Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவில் தேமுதிக.. சரி, தோல்வி அடைய வாழ்த்துகள்! பிரேமலதா பேசிய கொஞ்ச நேரத்தில் கோபத்துடன் எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் இணைந்து இருக்கிறது. இந்த நிலையில் தங்களது திட்டங்களின் மேல் திமுக சவாரி செய்யும் எண்ணத்தை கைவிட்டு உங்கள் ஆட்சியின் சாதனைகளை கூறி பிரச்சாரம் செய்ய பாருங்கள் என திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்திருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் தேர்தலில் தோல்வியடைய வாழ்த்துக்கள் எனவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் 2026 சட்டமன்ற தேர்தல் சென்று கொண்டிருக்கும் நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக திமுக கூட்டணியில் இணைந்து இருக்கிறது தேமுதிக. கட்சி ஆரம்பித்து 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதன் முறையாக இந்த கூட்டணி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து போட்டியிட நிலையில் பிரேமலதா விஜயகாந்த்-ன் மகன் விஜய பிரபாகரன் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் விருதுநகரில் காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் இடம் தோல்வியடைந்தார்.

Tamil Nadu Assembly Election 2026 DMK DMDK

திமுக தேமுதிக கூட்டணி

இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்ற கோரிக்கையுடன் திமுக தரப்பை தேமுதிக அணுகிய நிலையில் அதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணியை உறுதி செய்திருக்கிறார். இதற்கிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி இடம் கூட்டணி குறித்து கேட்டபோது பிறகு பேசுகிறேன் என புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் தங்களது திட்டங்களின் மேல் திமுகா சவாரி செய்வதாகவும், தேர்தலில் தோல்வியடைய வாழ்த்துக்கள் என பதிவிட்டு இருக்கிறார் இது தேமுதிக கூட்டணிக்கு சென்றதன் கோபத்தின் வெளிப்பாடு என்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி," என்ன தான் ஆச்சு இந்த முதல்வருக்கு? ஆட்சிக்கு வந்து எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, திறந்ததெல்லாம் அதிமுக திட்டங்கள் மீதான ஸ்டிக்கர்கள் மட்டுமே! இது போதாது என்று, தேர்தல் நெருங்குவதும் ஸ்டிக்கர் பித்து அதிகரித்ததோ என்னவோ, அஇஅதிமுக-வின் வரலாற்றுச் சாதனைகள் மீது ஏறி சவாரி செய்ய ஆசைப்படுகிறார் திரு. முக ஸ்டாலின். ஏற்கனவே 7.5% திட்டம் குறித்து ஒரு வரலாற்றுப் பொய்யை நாக் கூசாமல் மருத்துவத்துறை அமைச்சர் வாயிலாக பேசியதை, நேற்று சட்டமன்றத்திலேயே தோலுரித்தேன்.

மு.க.ஸ்டாலின்

நேற்று மாலை, தனது தொடர் "ஆடியோ லாஞ்ச் மேடை அரசியலின்" அங்கமாக விளையாட்டு துறை சார்ந்த விழா ஒன்றில் மேடையேறிய பொம்மை முதல்வர், "விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீடு" திட்டத்தின் பலன்கள் மீது தனது பெயரை எழுதிக் கொள்ள முனைந்தது வேடிக்கையாக இருந்தது. விளையாட்டு வீரர்களுக்கான அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு என்பது, 2018-ல் எனது தலைமையிலான அதிமுக அரசு 2%-ஆக அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்து விளையாட்டு வீரர்கள் அளித்த விழாவில், இந்த இட ஒதுக்கீட்டை 3%-ஆக உயர்த்தி நான் அறிவித்தேன்.

7.5% இடஒதுக்கீடு

அதன் பிறகு, 2020-ல் கொரோனா பெருந்தொற்றுக் காலம், 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. இதில் ஸ்டாலின் செய்தது என என்ன இருக்கிறது? பணி ஆணைகள் கொடுப்பது போல் போட்டோ எடுத்துக் கொண்டது மட்டுமே இந்த பொம்மை முதல்வரின் ஒரே பங்களிப்பு. 7.5% மருத்துவ உள் இடஒதுக்கீடு ஆகட்டும், 3% விளையாட்டு வீரர்களுக்கான ஆகட்டும்- நான் அரசுப்பள்ளியில் படித்தவன், விளையாட்டு வீரர்களின் உணர்வுகளைப் புரிந்தவன் என்ற முறையில், அவர்களுக்காக பார்த்துப் பார்த்துச் செய்த சாதனைத் திட்டங்கள்.

அதிமுக திட்டம்

இதெல்லாம் ஸ்டாலின் போன்றோருக்கு எப்படி புரியும்? இப்படி ஏதாவது ஒரு புதிய சாதனைத் திட்டத்தை ஸ்டாலின் கொடுத்தாரா? இல்லை! அதனால், இப்படி வெட்கமின்றி எங்கள் திட்டத்தின் மீது சவாரி செய்யும் எண்ணத்தை எல்லாம் கைவிட்டு, உங்கள் ஆட்சியின் சாதனைகளைக் கூறிப் பிரச்சாரம் செய்யப் பாருங்கள்... முக ஸ்டாலின்! (ஓஹ்ஹ்.. அப்படி எதுவுமே இல்லையோ..??!! சரி, தோல்வி அடைய வாழ்த்துகள்!)" என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+