நல்ல செய்தி இல்லை.. செந்தில் பாலாஜி தரப்பிற்கு ஷாக்.. 31வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு
சென்னை: சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைய இருந்தது. இதற்கிடையே அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரது நீதிமன்ற காவலை வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் முன்பு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது இவர் போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாங்கித் தர லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
செந்தில் பாலாஜி: முதலில் கடந்தாண்டு மே மாதம் இவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அதிகாரிகளே தாக்கப்பட்டது தொடங்கிப் பல களேபரங்கள் நடைபெற்றன. இதையடுத்து அடுத்த மாதமே, அதாவது ஜூன் மாதமே அமலாக்கத் துறை அதிகாரிகள் இவருக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.
அன்றி இரவே சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இருப்பினும் அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டவே அவர் மருத்துவமனையிலும் அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு இதய ஆப்ரேஷன் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து அவர் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் கிடைக்கவில்லை: அவரது வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவர் சுமார் 9 மாதங்களாகச் சிறையிலேயே இருந்து வருகிறார். இடையில் அவர் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்த போதிலும் அதில் அவருக்குச் சாதகமான உத்தரவு கிடைக்கவில்லை.
செந்தில் பாலாஜி சிறையில் இருந்தாலும் அவர் பல மாதங்கள் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்ந்தார். இது தொடர்பாக நீதிமன்றம் சில கருத்துகளைக் கூறியிருந்த நிலையில், இதையடுத்து கடந்த மாதம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மீண்டும் அவர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்த நிலையில், அவரது ஜாமீன் மனு குறித்துப் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
நீதிமன்ற காவல்: இது ஒரு பக்கம் இருக்க அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைய இருந்தது. புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், இன்று சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தர்.. அவரது நீதிமன்ற காவலை 31ஆவது முறையாக நீட்டித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது நீதிமன்ற காவலை ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஒன் இந்தியா தளத்தில் இது தொடர்பாக வெளியாகியுள்ள பிற செய்திகள்
சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது குறித்து பதிலளிக்க அமலாக்க துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. அதேநேரம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை விடுத்த நிலையில், அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.
சமீபத்தில் ஈரோட்டில் திமுக பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜி குறித்து பேசினார். அதாவது செந்தில் பாலாஜி சிறையில் இருந்தாலும் அவரது செயல்வீரர்கள் களத்தில் வேகமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். முதல்வர் ஸ்டாலின் எதற்காக செந்தில் பாலாஜி குறித்து பேச சில காரணங்கள் இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications