கூட்டணி கட்சிகளுக்கு ஜெர்க்.. 21 மேயர் பதவிகளையும் மொத்தமாக அள்ளும் திமுக?
சென்னை: 21 மேயர் பதவியில் கூட்டணி கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கொடுக்காமல் திமுகவே மொத்தமாக அள்ளி செல்கிறது. இதனால் கூட்டணி கட்சிகள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றன.
நகர்ப்புற தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 22 ஆம் தேதி நடந்தது. இதில் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி கட்சியே வென்றது.
இந்த தேர்தலில் வென்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர். நாளை மறுதினம் அதாவது 4- ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

துணை மேயர்
மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர்கள் ஆகியோர் கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்படுகிறார்கள். காலையில்மேயர் ,நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான தேர்தலும் மாலையில் துணை மேயர், துணை நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலும் நடைபெறுகிறது.

கூட்டணி கட்சிகள்
கூட்டணி கட்சிகளை சேர்ந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமு, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தங்களுக்கு மேயர் பதவி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என கேட்கின்றன. கன்னியாகுமரி, சிவகாட்சி ஆகிய மேயர் பதவிகளை காங்கிரஸ் கட்சி கேட்டு காய் நகர்த்தி வருகிறது.

21 மேயர் பதவிகள்
இந்த நிலையில் கூட்டணி கட்சிகளிடம் திமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் 21 மேயர் பதவிகளை திமுகவே எடுத்துக் கொள்ளும் என்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க இயலாது என்றும் தெரிவித்துவிட்டதாம். வேண்டுமானால் நகராட்சி, பேரூராட்சிகளில் கூட்டணி கட்சிகளுக்கு பதவிகள் ஒதுக்க முயற்சிக்கிறோம் என திமுக தலைமை சொல்லிவிட்டது.

திமுக தலைமை
இதனால் திமுக தலைமையிடம் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் மறைமுகத் தேர்தலில் திமுக வெற்றி பெற முடியும் என்பதால் கூட்டணி கட்சிகளுக்கு மேயர் பதவிகளை ஒதுக்க திமுக மறுப்பதாக சொல்லப்படுகிறது.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்!












Click it and Unblock the Notifications