சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தெற்கு தீர்ப்பு".. செம டென்ஷனில் திமுக.. கோட்டை விடும் பாஜக.. "ஸ்கோர்" செய்வாரா கமல்..!

Google Oneindia Tamil News

சென்னை: நடந்து முடிந்த வாக்குப்பதிவு சதவீதத்தினை வைத்து, அவைகள் யாருக்கு சாதகமாக இருக்க போகிறது என்ற கணக்கு அனுமானமாக போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை தெற்கு முக்கியத்துவம் பெற்று வருகிறது.

கோவை தொகுதியை பொறுத்தவரை, மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை என 10 தொகுதிகள் உள்ளன..

இந்த தொகுதிகள்ல் 15 லட்சத்து 19 ஆயிரத்து 27 ஆண்கள், 15 லட்சத்து 62 ஆயிரத்து 573 பெண்கள், 428 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 பேர் வாக்களிக்க தயாரானவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 வால்பாறை

வால்பாறை

மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக கவுண்டம்பாளையம் அதாவது 4,65 லட்சமும், குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக வால்பாறையும் அதாவது 2.05 லட்சமும் உள்ளன.. ஆனால், இந்த முறை நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 68.32 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது.. கடந்த 2016-ல் 68.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் தற்போது சுமார் 0.19 சதவீத வாக்குகள் மட்டுமே அதிகரித்துள்ளதாம்.

கூட்டணி

கூட்டணி

இதில் குறிப்பிட்டு பேசப்படுவது கோவை தெற்கு தொகுதியாகும்.. இந்த தொகுதி ஸ்டார் அந்தஸ்தை பெற்றுள்ள நிலையில், தினமும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வந்த தொகுதியாகும்... திமுகவும், அதிமுகவும் நேரடியாக இங்கு போட்டியிடவிலலை.. மாறாக கூட்டணி கட்சிகளை களம் இறக்கியது..

 கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலத்தில் பெரும் செல்வாக்கு பெற்றுள்ளதால், அதிமுகவே களம் கண்டிருக்கலாமே, எதற்காக கூட்டணிக்கு தர வேண்டும் என்ற முணுமுணுப்பும் எழுந்தது. அதேபோல, 2, முறை ஏற்கனவே வெற்றி வாய்ப்பை இழந்த அதே காங்கிரஸ் வேட்பாளருக்கு எதற்காக இந்த தொகுதியை ஒதுக்க வேண்டும், இதுக்கு திமுகவே நேரடியாக போட்டியிட்டிருக்கலாமே என்ற பேச்சும் எழுந்தது.

வானதி

வானதி

இதற்கு நடுவில்தான் கமலும், வானதி சீனிவாசனும் விடாமல் தொகுதியை வலம்வந்து, இறுதிநாள் வரை டஃப் தந்தனர்.. இந்த அளவுக்கு இருவரும் பிரச்சாரம் செய்த கோவை தெற்கு தொகுதியில், 60.72 சதவீத வாக்குகளே பதிவாகி இருக்கிறதாம்.. 2016 தேர்தலைவிட 1.1 சதவீதம் குறைவான வாக்குகளே பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.. இந்த ஓட்டுக்கள் யாருக்கு சாதகமாக அமைய போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்து வருகிறது.

கமல்

கமல்

இந்த தெற்கு தொகுதியில் இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதியில் வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது.. இதுதான் திமுக தரப்பை டென்ஷன் ஆக்கி உள்ளதாம்.. இந்த வாக்குகள் பெரும்பாலும் கமலுக்கு டிரான்ஸ்பர் ஆனதாகவும் சொல்லப்படுகிறது.. முதல்முறையாக கமல் போட்டியிட்டதால், ஒருவித எதிர்பார்ப்புகளை முன்வைத்தே இந்த வாக்குகள் மய்யத்துக்கு சென்றிருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது.

Recommended Video

    அனல் பறந்த தேர்தல் களம்.. தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய நிகழ்வுகள்
     அதிமுக

    அதிமுக

    அதனால், கோவை தெற்கு தொகுதியில் அதிமுகவைவிட, கமல்மீதே திமுகவுக்கு சற்று டென்ஷனும் கலக்கமும் உள்ளதாக தெரிகிறது.. அதேசமயம், கோவையின் பிற பகுதிகளில் அதிமுகவுக்கு செல்லவிருந்த ஓட்டுக்கள், இந்த முறை திமுகவுக்கு பெருமளவில் டிரான்ஸ்பர் ஆகி உள்ளதாக தகவல்கள் கசிந்து வருவது, திமுகவை உற்சாகத்தில் வைத்து வருவதாகவும் சொல்லப்பட்டு வருகின்றன..!

    English summary
    DMK: In Coimbatore, only 68.32 percent of the vote was cast
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X