"ஆட்சியில் பங்கு"! ஆர்எஸ்எஸ் குரலை எதிரொலிக்கும் மாணிக்கம் தாகூர்! திமுக மாஜி எம்பி அப்துல்லா தாக்கு
சென்னை: ஆர்எஸ்எஸ் குரலை எதிரொலிக்கிறார் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் என திமுக முன்னாள் எம்பி அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் முடிந்த போன குரலை எதிரொலிப்பதால் யாருக்கு பயன் தரும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து திமுக முன்னாள் எம்பி அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சமூக ஊடகங்களைத் தொடர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும்.. கடந்த ஓராண்டாக இந்துத்துவ ஆதரவு பக்கங்கள் தமிழ்நாட்டு ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வு வருமா என்ற செய்தியை தொடர்ந்து பேசி வந்தனர்.

இன்றைய சூழ்நிலையில் அவர்கள் கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சியை ஒரு போதும் பிடிக்கப் போவதில்லை என்ற நிலையில் வலுவாக இருக்கும் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக அவர்கள் செய்யும் திட்டமிட்ட அஜெண்டா என்பதை உணர்ந்த எழுச்சித் தமிழர் அண்ணன் திருமாவளவன், தகைசால் தமிழர் அய்யா பேராசிரியர் காதர்மொய்தீன் போன்ற கூட்டணித் தலைவர்கள் "ஓரணியில் நின்று ஆர் எஸ் எஸ் சக்திகளை விரட்டி அடித்து தமிழ்நாட்டைக் காப்பதுதான் இந்தக் கூட்டணியின் ஒற்றை நோக்கம்" என்பதனைத் தங்கள் பேட்டிகளில் தெளிவுபடுத்தினர்.
அதன் பிறகு இந்துத்துவ சமூக ஊடகங்களில் இந்தப் பேச்சுகள் கிட்டத்தட்ட மறைந்து விட்ட நிலையில் தற்போது அண்ணன் மாணிக்கம் தாகூர் அவர்கள் "இந்தப் பேச்சு எங்கிருந்து யாரால் உருவாக்கப்பட்டது என்பதனை உணராது" மீண்டும் இந்தப் பேச்சை எடுக்கின்றார்!!
அனைத்து தலைவர்களும் மிகச் சரியாக இருக்கின்றார்கள். அனைத்து தொண்டர்களும் மிகுந்த ஒருங்கிணைப்போடு தேர்தல் பணியை எதிர் நோக்கிக் இருக்கின்றார்கள். இந்த நிலையில் கூட்டணியின் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி ஒருங்கிணைப்பை சீர்குழைக்க ஆர் எஸ் எஸ் உருவாக்கிய "முடிந்து போன" குரலை அண்ணன் மாணிக்கம் தாகூர் அவர்கள் இப்போது எதிரொலிப்பது யாருக்கு பயன் தருவதாய் அமையும்!? என விமர்சித்துள்ளார்.
கூட்டணியின்றி தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது என்றும், அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "யாருக்கு வாக்கு?" - IPDS தரவு சொல்லும் தகவல். தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால், கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல - அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே!" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் டேட்டா அனலிசிஸ்ட் பிரிவு தலைவரும், ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பிரவீன் சக்கரவர்த்தி, உத்தரப்பிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக இருப்பதாக ஒரு விமர்சனத்தை முன்வைத்தார். இதற்கு திமுகவினர் எதிர்வினையாற்றியிருந்தனர். ஆனாலும் டெல்லி காங்கிரஸ் தலைமை ராகுல் காந்தி அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது திமுகவின் கோபமாக இருந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, திமுகவுடன்தான் கூட்டணி என சொல்லி வரும் நிலையில் திருச்சி வேலுச்சாமி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து பேசியுள்ளார். கேட்டால் மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்திருந்தார். இப்படி காங்கிரஸ் கட்சிக்கும் கோஷ்டி கோஷ்டியாக பிரிந்து ஆளாளுக்கு ஒன்றை பேசி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications