Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே மேட்டர்.. திமுக, காங்., பாஜக இடையே மும்முனை மோதல்.. ‘சுய தம்பட்டம்’ - யார் சொந்தம் கொண்டாடுவது?

Subscribe to Oneindia Tamil

சென்னை : நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுக - பாஜக - காங்கிரஸ் இடையே மும்முனை மோதல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு தான் எழுதிய கடிதம், திமுக எம்.பிக்களின் வலியுறுத்தல் என தொடர் முயற்சிகளின் விளைவாக இப்போது வெற்றி மாலை கிடைத்திருக்கிறது என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

மத்திய அரசில் அங்கம் வகித்த போதும் நரிக்குறவர் இன மக்களின் கோரிக்கைகளை எல்லாம் கிடப்பில் போட்ட திமுக, மத்திய அரசு செய்த சாதனைக்கு, வழக்கம்போல திராவிட ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைச் செய்வதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இந்த சட்டத்திருத்ததை கொண்டுவந்தது தாங்கள் தான் என சுயதம்பட்டம் அடித்துக் கொள்ள பாஜகவினருக்கு எந்த தகுதியும் கிடையாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

வரவேற்ற ஸ்டாலின்

வரவேற்ற ஸ்டாலின்

நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதை வரவேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், தான் மத்திய அரசுக்கு எழுதிய கடிதம், திமுக எம்.பிக்களின் வலியுறுத்தல் என தொடர் முயற்சிகளின் விளைவாக இப்போது வெற்றி மாலை கிடைத்திருக்கிறது, சமூகநீதி வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்ற நேரத்தில் நிகழ்த்தியுள்ள சாதனை இது எனக் குறிப்பிட்டிருந்தார் ஸ்டாலின்.

பாஜக அண்ணாமலை

பாஜக அண்ணாமலை

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக அரசின் சாதனைக்கு திமுக சொந்தம் கொண்டாடுவதாக விமர்சித்தார். 1965ஆம் ஆண்டு லோக்கூர் கமிட்டியின் பரிந்துரை நரிக்குறவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை 1967ஆம் ஆட்சிக்கு வந்த திமுக செய்யத் தவறியது ஏன்? குறைந்த சதவீத வாக்குகள் உள்ள சமுதாயத்தால் என்ன பயன் என்று உதாசீனப்படுத்தியது தான் திமுக செய்த ஒரே சாதனை என விமர்சித்தார் அண்ணாமலை.

ஸ்டிக்கர் ஒட்டுவதாக விமர்சனம்

ஸ்டிக்கர் ஒட்டுவதாக விமர்சனம்

மத்திய அரசின் ஆட்சியும் அதிகாரமும் தங்கள் கையில் இருந்த போதும், மத்திய அரசில் அங்கம் வகித்த போதும் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த போதும், நரிக்குறவர் இன மக்களின் கோரிக்கைகளை எல்லாம் கிடப்பில் போட்ட திமுக, பிரதமர் மோடியின் நடவடிக்கையால், மத்திய அரசு செய்த சாதனைக்கு, வழக்கம்போல திராவிட ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்வது வேடிக்கையாக இருக்கிறது என விமர்சனம் செய்தார் அண்ணாமலை.

குதித்த காங்கிரஸ்

குதித்த காங்கிரஸ்

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் இந்த மோதலில் குதித்துள்ளது. நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்கார சமுதாயத்தைப் பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டத்திருத்ததை கொண்டுவந்தது தாங்கள் தான் என சுயதம்பட்டம் அடித்துக் கொள்ள பாஜகவினருக்கு எந்த தகுதியும் கிடையாது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடந்த 2013 ஆம் ஆண்டு நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்கார சமுதாயத்தினரைப் பழங்குடியின பட்டியலில் இணைக்கும் வகையில், 1950ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் பழங்குடியின சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

பாஜகவுக்கு தகுதியே இல்லை

பாஜகவுக்கு தகுதியே இல்லை

அந்த சட்டத்திருத்தம் கடந்த 8 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டது. நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்கார சமுதாயத்தைப் பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் என்பது உலகறிந்த உண்மை. தாங்கள் தான் இந்த சாதனையை செய்ததாக சுயதம்பட்டம் அடித்துக் கொள்ள பாஜகவினருக்கு தகுதியே கிடையாது என்று விமர்சித்துள்ளார்.

மும்முனை மோதல்

மும்முனை மோதல்

நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட விவகாரத்தில், திமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் மாறி மாறி விமர்சித்து, இந்தச் சாதனைக்கு உரிமை கோரி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையாக வெடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+