கோவை செல்வராஜுக்கு “கீ” கொடுத்த திமுக.. டிவி விவாதங்களில் இனி அனல் பறக்கும்! 9 பேச்சாளர்கள் யார்?
சென்னை: தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் கலந்துகொள்ளும் 9 புதிய பேச்சாளர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது திமுக.
இதுகுறித்து அக்கட்சித் தலைமை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "தி.மு.கழகத்தின் சார்பில் ஊடக விவாதங்களில் கலந்து கொள்வோருடன் கீழே குறிப்பிட்டுள்ள பேச்சாளர்களும் இணைந்து பங்கு பெறுவர்.

1. திரு.மயிலை த.வேலு
2. திருமதி தமிழரசி ரவிக்குமார்
3. டாக்டர் எழிலன் நாகநாதன்
4. திரு.கு.கருணாநிதி
5. திரு.நெல்லிக்குப்பம் புகழேந்தி
6. திரு.கரூர் முரளி
7. திரு.கோவை செல்வராஜ்
8. திரு.சுஃபி சுலைமான்
9. திரு.சூர்யா கிருஷ்ணமூர்த்தி." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஊடக விவாதங்களில் பங்கேற்போர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது. அதில், திமுக துணை பொதுச் செயலாளரும் உயர்கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி, நிதியமைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கனிமொழி சோமு, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, அரசு கொறடா கோவி.செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலரசன், வழக்கறிஞர் இரா.பரந்தாமன் உள்ளிட்டோர் இடம்பெற்று இருந்தனர்.
இவர்கள் அல்லாமல், "திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எஸ். ஆஸ்டின், பேச்சாளர் தமிழன் பிரசன்னா, இள.புகழேந்தி, சிவ.ஜெயராஜ், பி.டி. அரசகுமார், கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, கவிஞர் சல்மா, வழக்கறிஞர் சித்திக், டாக்டர். சையது ஹபீஸ், முனைவர் சபாபதி மோகன், கவிஞர் தமிழ்தாசன், வழக்கறிஞர் இரா. ராஜீவ்காந்தி, தமிழ் கா.அமுதரசன், கவிஞர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் உள்ளனர்.
அதேபோல், "கம்பம் பெ. செல்வேந்திரன், வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான், வழக்கறிஞர் வி. வைத்தியலிங்கம், வி.சி.சந்திரகுமார், வி.பி. கலைராஜன், வழக்கறிஞர் அ.சரவணன், வழக்கறிஞர் மனுராஜ் சண்முகசுந்தரம், கார்த்திகேய சிவசேனாபதி, காசி முத்துமாணிக்கம், வழக்கறிஞர் ப. மதிவாணன், சேலம் தரணிதரன், குடியாத்தம் குமரன், விஜிலா சத்தியானந்த், மதுரை பாலா, விக்கி, செல்வி.பத்மபிரியா, மருத்துவர் யாழினி, வழக்கறிஞர் புகழ்காந்தி" ஆகியோரும் அந்த பட்டியலில் உள்ளனர்.
இந்த நிலையில் புதிதாக 9 பேர் அறிவிக்கப்பட்டு உள்ளார்கள். இவர்களில் கோவை செல்வராஜ் மக்கள் மத்தியில் மிகவும் பரிட்சையமானவர். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவியவர். ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட இரட்டைத் தலைமை பிரச்சனை தொடர்பாக ஊடகங்களில் தொடர்ந்து பேசி வந்தவர் கோவை செல்வராஜ். காங்கிரஸ் கட்சியிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்கிய இவர் 1991 முதல் 96 வரை சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து உள்ளார்.
திமுகவை விமர்சித்ததற்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர், அதிமுகவிற்கு தாவினார். ஆனால் அவருக்கு 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த அவர், ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக மாறினார். இரட்டைத் தலைமை பிரச்சனை பூதாகரம் எடுத்தபோது எடப்பாடி பழனிசாமியை ஊடக விவாதங்களில் கடுமையாக விமர்சித்து ஓபிஎஸின் குரலாக ஒலித்தவர் கோவை செல்வராஜ். கடந்த ஆண்டு டிசம்பரில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்த இவர், நான்கரை ஆண்டுகளாக அதிமுகவுக்கு வக்காலத்து பேசியதற்காக மக்களிடம் பாவமன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications