அதிமுக-பாஜக-தவெக கூட்டணி! எவ்வளவு சதவிகித பலம்? யாருக்கு வெற்றி? திமுக நடத்திய சீக்ரெட் சர்வே முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளும் திமுக ரகசியமாக நடத்திய கருத்துக் கணிப்பின்படி, நடிகர் விஜய் அரசியலில் எதிர்கொள்ளும் சவால்கள் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

தி பிரிண்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள இந்த செய்தியில், ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டால் 23 சதவீத வாக்குகளைப் பெறும் என திமுக தரப்பு நடத்திய உட்கட்சி சர்வே கணித்துள்ளது.

TVK Vijay

கடந்த அக்டோபர் 1 முதல் 9 வரை நடத்தப்பட்ட இந்த உட்கட்சி சர்வே, கரூரில் நடந்த விஜய் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்படி, தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வலுவான ஆதரவு இருப்பதும், திமுக-வுக்கு ஒரு முக்கிய போட்டியாளராக அந்த கட்சி மாறக்கூடும் என்பதும் தெரிய வந்துள்ளது. 2.91 லட்சம் வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு சராசரியாக 1,245 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

பாஜக உடன் கூட்டணி

தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் தமிழக வெற்றிக் கழகம் இணைவது குறித்தும், விஜய் தனித்துப் போட்டியிட்டால் ஆதரவு அளிப்பார்களா என்பது குறித்தும் வாக்காளர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், என்.டி.ஏ கூட்டணியில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன. அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் தவெக ஆகிய கட்சிகள் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தால், திமுக 50 சதவீத வாக்குகளையும், என்.டி.ஏ 35 சதவீத வாக்குகளையும், சீமானின் நாம் தமிழர் கட்சி (என்.டி.கே) 12 சதவீத வாக்குகளையும், மற்றவர்கள் 3 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என இந்த ரகசிய ஆய்வு குறிப்பிடுகிறது.

பா.ஜ.க, அ.தி.மு.க, தமிழக வெற்றிக் கழகம் இணைந்து 35 சதவீத வாக்குகளைப் பெற்றாலும், அ.தி.மு.க-வில் உள்ள உட்கட்சிப் பூசல்கள் மற்றும் பா.ஜ.க-வின் சித்தாந்தத்தை தமிழக வாக்காளர்கள் எதிர்க்கும் போக்கு ஆகியவை இக்கூட்டணியின் வளர்ச்சியைத் தடுக்கலாம் என்றும் சர்வே கூறுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் சூழ்நிலையில், திமுக-வின் வாக்கு சதவீதம் 45 ஆக குறையலாம். அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி 22 சதவீத வாக்குகளையும், விஜயின் கட்சி 23 சதவீத வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சியின் ஆதரவு 5 சதவீதமாகக் குறையக்கூடும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

வாக்குகளை பிரிக்கும் தமிழக வெற்றிக் கழகம்

விஜய் தனித்துப் போட்டியிடும்போது, ​​மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியின் வாக்கு வங்கிகளையும் அவர் பிரிப்பார் என்பதை எங்களால் பார்க்க முடிந்தது என்று இந்த சர்வேயில் ஈடுபட்ட நபர் ஒருவர் தி பிரிண்ட் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.

இந்த ஆய்வு திமுக-வுக்கு சாதகமான சூழ்நிலை போக்கைக் காட்டினாலும், நீண்ட காலப் போக்கில் விஜய் ஒரு சவாலான போட்டியாளராக உருவெடுக்கலாம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. 2029 மற்றும் 2031-ல் திமுகவிற்கு சவாலான நபராக விஜய் உருவெடுக்க வாய்ப்பு உள்ளதாக இந்த சர்வே காட்டுகிறது.

இருப்பினும், தமிழக வெற்றிக் கழகம் ஒருவேளை அ.தி.மு.க-வுடன் கைகோர்த்து, பா.ஜ.க இல்லாமல் தேர்தலை சந்தித்தால் என்ன நடக்கும் என்பது குறித்து இந்த ஆய்வு எதுவும் குறிப்பிடவில்லை. அத்தகைய சூழ்நிலைக்கான ஆய்வுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான சர்வே எடுக்கப்படும் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+