திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது.. நிர்வாகிகளின் கருத்து கட்சி கருத்தாகாது.. கே.சி வேணுகோபால் அதிரடி
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. கூட்டணி குறித்து இரண்டாம் கட்ட தலைவர்கள் கூறுவது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது என்றும் கே.சி வேணுகோபால் கூறியுள்ளார் [DMK Congress Alliance].
காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேர் பகுதியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி. வேணு கோபால், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 75 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கே.சி வேணுகோபால், "திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் தொடர்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறேன். வகுப்புவாத சக்திகளை திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும். திமுக - காங்கிரஸ் கூட்டணி நீண்ட காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. திமுக எங்கள் பழைய கூட்டாளி.
அவர்களுடன் எங்கள் நிலைப்பாட்டை எடுத்து சொல்வோம். பேச்சுவார்த்தைக்கு திமுக அழைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறோம். நாங்களும் ஒரு அரசியல் கட்சி. எங்களுக்கும் அரசியல் லட்சியங்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சியில் வேறுபட்டு கருத்துகள் வரலாம். கூட்டணி குறித்து நிர்வாகிகள் கூறுவது அவர்களின் தனிப்பட்ட கருத்து.
அவர்களின் தனிப்பட்ட கருத்து
இரண்டாம் கட்ட தலைவர்களின் கருத்து காங்கிரஸ் கட்சியின் கருத்து இல்லை.அவர்களின் குரல் எந்த வகையிலும் காங்கிரஸ் கட்சியின் கருத்தாகாது. காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி குறித்து கொள்கை, பார்வை உள்ளது. இறுதி முடிவை காங்கிரஸ் தலைமை தான் எடுக்கும். கூட்டணி ஆட்சி மற்றும் ஆட்சியில் பங்கு ஆகியவை குறித்து தெளிவான பேச்சுவார்த்தை வேண்டும்.
கூட்டணி தொடர்பாக ஆதரவாகவோ அல்லது எதிராகவே பொது வெளியில் பேசக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். கூட்டணி குறித்து எங்கள் அகில இந்திய தலைவர், ராகுல் காந்தி முடிவு எடுப்பார்கள். அதை உங்களுக்கு அதிகாரபூர்வமாக தெரியப்படுத்துவோம்" என்றார். தவெகவுடன் கூட்டணி ஏற்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு," உங்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது" என்று கூறினார்.
-
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications