"திமுக எங்க தாய் கழகம் தானே.." ஸ்டாலின் உடனான சந்திப்பிற்கு நடுவே.. ஓபிஎஸ் ஆதரவாளர் சொன்ன வார்த்தை
சென்னை: இன்று மாலை முதல்வர் ஸ்டாலினின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று ஓபிஎஸ் சந்தித்துள்ளார். இது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஓபிஎஸ்- ஸ்டாலின் சந்திப்பு குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் சுப்புரத்தினம் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். குறிப்பாக திமுக தங்களின் தாய்க் கழகம் என அவர் சொல்லியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
இன்று காலை முதல் அரசியல் அரங்கில் ஓபிஎஸ் பல அதிரடிகளைக் காட்டி வருகிறார். இன்று காலை தான் வாங்கிங் சென்றபோது அவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். தொடர்ச்சியாக என்டிஏ கூட்டணியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். இந்தச் சூழலில் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கே நேரடியாகச் சென்றுள்ளார் ஓபிஎஸ். இது அரசியல் அரங்கில் பேசுபொருள் ஆகியுள்ளது.

ஓபிஎஸ் தரப்பு விளக்கம்
இதற்கிடையே ஓபிஎஸ்- ஸ்டாலின் சந்திப்பு குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் சுப்புரத்தினம் புதிய தலைமுறை டிவி சேனலுக்கு விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இதை வைத்து ஓபிஎஸ் அதிரடியாக திமுகவுடன் கூட்டணி அமைத்துவிட்டார் என்று சொல்கிறீர்கள். இன்று காலை எங்கள் கூட்டத்தில் பேசும்போதே ஓபிஎஸ் விளக்கமளித்துவிட்டார்.
இன்று வாங்கிங் செல்லும்போது முதல்வரைச் சந்திக்க நேர்ந்ததாகவும் அவரிடம் உடல்நிலை குறித்து விசாரித்ததாகவும் ஓபிஎஸ் சொன்னார். அங்குச் சந்திக்கவில்லை என்றாலும் வீட்டிற்கே போய் உடல்நிலை குறித்து விசாரிப்பதாகவே இருந்ததாக ஓபிஎஸ் சொன்னார். அந்த வகையில் தான் இந்த சந்திப்பு நடந்தது.
காரணம் இதுதான்
ஓபிஎஸ் தாயார் இறந்த சமயத்தில், உடனடியாக அவரை தொடர்பு கொண்டு ஸ்டாலின் அனுதாபம் தெரிவித்தார். மேலும், மூத்த அமைச்சர் ஐ பெரியசாமி உட்பட திமுக தலைவர்களை நேரில் அனுப்பி அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு ஓபிஎஸ் சென்னை வந்த பிறகும் நேரில் வீட்டிற்கே வந்து ஸ்டாலின் தாயார் இறப்பு குறித்து விசாரித்திருந்தார். அந்த அரசியல் பண்பாடு மெய் சிலிர்க்க வைத்தது.
இதன் காரணமாகவே அவரது மூத்த அண்ணன் மு.க. முத்துவின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கே சென்று அனுதாபம் தெரிவிக்கப் போவதாக ஓபிஎஸ் கூறினார். மேலும், விருப்பப்பட்டவர்கள் என்னுடன் வரலாம் என்றும் சொன்னார். அதாவது முதல்வர் உடல்நிலை குறித்து விசாரிக்கவும், மு. க. முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவும் மட்டுமே முதல்வர் வீட்டிற்கு ஓபிஎஸ் சென்றுள்ளார்.
திமுக தாய்க் கழகம்
அரசியல் ரீதியாக ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். தொடர்ச்சியாக ஓபிஎஸை வஞ்சித்தும் அவமானப்படுத்தியும் வந்த என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறோம். கூட்டணியைச் சூழலுக்கு ஏற்ப பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருந்தார். அதன்படி கூட்டணிக்கு நாங்கள் எல்லா ஆப்ஷன்கள் குறித்தும் ஆலோசித்தே முடிவு செய்வோம். எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சரியான கூட்டணியை ஓபிஎஸ் அமைப்பார். எங்கள் தாய்க் கழகமான திமுகவுடன் அமைத்தாலும் எங்களுக்குச் சந்தோசம் தான்.
அதேநேரம் இன்று மரியாதை நிமித்தமாகவே ஸ்டாலினை சந்தித்துள்ளார். கூட்டணிக்கு ஆப்ஷன்கள் இருக்கிறது. ஆலோசித்தே முடிவு செய்வோம். இத்தனை காலம் குறுகிய கண்ணோட்டத்தில் தான் எங்களைப் பார்த்தார்கள். இன்று தான் நாங்கள் சுதந்திர காற்றைச் சுவாசிக்கிறோம். பல கட்சிகள், ஒரே கருத்து கொண்ட பல கட்சிகள், எங்களை நோக்கி வருவார்கள். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
முதல் நோக்கம்
எங்களுக்குத் துரோகம் செய்தவர்கள், பயன்படுத்திக் கொண்டவர்கள், முதுகில் குத்தியவர்களுக்குப் பாடம் புகட்டுவதே எங்கள் முதல் நோக்கமாக இருக்கும். திமுக ஒன்றும் தீண்டத்தாக கட்சி இல்லை. ஜெயலலிதா, எம்ஜிஆர் இருந்த காலம் இல்லை. மாறிவிட்டது. இரட்டை இலை சின்னம் தொடர்ச்சியாக 11 முறை தோல்வி அடைந்துள்ளது. எனவே, ஓபிஎஸ் தனது பலத்தை நிரூபித்து நிச்சயம் கட்சியை மீட்பார்" என்றார்.
-
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications