந்த வாரியாக விமர்சிக்கப்பட்டாலும், கொள்கைத் திடம் கொண்ட நிர்வாகிகளை திமுகவும், நானும் என்றைக்கும் கைவிட மாட்டோம் என திமுக தலைவர் 'மெசேஜ்' கொடுப்பதாகவே அர்த்தம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+