சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பு பணிகள்.. திமுக அரசு மெத்தனம் காட்டுகிறது.. பெரும் அச்சத்தில் மக்கள்.. செல்லூர் ராஜு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசைக் குறை கூறிவிட்டு, மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

Recommended Video

    கொரோனா தடுப்பு பணிகள்.. திமுக அரசு மெத்தனம் காட்டுகிறது.. பெரும் அச்சத்தில் மக்கள்.. செல்லூர் ராஜு

    தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் வைரஸ் பரவல் குறைந்துள்ளது.

     ஸ்டாலினால் எனக்கு கொரோனா..1 கோடி தரனும்.. டுவிட்டரில் வந்த டுமீல் கோரிக்கை.. விசாரிச்சா மேட்டர் வேற ஸ்டாலினால் எனக்கு கொரோனா..1 கோடி தரனும்.. டுவிட்டரில் வந்த டுமீல் கோரிக்கை.. விசாரிச்சா மேட்டர் வேற

    அதேநேரம் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க மாநில அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

    செல்லூர் ராஜு வீடியோ

    செல்லூர் ராஜு வீடியோ

    இது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெளியிட்டுள்ள வீடியோவில், "அனைவரும் மாஸ்க்குகளை அணிந்து, வீட்டிலிருந்தாலும் விலகி இருப்பதே நல்லது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உங்கள் சகோதரன் என்ற அடிப்படையிலும், மதுரைக்காரன் என்ற அடிப்படையில் அன்போடும் பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வைரஸ் இப்போது மிக வேகமாகப் பரவி வருகிறது.

    Array

    Array

    கொரோனா வைரசின் 2ஆம் அலை யாரும் எதிர்பாராத வகையில் மிக மோசமாக உள்ளது. இளைஞர்கள் வயதானவர்கள் என அனைத்து தரப்பினரையும் இது பாதிக்கிறது. பயில்வானாக இருந்தாலும் சரி நோஞ்சானாக இருந்தாலும் சரி அத்தனை பேரையும் பாதிக்கிறது. இப்படிப்பட்ட கொரோனா காலகட்டத்தில், முன்பு அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளை மக்கள் இப்போதும்கூட பாராட்டி வருகின்றனர்.

    திமுக அரசு மெத்தனம்

    திமுக அரசு மெத்தனம்

    ஆனால் இப்போதுள்ள திமுக அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது. இன்னும்கூட மத்திய அரசையே குறை சொல்லி வருகின்றனர். மாநில அரசு தேவையான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதே மக்களின் கருத்தாக உள்ளது. மக்கள் இப்போதே புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அரசு வேகம் காட்டவில்லை என்பது மக்கள் கருத்தாக உள்ளது. அதிமுக ஆட்சியில் காய்ச்சல் இருக்கும் அனைவரது வீடுகளுக்கும் சுகாதார ஊழியர்கள் அனுப்பப்பட்டனர்.

    எதுவுமே இல்லை

    எதுவுமே இல்லை

    உடல்நலம் இல்லாமல் இருந்தவர்களுக்குத் தேவையான மத்திரைகள், கபசுர குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பொதுமக்கள் வெளியே வராமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால், திமுக அரசு இதுபோல எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாநிலத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற நிலைதான் உள்ளது. திமுக ஆட்சியில் அனைத்தும் இல்லை இல்லை என்ற நிலை தான் உள்ளது.

    உடனடி நடவடிக்கை

    உடனடி நடவடிக்கை

    தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின், தேர்தல் நேரத்தில், மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்பப்ட்டுள்ளதால் மற்றொரு ஊரடங்கு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றார். ஆனால், இப்போது இந்த ஆட்சியில்தான் கொரோனாவால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எதிர்காலத்தை நினைத்து பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, அரசும் மாநகராட்சி நிர்வாகமும் மக்களை அச்சத்திலிருந்து போக்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மதுரைக்காரன் என்றாலே வீரமானவன், விவேகமானவன். ஆனால் அவர்களைக்கூட கொரோனா சுருட்டி வருகிறது. எனவே மக்களைக் காக்க உடனடி நடவடிக்கைகள் தேவை" என்றார்.

    English summary
    sellur Raju's latest video about the DMK government
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X