அண்ணன் பாணியில் தங்கை! கனிமொழியை கொண்டாடிய பெற்றோர்கள்! கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி!
வேலூர்: வேலூரில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்துகொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, 3 மணி நேரமாக ஒரே இடத்தில் நின்றவாறு பட்டங்கள் வழங்கி பெற்றோரை நெகிழ வைத்துள்ளார்.
ஒவ்வொரு துறையிலும் தலை சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மட்டும் கனிமொழி கரங்களால் பட்டங்கள் வழங்கப்படுவது போலவும் மற்ற மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தால் வழங்கப்படுவது போலவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால் தனக்கு எந்த சிரமமும் கிடையாது எனக் கூறி 600 மாணவர்களுக்கும் தனது கரங்களால் பட்டங்கள் வழங்கி அவர்களின் பெற்றோரை மகிழ வைத்தார் கனிமொழி.

கல்லூரி நிகழ்ச்சிகள்
கல்லூரி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடுவது, பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்பது என கல்லூரி சார்ந்த நிகழ்வுகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.. மற்ற நிகழ்ச்சிகளை காட்டிலும் மாணவ சமுதாயத்தினரோடு கலந்துரையாடுவதை மன நிறைவாக கருதும் கனிமொழி, கல்லூரி விழாக்களில் கலந்துகொள்ள வேண்டி தேதி கேட்பவர்களுக்கு தேதி கொடுத்து வருகிறார்.

நெகிழ்ச்சி நிகழ்வு
இதனிடையே 2 நாட்களுக்கு முன்னர் வேல்லுரில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்துகொண்ட கனிமொழி, 3 மணி நேரமாக ஒரே இடத்தில் நின்றவாறு 600 மாணவ, மாணவிகளுக்கு தனது கரங்களால் பட்டங்கள் வழங்கியுள்ளார். இவருக்கு சிரமம் இருக்கக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு துறையிலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 10 பேருக்கு மட்டும் அடையாளமாக பட்டங்கள் வழங்குவது போலவும் மற்றவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தினரே பட்டங்கள் வழங்குவது போலவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கனிமொழி எளிமை
ஆனால் தனக்கு ஒரு சிரமமும் கிடையாது எனக் கூறி இன்முகத்தோடு அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கி அவர்களின் பெற்றோரை நெகிழச் செய்துவிட்டார். இதனிடையே பட்டமளிப்பு விழா முடிந்து கார் ஏற புறப்பட்ட கனிமொழியை, மாணவனின் தாய் ஒருவர் அன்பொழுக வாழ்த்தி கரங்களை பற்றி முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதேபோல் கல்லூரி மாணவ மாணவிகளும் கனிமொழியின் எளிமையை கண்டு வியந்து போனார்கள்.

உங்கள் கையில் எதிர்காலம்
இதனிடையே மாணவர்கள் மத்தியில் பேசிய கனிமொழி எம்.பி. உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் தான் இருக்கிறது என்றும் கல்வியின் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினார். இதனிடையே இதுவரை தாம் கலந்துகொண்ட கல்லூரி நிகழ்ச்சிகளில் கனிமொழி அரசியல் பேசியது கிடையாது என்பது கவனிக்கத்தக்கது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications